தலாய் லாமாவை மைக்ரோசாப்ட் அதிபர் பில் கேட்சோடு ஒப்பிட முடியாது தான்.ஆனால் இருவருமே உலக அளவில் புகழ் பெற்றவர்கள்.
இவர்களில் யார் அதிக புகழ் பெற்றவர் என்னும் கேள்வி எந்த அளவுக்கு பொருத்தமானது என்று தெரியவில்லை.அவசியமற்றது என்று கூட சிலர் நினைக்கலாம்.
ஆனால் டிவிட்டர்வெளியில் இருவரில் யார் பிரபலமானவர் என்னும் கேள்வி கொஞ்சம் சுவாரஸ்யமானது.டிவிட்டரின் செல்வாக்கு மற்றும் டிவிட்டரில் செல்வாக்கு பெரும் விதத்தை புரிந்து கொள்ள உதவக்கூடியது.
திபெத்தியர்களின் புத்த மத தலைவரான தலாய் லாமா பில் கேட்ஸ் போல தொழில்நுட்ப விஷயங்களில் நிபுணத்துவம் மிக்கவர் அல்ல.ஆனால் தனது மக்களுக்காக அவர்களின் தன்னாட்சி உரிமைக்காக ஒயாமல் போராடி வருபவர். திபெத் பிரச்சனைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அவர் இடைவிடாமல் சுற்றுப்பயணத்திலும் இருக்கிறார்.
இப்படி சமீபத்தில் அவர் அமெரிக்க சென்றிருந்த போது குறும்பதிவு சேவையான டிவிட்டர் இணை நிறுவனரை(பிஸ் ஸ்டோன்) சந்தித்திருக்கிறார்.
அப்போது பிஸ் ஸ்டோன் அவரிடம் டிவிட்டர் சேவையை பயன்படுத்தலாமே என யோசனை கூறியிருக்கிறார்.ஸ்டோனுக்கு ஒரு புன்னகையையே லாமா பதில் அளித்திருக்கிறார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே டிவிட்டரில் தலாய் லாமாவுக்காக அதிகார பூர்வ பக்கம் துவக்கப்பட்டு விட்டது.
ஏற்கனவே தலாய் லாமா பெயரில் போலி பக்கம் செயல்பட்டு வந்த நிலையில் இந்த கணக்கு சரி பார்க்கப்பட்டு தலாய் லாமாவுக்கு உரித்தானது என்று சான்றிதழும் வழங்கப்பட்டிருந்தது. ஒரு சராசரி நபர் டிவிட்டரை பயனப்டுத்துவதற்கும் தலாய லாமா போன்ற பிரபல தலைவர் பயன்படுத்துவதற்கும் வேறுபாடு இருக்கிறது.
அது தான டிவிட்டர்வெளியில் உண்டாகும் ஆர்வம். பிரபலங்கள் டிவிட்டரை பயன்படுத்துகின்றனர் என்றதுமே ஒருவித எதிர்பார்ப்பு ஏற்படுவதோடு பலருக்கும் அந்த பக்கத்தை பின்தொடர வேண்டும் என்று தோன்றும்.எனவே உடனடியாக பின்தொடர்பாளர்கள் குவியத்துவங்கி விடுவார்கள்.
தலாய் லாமா டிவிட்டர் பக்கத்தை பொருத்தவரை முதல் நாளன்று 89000 பின்தொடர்பாளர்கள் கிடைத்தனர். சராசரி டிவிட்டர் உறுப்பினர்கள் சில நூறு பார்வையாளர்களை பெறவே நொன்டிக்கொண்டிருக்கும் நிலையில் லாமாவுக்கு முதல் நாள் அன்றே அதிக பார்வையாளர்கள் கிடைத்தது பெரிய விஷயம் தான்.
ஆனால் சராசரி டிவிட்டர் பயனாளியை நட்சத்திர பயனாளியோடு ஒப்பிடுவது சரியாக இருக்காது. வேண்டுமானால் மற்றொரு நடசத்திர டிவிட்டர் பயனாளியோடு ஒப்பிடலாம். இந்த இடத்தில் தான் பிள்கேட்ஸ் வருகிறார். சமீபத்தில் தான் மைக்ரோசாப்ட் அதிபரும் டிவிட்டரில் நுழைந்துள்ளார்.கேட்ஸ் டிவிட்டரை பயன்படுத்த துவங்கிய போது பெரும் பரபரப்பு ஏற்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.
முதல் சில மணி நேரத்திலேயே கேட்ஸ் பின்தொடர்பவர்களையும் அள்ளிக்குவித்து விட்டார் கேட்சுக்கு அடுத்தபடியாக இப்போது லாமா தான் பரபரப்பை ஏர்படுத்தியுள்ளார்.
எனவே இருவரது டிவிட்டர் செல்வாக்கையும் ஒப்பிட்டு பார்க்கலாம். முதல் பார்வைக்கு இந்த ஒப்பிடே பொருத்தமற்றதாக தோன்றலாம். காரணம் கேட்ஸ் இணைய உலகில் நன்கறிந்தவர்.சாப்ட்வேர் மகராஜாவான அவரது கருத்துக்களை அறிய இணையவாசிகளுக்கு ஆர்வம் இருப்பது இயல்பானது தான்.
ஆக கேட்சுக்கு டிவிட்டரில் பின்தொடர்பாளர்கள் அதிகம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இல்லை. எண்னிக்கை இதனை உறுதிபடுத்துகிறது.முதல் நாளன்று கேட்சுக்கு 26100 பின்தொடர்பாளர்கள் கிடைத்து விட்டனர். லாமாவுக்கு கிடைத்த ஆதரவை விட இது பன்மடங்கு அதிகம்.
ஆனால் இதன் பிறகு தான சுவாரஸ்யம் இருக்கிறது.லாமாவுக்கு முதல் நாள் கிடைத்த பின்தொடர்பவர்கள் குரைவு என்றாலும் அதன் பிறகு அவருக்கு நாள்தோறும் 12000 பின்தொடர்பவர்கள் கிடைத்து வருகின்றனர். கேட்சுக்கு இந்த எண்ணிக்கை 5000 தான்.மேலும் கேட்சுக்கு கிடைக்கும் பின்தொடர்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.
அப்படிப்பார்த்தால் காலப்போக்கில் தலாய் லாமா கேட்சை முந்திவிடக்கூடும்.அல்லது கடும் போட்டி நிலவக்கூடும். ஆனால் தலாய் லாமா முன்நிறுத்தும் போராட்டத்திகு கிடைத்த ஆதரவாக் இதனை கொள்ளலாமா?என்பது முக்கியமான கேள்வி.
லாமா சொலவதை தெரிந்து கொள்ள டிவிட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பது திபெத் பிரச்சனைக்கான கொள்ளலாமா? லாமா டிவிட்டர் செய்தி மூலம் தனது பிரச்சரத்தை தீவிரமாக்குவார் என்று எதிரபார்க்கலாமா?
இந்த பின்னணியில் இன்னொரு சுவாரஸ்யமான தகவலும் உள்ளது.அது சீன அதிபரும் திபெத் விஷயத்தில் தலாய் லாமாவை எதிரியாக கருதுபவருமான ஹூ டிவிட்டாரில் அடியெடுத்து வைத்திருப்பது தான்.

0 Comments on “பில்கேட்ஸ்,தலாய் லாமா;யாருக்கு புகழ் அதிகம்”
kanna
மிகச்சிற்ந்த சேவை தங்கள் வலை. வாழ்த்துக்கள்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை http://www.tamildaily.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த http://www.tamildaily.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
உங்கள் நண்பர்களுக்கும் இத் தளத்தை அறிமுகம் செய்து வையுங்களேன்…
ramalingamn
very interesting