கூகுல் வழியில் மேலும் 2 நிறுவனங்கள்

கூகுல் சீனாவில் இருந்து வெளியேறியது போல மேலும் இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் சீனாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன.

உலகின் மிகப்பெரிய டொமைன் பெயர் பதிவு சேவை நிறுவனமான கோடாடி மற்றும் இதே போன்ற  சேவையை வழங்கி வரும் நெர்வொர்க் சொல்யூஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவங்களும் சீனாவில் சேவையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளன.

கோ டாடி நிறுவனம் டொமைன் பெயர் பதிவுக்கான சீனாவின் புதிய கட்டுப்பாடுகளை இந்த முடிவுக்கான காரணமான தெரிவித்துள்ளது.இணையதளங்களூக்கான டொமைன் பெயர்களை வாங்குபவர்கள் தங்கள் புகைப்படம் மற்றும் அடையாள அட்டை விவரங்களை வழங்க வேண்டும் என்று சமீபத்தில் சீன அரசால் தெரிவிக்கப்பட்டது.

இது சீனாவின் த‌ணிக்கை முய‌ற்சியின் ஒரு அங்க‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.இணைய‌த‌ள‌ உரிமையாள‌ர்க‌ளை க‌ண்ட‌றிந்து அர‌சுக்கு விரோத‌மான‌ த‌க‌வ்ல‌க‌ளை அப்புற‌ப்ப‌டுத்த‌ இந்த‌ ந‌ட‌வ‌டிக்கை உத‌வும் என்று அஞ்ச‌ப்ப‌டுகிற‌து.

என்வே சீனாவில் டாட் சி என் முக‌வ‌ரியை ப‌திவு செய்வ‌தை நிறுத்துக்கொள்வ‌தாக‌ கோ டாடி கூறியுள்ள‌து.இது தொட‌ர்பாக‌ அந்நிறுவ‌ன‌ம் அமெரிக்க‌ நாடாளும‌ன்ற‌ குழுவிட‌ம் அறிக்கை ச‌ம‌ர்பித்துள்ள‌து.நெர்வொர்க் சொல்யூஷன்ஸ் நிறுவ‌ன‌மும் இதே போன்ற‌ முடிவை அறிவித்துள்ள‌து.

கூகுல் மேற்கொண்ட‌ ந‌ட‌வடிக்கையை அடுத்து  அமெரிக்க‌ முன்ன‌ணி நிறுவ‌ன‌ங்க‌ள் சீனாவில் இருந்து வெளியேறுவ‌தாக‌ அறிவித்துள்ள‌து இதுவே முத‌ல் முறை.சீனாவின் த‌ணைக்கை ந‌ட‌வ‌டிக்கையை இண்டெர்நெட் சுத‌ந்திர‌த்தை ப‌றிக்கும் செய‌லாக‌ அமெரிக்க‌ நிறுவ‌ங்க‌ள் க‌ருத‌வ‌த‌ன் அடையாள‌மாக‌ இத‌னை கொள்ள‌லாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

5 Comments on “கூகுல் வழியில் மேலும் 2 நிறுவனங்கள்

  1. rk.sathishkumar

    அப்படி போடு..ஆனாலும் சீனா திருந்தாது என நினைக்கிறேன்

    Reply
  2. சீன அரசு தேவையில்லாத வேலையை தனது உளுத்து போன சட்டங்களால் செய்து வருகிறது. இந்த நவீன காலத்தில் இதைப்போல கட்டுப்பாடுகள் விதிப்பது அந்த நாட்டிற்கு பின்னடைவையே தரும்.

    Reply
    1. cybersimman

      மிக்கச்சரி நண்பரே

      Reply
  3. சீனா மட்டும் ஏன் இப்படி..? தகவல் பகிர்வுக்கு நன்றி..!

    DREAMER

    Reply
  4. நீங்கள் புதிதாக டொமைன் மற்றும் வெப்ஹோஸ்டிங் பதியவும் மற்றும் பக்கத்தை புதிய டெம்ப்ளட் பதிவு செய்வது எப்படி என்ற விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 9841334433
    இணையதளம் : http://www.domain2host.in
    http://www.domain2host.info

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *