ஒருவர் தூங்கும் நேரத்தை டிவிட்டர் மூலம் அறிய முடியும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
ஸ்லீப்பிங்டைம் இணையதளம் இதை தான் செய்கிறது.
டிவிட்டரில் உறுப்பினராக இருக்கும் உங்கள் நண்பர்களின் பெயரை இந்த தளத்தில் சமர்பித்தால் அவர்கள் தூங்கும் நேரத்தை கண்டுபிடித்து சொல்லி விடுகிறது.
இதில் வியப்பு ஒன்றும் இல்லை.டிவிட்டரில் அந்த நண்பர் சுறுசுறுப்பாக இருக்கும் நேரத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அவர் தூங்கச்செல்லும் நேரத்தை இந்த தளம் கணக்கிட்டு சொல்கிறது.
தீவிர டிவிட்டர் பயனாளிகளின் காலை பொழுதுகள் டிவிட்டரிலேயே விடியலாம்.அதே போல இரவு டிவிட்டரில் குட்நைட் சொல்லி விடைபெறலாம்.இடைப்பட்ட நேரம் முழுவதும் பெரும்பாலும் டிவிட்டர் மூலம் தொடர்பிலேயே இருக்கலாம்.
ஆக அவர்களின் டிவிட்டர் பொழுதுகளை கணக்கிட்டால் தூங்கும் நேரத்தை தெரிந்து கொண்டு விடலாமே.இந்த தளமும் இதை தான் செய்கிறது.
ஆனால் டிவிட்டர் பயன்பாடு மாறுபடலாம் என்பதால் இதனை கணிப்பாக கொள்ளலாமே தவிர துல்லியமான கண்டு பிடிப்பாக கொள்வதற்கில்லை.எப்படி இருந்தாலும் இந்த சேவை சுவாரஸ்யமானது தான்.
அதிலும் இதில் பிரபலங்கள் தூங்கும் நேரத்தை கண்டறியும் பகுதி மிகவும் சுவாரஸ்யமானது.பாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்களின் தூங்கும் நேரத்தை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இதன் படி ஏ ஆர் ரஹ்மான் தூங்கும் நேரம் இரவு 2 மணி முதல் 10 மணி வரை.
நிற்க இந்த சேவை வெறும் விளையாட்டாக தோன்றலாம். ஆனால் வருங்காலத்தில் டிவிட்டர் சார்ந்து ஒருவரின் பழக்க வழக்கங்கள் அலசி ஆராயப்பட்டு அவற்றுக்கு பல விதமான பயன்பாடுகள் உருவாக்கப்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை.
——–