ஃபிளிக்கர் இணைய தளத்திற்கு சென்றால், குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் (அ) குறிப்பிட்ட இடம் சார்ந்த ஆயிரமாயிரம் படங்களை பார்க்கலாம். ஒரே தலைப்பின் கீழ் உள்ள எல்லா படங்களும் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஒவ்வொரு படத்திற்கும் கொஞ்சம் வேறுபாடாவது இருக்கும். இந்த வேறுபாடுகளை ரசிக்கலாம் என்றாலும், எத்தனை படங்களை தான் அடுத்தடுத்து பார்க்க கூடிய பொறுமை இருக்கும்?
.
நீங்கள் ஃபிளிக்கர் வாசகர் என்றால், இந்த பிரச்சனையையும், அது சார்ந்த சுவாரசியத்தையும் எதிர் கொண்டிருக்கலாம்.
சற்று முன்னர் தானே இந்த படத்தை பார்த்தோம். அந்த படத்தில் இந்த காட்சி வலது பக்கமாக இருந்ததா? இடது பக்கமாக இருந்ததா? நடுவே தெரிந்த கம்பம் எங்கே போயிற்று போன்ற குழப்பங்கள் ஏற்படலாம்.
சாமான்யர்கள், இந்த குழப்பத்தை பெரிய பிரச்சனையாக கருத வாய்ப்பில்லை. ஆனால், கம்ப்யூட்டர் துறையை சேர்ந்த நிபுணர்கள் இதையே சவாலாக எடுத்துக் கொண்டு, இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளனர். இதற்காக அவர்கள் உருவாக்கியுள்ள சாப்ட்வேர் சற்றும் எதிர்பாராத புதிய கதவுகளை திறந்து விட்டுள்ளன.
கம்ப்யூட்டர் மூலம் காட்சிகளை அலசி, ஆராயும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதோடு இதன் மூலம் விஷேச சாப்ட்வேர்களும் உருவாக்கப்பட்டுள்ளன. நம் கண்ணுக்குத் தெரியாத அநேக விஷயங்களை உணர்ந்து கொள்ளும் ஆற்றல் இத்தகைய சாப்ட்வேர்களுக்கு உண்டு.
ஒரு புகைப்படம் எந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்டது என்பதையும், சாப்ட்வேரால் உணர முடியும். அதாவது காமிராவை கையில் வைத்திருந்தவர் படம் எடுத்த போது எந்த புள்ளியில் நின்று கொண்டிருந்தார் என்று சாப்ட்வேர் சரியாக சுட்டிக்காட்டிவிடும்.
ஒரே மாதிரியான ஆனால், கொஞ்சம் வேறுபட்ட ஆயிரக்கணக்கான படங்களை இந்த சாப்ட்வேரிடம் கொடுத்தால் அதற்கு குஷியாகி விடும். ஒவ்வொரு படமும் எந்த புள்ளியில் இருந்து எடுக்கப்பட்டது என துல்லியமாக காட்டத் தொடங்கி விடும்.
அந்த கம்ப்யூட்டரின் பார்வையில் பார்த்தால் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு கோணத்திலிருந்து எடுக்கப்பட்டவை. இந்த கோணங்களை ஒப்பிட்டுப்பார்ப்பதன் மூலம், எல்லா படங்களையும் ஒன்றாக சேர்த்து தைத்து விடவும் முடியும். அப்படி சேர்க்கப்படும் படங்கள் இணைந்து அழகான முப்பரிமாண தோற்றத்தை ஏற்படுத்தி தந்து விடும்.
இதனால் புகைப்பட காட்சியை முப்பரிமாண தன்மையில் பார்க்க முடிவதோடு, அதன் நடுவே எந்த இடத்தில் கிளிக் செய்தாலும், அந்த புள்ளியின் கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்பட காட்சி கண்முன்னே விரியும். இப்படியாக படத்தை சுற்றி பார்ப்பதன் மூலம், அந்த இடத்தையே நேரில் பார்த்த உணர்வை பெற்று விடலாம்.
உதாரணமாக பழங்கால கோட்டை தொடர்பாக 10 ஆயிரம் புகைப்படங்கள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள், சாப்ட்வேர் அவற்றை எல்லாம் ஒட்டவைத்து, தைத்து, முப்பரிமாண பிம்பத்தை ஏற்படுத்தி விடும். அப்போது அந்த கோட்டையை நேரில் சுற்றிப்பார்க்கும் உணர்வை கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கிளிக் செய்வதன் மூலமே பெற்று விடலாம்.
வெவ்வேறு கோணத்திலான புகைப்பட காட்சிகளை சளைக்காமல் ஒப்பிட்டுப் பார்க்கும் சாப்ட்வேர் அவற்றில், வேறுபட்டவற்றை தவிர்த்துவிட்டு, பொருந்தக் கூடியவற்றை தேர்வு செய்து, முப்பரிமாண தோற்றத்தை உண்டாக்கி விடுகிறது.
ஒரே மாதிரியான புகைப்படங்களை வரிசைப்படுத்தி வகைப்படுத்த உதவுவதோடு அவற்றைக் கொண்டு முப்பரிமாண தோற்றத்தை உருவாக்க முடிவதே இந்த சாப்ட்வேரின் விஷேச அம்சமாக இருக்கிறது.
இந்தசாப்ட்வேரை கொண்டு, கட்டிடங்கள், அருங்காட்சியகங்கள் வரலாற்று நினைவு சின்னங்கள் ஆகியவற்றின் முப்பரிமாண தோற்றத்தை உருவாக்கி கொள்ள முடியும்.
ஏற்கனவே கூகுல் போன்ற நிறுவனங்கள் ஒரு இடத்தை அனைத்து கோணங்களில் இருந்தும் படமெடுத்து அவற்றை ஸ்கேன் செய்து பின்னர் ஒன்றிணைத்து முப்பரிமாண தோற்றத்தை உண்டாக்கி வருகின்றன.
ஆனால், இது மிகவும் செலவு மற்றும் நேரம் பிடிக்க கூடியது. இதற்கு அதிநவீன காமிராக்கள் அவசியம்.
ஆனால் ஃபிளிக்கர் தளத்தில் ஆயிரக்கணக்கில் படங்கள் கொட்டி கிடக்கும் போது, அவற்றை கொண்டே ஒவ்வொரு இடத்திற்கான முப்பரிமாண தோற்றத்தை உருவாக்கி விடலாம் என்பத சாத்தியம் தானே!
அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலையைச் சேர்ந்த ஸ்டீவ் சியட்ஸ் என்னும் காட்சியியல் பேராசிரியரும், மைக்ரோசாப்ட் நிறுவன ஆய்வாளர்கள் மற்றும் ஜெர்மனி பேராசிரியர் இணைந்து, ஃபிளிக்கர் படங்களை கொண்டு முப்பரிமாண தோற்றங்களை உருவாக்குவதில் வெற்றி பெற்றுள்ளனர். பாரீஸ் நகரின் சரித்திர கால கோட்டையை இவர்கள், முப்பரிமாண வடிவில் உயிர் பெற வைத்து வெற்றி பெற்றுள்ளனர்.
ஃபிளிக்கரில் கொட்டிக் கிடக்கும் சாமான்யர்கள் எடுத்த படங்களை கொண்டே இதனை இவர்கள் சாதித்து உள்ளனர் என்பதே குறிப்பிடத்தக்க விஷயம். அடுத்த கட்டமாக மற்ற முக்கிய கட்டிடங்களின் முப்பரிமாண வடிவத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.
எதிர்காலத்தில், முழு நகரங்களின் முப்பரிமாண தோற்றத்தையும் உருவாக்கி விட முடியும் என்றும் இந்த பேராசிரியர்கள் நம்பிக்கையோடு சொல்கின்றனர். இப்படி ஒவ்வொரு நகரமாக முழு உலகையும் புகைப்படங்களை கொண்டே முப்பரிமாணத்தில் உயிர்பெற வைத்து விடலாம்.
இப்படி முப்பரிமாண தோற்றத்தை புகைப்படங்கள் மூலம் பார்த்து ரசிப்பது ஒரு வீடியோ கேம் ஆடும் உணர்வை தருவதோடு, மேலும் பல விதங்களில் நடைமுறையில் பயன் படலாம்.
அருங்காட்சியகங்கள் வெளி நாட்டு பயணிகளை கவர்ந்திழுக்க இவற்றை பயன் படுத்தலாம். ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வீடுகளை விற்க பயன்படுத்தலாம். நகரங்கள் திட்டமிடுபவர்களுக்கும் இத்தன்மை பேருதவியாக இருக்கும். ராணுவ ரீதியாகவும் இது பயன்படலாம்.
சுருக்கமாக சொல்வதானால் ஃபிளிக்கர் புகைப்படங்களை கொண்டே உலகிற்கான காட்சி ரீதியான கலைக் களஞ்சியத்தை உருவாக்கி விடலாம். விக்கிபீடியாவில் எப்படி எந்த தலைப்பு பற்றிய தகவல்கள் இடம் பெற்றிருக்கிறதோ அதோ போல இந்த கலைக்களஞ்சியத்தில் உலகின் எல்லா பகுதி பற்றிய காட்சி ரீதியிலான தகவல்களும் இடம் பெற்றிருக்கும்.
அப்படி ஒரு களஞ்சியம் உருவாகும் போது நம்மூர் இடங்களுக்கும் போது மான தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டாமா? எனவே தான் ஃபிளிக்கருக்கு சென்று நீங்கள் எடுக்கும் உள்ளூர் படங்களை இடம் பெறச் செய்வது நல்ல விஷயமாக இருக்கும் என்று சொல்கிறோம்.