மை ஸ்பேசை மறந்து விடுங்கள். இப்போது மை ஸ்பேசுக்கு நிகராக தனக்கென்று ஒரு வலைப்பின்னல் தளத்தை பாடகி ஒருவர் அமைத்திருப்பது பற்றித்தான் இன்டெர்நெட் உலகில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினோ கெய்லி கனெக்ட் டாட் காம் எனும் பெயரில் புதிய இணையதளத்தை அமைத்திருக்கிறார். |
|
. | |
இந்த தளத்தின் மூலம் அவர் தன்னுடைய ரசிகர்களோடு முன்னை விட நெருக்கமான முறையில் தொடர்பு கொள்ள திட்டமிட்டிருக்கிறார். பாப் உலகில் எத்தனையோ இளவரசிகள் மற்றும் அரசிகள் உண்டு.அவர்களில் ஒருவரான கெய்லி மினோ, தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர். இசைக்காக அவரை நேசிக்கும் ரசிகர்களோடு, அவருடைய மன உறுதிக்காக நேசிப்பவர்களும் அதிகமாகி இருக்கின்றனர்.
40 வயதை தொட இருக்கும் அவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அந்த நோயோடு போராடி மீண்டு வந்திருக்கிறார். புற்றுநோயிலிருந்து மீண்ட அவர் மீண்டும் மேடையேற தொடங்கி இருக்கிறார். தனக்கு வந்த சோதனையை மிகுந்த உமீண்டும் இசை வானில் மின்ன தொடங்கியிருக்கும் அவர், விரைவில் புதிய பாடல் ஆல்பம் ஒன்றை வெளியிட இருக்கிறார். ஒற்றை பாடலோடு வெளியாக இருக்கும் இந்த ஆல்பம் பற்றி இசையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், இன்டெர்நெட் உலகில் அவர் அடியெடுத்து வைத்திருக்கிறார். கெய்லி மினோ பெயரில் ஏற்கனவே இணையதளம் இருக்கிறது. அவரது அபிமானிகளும் பல இணையதளத்தை அமைத்திருக்கின்றனர். ஆனால் இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் கெய்லி மினோ தனக்கென ஒரு வலைப்பின்னல் தளத்தை அமைத்திருக்கிறார். மை ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் புக் போன்ற இணையதளங்கள் வலைப் பின்னல் முறையில் நண்பர்களை தேடிக் கொள்ள உதவி செய்து இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளன. மை ஸ்பேசின் வெற்றி வலைப் பின்னல் கருத்தாக்கத்திற்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. இதனால் வலைப்பின்னல் கருத்தாக்கம் மிகவும் பிரபலமாகி இருக்கிறது. இந்நிலையில், கெய்லி மினோ மை ஸ்பேஸ் பக்கம் போகாமல் சொந்த வலைப் பின்னலை உருவாக்கி கொள்ள திட்டமிட்டிருக்கிறார். இதற்காக இந்த நோக்கத்தோடு அவர் அமைத்திருக்கும் தளம்தான் கெய்லி கனெக்ட் டாட் காம். இந்த தளம் வரும் நாட்களில் முழு வீச்சோடு அறிமுகமாக உள்ளது. தன்னுடைய ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்வதற்கான வழியாக இந்த தளத்தை கெய்லி கருதுவதாக கூறப்படுகிறது. வலைப்பின்னல் தளத்திற்குரிய அனைத்து அம்சங்களுடனும் அதே நேரத்தில் எளிமையான தோற்றத்தோடும் இந்த தளம் அமைந்துள்ளது. இசை நிகழ்ச்சிகள் மற்றும் புதிய பாடல் வெளியீடு பற்றி இந்த தளத்தின் மூலம் கெய்லி மினோ தனது ரசிகர்களோடு உடனுக்குடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறார். மேலும் ரசிகர்களும் கெய்லி மினோ படங்களை இந்த தளத்தில் இடம் பெற வைக்கலாம். அவற்றை தங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம். உதாரணத்திற்கு கெய்லியின் இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கும் போதே அந்த காட்சியை கிளிக் செய்து செல்போன் மூலம் அதனை நண்பர்களுக்கு அனுப்பி வைக்கலாம்.றுதியோடு அவர் எதிர்கொண்ட விதம் அவர் மீதான மதிப்பை அதிகரிக்க வைத்துள்ளது. தன்னை சுற்றியுள்ள வர்த்தக நடவடிக்கைகளை தானே கட்டுப்படுத்தும் முயற்சியாகவும் இதனை அவர் கருதுவதாக கூறப்படுகிறது. இந்த திட்டம் குறித்து கெய்லி மினோ மிகுந்த பெருமிதம் கொண்டிருப்பதாகவும் அவரது உதவியாளர் தெரிவிக்கிறார் |