வந்தால் மட்டும் போதுமா? மெரும்பாலான இணையதள உரிமையாளர்கள் மனதில் உள்ள கேள்வி தான் இது. பல பெரிய இணைய நிறுவனங்கள் இந்த கேள்விக்கு பதில் காண முயன்று வருகின்றன.சிறிய தளங்கள் இப்போது தான் இந்த கேள்வியின் முக்கியத்துவத்தை உணரத்துவங்கியுள்ளன.
அதாவது இணையவாசிகள் இணையதளத்திற்கு விஜயம் செய்தால் மாடும் போதுமா? ஒரு விருந்தாளியைப்போல அவர்கள் கொஞ்ச நேரம் தங்கியிருந்து மன் நிறைவோடு செல்ல வேண்டும் என்று செய்தி தளங்கள் போன்றவை எதிர்பார்க்கின்றன.அது மட்டும் அல்லாமல் அந்த நிறைவு தரும் உணர்வில் அவர்கள் மீண்டும் வருகை தர வேண்டும் என்று எதிரபார்க்கின்றன.
மாறாக வழிப்போக்கர்களை போல இணையவாசிகளும் வந்தோம் சென்றோம் என பிடிப்பில்லாமல் இருந்தால் இணைய விசுவாசிகளை உருவாக்க முடியாது அல்லவா?
எந்த ஒரு இணையதளமும் பத்தோடு பதினென்னு என்று இல்லாமல் தனக்கான தனித்துவத்தை பெற இந்த விசுவாசம் அவசியம்.
இணைய வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் இ காமர்ஸ் தளங்களைப்பொருத்த வரை இந்த கேள்வி வேறு வகையான முக்கியத்துவத்தை பெறுகிறது. இணையவாசிகள் வந்தார்கள் சென்றார்கள் என்று இருந்தால் போதுமா? வந்தவர்கள் பொருட்களை வாங்க வேண்டாமா? மீண்டும் வாங்க வர வேண்டாமா?
நிஜ உலகில் உள்ள கடைகள் என்றால் வாடிக்கையாளர்களை வாங்க வாங்க என வாயாற வரவேற்று அவர்கள் தேவையை கேட்டு வேண்டியதை எடுத்துக்கொடுத்து பொருட்களை வாங்கச்செய்து விடலாம்.போகும் போது ஐயா திரும்ப வாங்க என்று சொல்லியும் அனுப்பலாம்.
ஆனால் ஆன்லைனில் இது எப்படி சாத்தியம்.இணையவாசி வருகை தரும் போது அவரது தேவையை புரிந்து கொள்வது எப்படி சாத்தியம்.அவர் தனக்கு தேவையான பொருளை வாங்கச்செய்வது எப்படி?
இணையதளத்தள வடிவமைப்பு விளம்பரம் போன்றவை மூலம் பலரை இணையதளத்தின் பக்கம் வர வைத்து விடலாம். தேடியந்திரத்தில் முதன்மை பெறுவது மூலம் இணையவாசிகளின் எண்ணிக்கையை பன்மடங்கு பெருக்கி கொள்ளலாம்.
ஆனால் வருபவர்களை எல்லாம் வாடிக்கையாளராக மாற்ற முடியுமா?அதற்கு என்ன் செய்ய வேண்டும்?
மிகப்பெரிய கேள்வி இது?
இகாமர்ஸ் தளத்தின் பின்னே இருக்கும் உரிமையாளர் அல்லது நிறுவனம் தனது தளத்திற்கு வருகை தரும் இணையவாசிகளை எப்படி பார்க்க முடியும்?எப்படி அவர்களோடு உரையாடுவது சாத்தியம்?
இவற்றுக்கெல்லாம் பதில் செல்லும் சேவை தான் டாக்2அஸ்.
இந்த சேவை இகாமர்ஸ் தளங்கள் வாடிக்கையாளர்களோடு உரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.அதாவது இணைய அரட்டை வசதி இருக்கிறது அல்லவா, அதே போன்ற அரட்டை வசதியை இந்த சேவை அமைத்து தருகிறது.
இந்த வசதியை தளத்தில் ஒருங்கிணைத்து கொண்டு விட்டால் அதன் பிறகு தளத்திற்கு வரும் இணையவாசியை அரட்டை மூலம் வரவேற்று உரையாடலாம். அப்படியே அவரது எண்ணம் மற்றும் தேவையை புரிந்து கொண்டு அதனை நிறைவேற்றி வைக்கலாம்.
தளத்திற்கு வரும் இணையவாசி வெற்றாக உலாவி விட்டு வெறுங்கையோடு திரும்பி செல்லு நிலை ஏற்படாமல் வருபவரை வரவேற்று பேசி தேவையானதை வாங்கச்செய்வது நல்ல விஷயம் தானே.
இணையதள உரிமையாளருக்கு மட்டும் அல்லாமல் இணையவாசிக்கும் இது நலன் பயக்கும்.அவர் ஏன் வீணாக ஒரு தளத்தில் நேரத்தைச் செலவிட வேண்டும்.ஆனால் தளத்தில் சென்றதுமே உரிமையாளரோடு பேசுவதன் மூலம் தனக்கு தேவையானதை பெற முடியும் அல்லவா?அதோடு இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருப்பதை விட இப்படி தொடர்பு கொள்ள முடிவது ஒரு உயிரோட்டத்தை ஏற்படுத்துமே.
இத்தகைய சேவையை தான் டாக்2அஸ் வழங்கி வருகிறது. இந்த சேவையின் மூலம் இகாமர்ஸ் தளங்கள் இணையவாசிகளை வாடிக்கையாளர்களாக மாற்றி கொள்ளலாம் என்பதோடு அவர்கள் எதிர்பார்ப்பை புரிந்து கொண்டு தங்கள் சேவையையும் மேம்படுத்துக்கொள்ளலாம்.
————-

0 Comments on “வாருங்கள்: உரையாடுங்கள் ;அழைக்கும் இணையதளம்”
Pingback: வாருங்கள்: உரையாடுங்கள் ;அழைக்கும் இணையதளம் « தமிழ் இணைய நண்பன்
Arumugam
ungaludaiya anaithu uraigalum miga arumai.
Arumugam
All your essays are very excellent.
இவண்
வலைஉலகில் புதியதொரு முயற்சி.
நன்றி,
இவண்.
விமலன்
நன்றி