ஹைத்தி பூகம்பம் உண்டாக்கிய பாதிப்பும் வடுக்களும் இன்னும் ஆறியபாடில்லை.அதற்குள் தென்னமெரிக்க நாடான சிலி பயங்கர பூகம்பத்தின் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கிறது.
ரிக்டர் அளவில் 8.8 ஆக பதிவான இந்த பூகம்பம் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.பூகம்பத்தின் கோரத்தான்டவத்தால் நிலை குலைந்து போயிருக்கும் சிலியில் இப்போது சோகமும் குழப்பமும் தான்.
புயல் மழை சூறாவளி ,பூகம்பம் போன்ற பேரழிவு ஏற்படும் இடங்களில் மீட்பு பணியிலும் நிவாரணப்பணியிலும் ஓடோடி வந்து உதவ பல சர்வதேச அமைப்புகள் இருக்கின்றன.
எல்லோருக்கும் தெரிந்த செஞ்சிலுவை சங்கம் துவங்கி பலரும் அறியாத டாக்டர்ஸ் வித அவுட் பார்டர் ,டெலிகாம் வித் அவுட் பார்டர் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிக்கு வந்து இயன்றவரை உயிர்ச்சேதத்தை குறைக்கவும் ,அதன் பிறகு நிவாரணப்பணிகள் மூலம் மறுவாழ்வுக்கு வழி காட்டவும் முற்படுகின்றன.
இண்டெர்நெட் பிரபலமான பிறகு மீட்பு பணிகளை ஒருங்கிணைப்பது,மற்றும் நிவாரண பணிகளை மேம்படுத்துவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றி வருகிறது.இதற்கு முன்னர் சாத்தியமாகாத பல கதவுகளையும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொழில்நுட்பம் திறந்து விட்டிருக்கிறது.
இதற்கு உதாரணமாக கூகுல் நீட்டியுள்ள நேசக்கரத்தை சுட்டிக்காட்டலாம்.கூகுலின் இந்த நேசக்கரம் எளிமையான சேவை தான். ஆனால் பேரிடர் தாக்கிய பகுதியில் உயிர் காக்கும் சேவையாக அமையக்கூடியது.அதாவது காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை தேட உதவும் சேவை.
பேரிடர் தாக்கியதுமே என்ன நிலை இருக்கும். பலியானவர்களின் சோகம் ஒரு புறம் இருக்க தப்பி பிழைத்தவர்கல் மத்தியில் தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு என்ன ஆயிற்றோ என்ற அச்சமும் பரிதவிப்பும் இருக்கும் அல்லவா?உள்ளத்தை உலுக்கும் கொடுமையான நிலை இது.
பூகம்ப பாதிப்பால் தகவல் தொடர்பு சாதனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் என்பதால் போனில் தொடர்பு கொள்வதோ மற்ற வழிகளில் விவரங்களை சேகரிப்பதோ எளிதல்ல. இந்த வேதனை பாதிக்கப்பட்ட பகுதியில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல.பிழைப்புக்காக வெளிநாடுகளில் சென்று வசிப்பவர்கள் தங்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்களின் நிலையை அறிந்து கொள்ள துடிப்பார்கள்.
உறவினர்களிடம் இருந்து தகவல் வாராத நிலையில் அவர்களுக்கு என்ன கதி ஆயிற்றோ என்று பதைபதைப்பார்கள். இது போன்ற நெருக்கடிகளில் பாதிக்கப்பட்டவர் பற்றி தகவல் தர பிரத்யேக தோலைபேசி சேவை அமைக்கபடுவதுண்டு.ஆனால் பூகம்ப காலங்களில் இவற்றின் போதாமை புரிந்து கொள்ளக்கூடியதே.
முதலில் இந்த சேவையை அமைக்க அரசு அமைப்பு பாதிப்பில் இருந்து மீளவேண்டும் . பாதிக்கபப்ட்டவர்கள் ஆயிரக்கணக்கில் ஆலது லட்சக்கணக்கில் இருக்கு போது உதவி நாடுபவர்களின் எண்ணிகையை சமாளிக்க இவை போதுமானதாக இருக்க வாய்ப்பில்லை.
இந்த இடத்தில் தான் கூகுலின் சேவை வருகிறது.பூகம்பத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக கூகுல் இணையதளம் ஒன்றை அமைத்துள்ளது.
அடிப்படையில் தேடல் சேவை தான் இது. சிலி பெர்சன் பைன்டர் என்பது இந்த தளத்தின் பெயர்.இதில் இரண்டே கட்டங்கள் தான் பிரதான்மாக இருக்கும்.
முதல் கட்டம் காணமல் போனவரை தேடுவதற்காக.அதற்கான கட்டத்தில் யாரை பற்றிய விவரம் தேவையோ அவரது பெயரை குறிப்பிட்டு தேட வேண்டும்.
அதே போல அருகே உள்ள காட்டத்தில் உயிர் பிழைத்தவர் பற்றிய தகவல் தெரிந்திருந்தால் அதனை பகிர்ந்து கொள்ளலாம். பல்வேறு வழிகளில் திரட்டப்படும் உயிர் பிழைத்தவர் பட்டியலில் இருந்து தேடுபவர் பெயர் இருக்கிறதா எனபதை கண்டறிந்து நிம்மதி பெருமூச்சு விடலாம்.
தேடப்படுபவர் பற்றிய விவரம் யாருக்கேனும் தெரிந்திருந்தால் அதனை பகிர்ந்து கொள்ளலாம். சொந்த பந்தங்களின் நிலை தெரியாமல் பரிதவிப்பவர்களுக்கு இந்த சேவை எததனை உதவியாக் இருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.
ஹைத்தி பூகமபத்தின் போதும் கூகுல் இதே போன்ற தேடல் சேவையை உணடாக்கியது. இப்போது சிலை பூகம்பத்திற்காக உருவாக்க்பட்டுள்ளது.
நிவாரணப்பணிகளை ஒருங்கிணைக்கவும் கூகுல் உதவி வருகிறது.வேறு பல முன்னுதாரண முயற்சிகளுக்கும் குறைவில்லை.
————–

0 Comments on “சிலி பூகம்பமும் கூகுலின் நேசக்கரமும்”
sasikumar
பயனுள்ள பதிவு உங்கள் புகழ் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
winmani
சேவையில் கூகுளுக்கு நிகர் கூகுள் தான், சிறந்த தகவல்
நன்றி நண்பரே..