ஒரே இடத்தில் இந்தியர்களின் டிவிட்டர் பதிவுகள்

வெளியில் இந்திய‌ர்க‌ளின் செல்வாக்கு அதிக‌ரித்து வருகிற‌து தெரியுமா?அபிஷேக் ப‌ச்ச‌ன்,ஷாரூக் கான்,இப்போது சல்மான் கான்  போன்ற‌ பாலிவுட் பிர‌ப‌ல‌ங்கள் டிவிட்டரில் சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.

இந்த நட்சத்திரங்களின் டிவிட்டர் பழக்கத்தால் இந்தியாவில் டிவிட்டர் பற்றிய புரிதல் அதிகரித்திருப்பதாகவும் கடந்த 3 மாதங்களில் இந்தியர்கள் மத்தியொல் டிவிட்டர் பயன்பாடு அதிகமாகியிருப்பதாகவும் டிவிட்டர் நிர்வாகமே தெரிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன் பாலிவுட நடிகை பிரியங்கா சோப்ரா டிவிட்டர் தலைமை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.அமைச்சர் சஷி தர்ருரின் டிவிட்டர் பயன்பாடும் டிவிட்டர் நிறுவனர்களால் பாரட்டப்பட்டது.

மேலும் மேலும் பல இந்திய பிரபலங்கள் டிவிட்டரில் நுழைய உள்ளனர்.ச‌மீப‌த்தில் பிர‌பல‌ தெலுங்கு ந‌டிகர் ம‌கேஷ் பாபு டிவிட‌ரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

ஒந்த‌ பிர‌ப‌ல‌ங்க‌ள் டிவிட்ட‌ர் ப‌திவுக‌ளை சுவார‌ஸ்ய‌மான‌ வ‌ழிக‌ளிலும் ப‌ய்ன‌ப்டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.ஷாருக் கொல்க‌த்தா அணி ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ளை டிவிட்ட‌ரில் பகிர்கிறார்.ஷில்பா ஷெட்டி ராஜ‌ஸ்தான் அணி வீர‌ர் யூசுப் ப‌தான் கொடுத்த‌ ப‌ர்தாவை அணிந்து ஆஜ்மீர் தார்கா சென்று வ‌ந்த்தாக‌ டிவிட்டரில் தெரிவித்தார்.ச‌ல்மான் பிட்ன‌ஸ் குறிப்புக‌ளை வ‌ழ‌ங்கி வ‌ருகிறார்.ஐஸ்வ‌ர்யா மாமையார் ஜெயாவுக்கு டிவிட்ட‌ரில் பிற‌ந்த‌ நாள் வாழ்த்து கூறி டிவிட்ட‌ருக்கு வாருங்க‌ள் என்று அழைப்பு விடுத்தார்.

புதிய‌ த‌கவ‌ல்க‌ளை தெரிவிக்க‌ சர்ச்சைக‌ளை தெளிவுப‌டுத்த‌ பிர‌பல‌ங்கள் டிவிட்ட‌ரை ப‌ய‌ன்ப‌டுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.

ச‌மீப‌த்தில் கூட‌ ஐபிஎல் மோத‌லில் மோடி ம‌ற்றும் தரூர் டிவிட்டரில் தான் மோதிக்கொண்டனர்.

பிரபலங்கள் மட்டுமல்ல டிவிட்டரை அழகாக பயன்படுத்தும் சாமன்யர்களும் இருக்கின்ற‌னர்.இவர்களில் டிவிடர் நட்சத்திரங்களும் உருவாகலாம்.

எனவே இந்தியர்களின் டிவிட்டர்பதிவுகளை பின்தொடர்ந்தால் பல  தகவல்களையும் சுவாரஸ்யமான விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் எந்த எந்த இந்தியர்கள் டிவிட்டரில் இருக்கின்றனர் என்று தெரியா விட்டால் என்ன செய்வது? அதோடு இந்தியர்களின் டிவிட்டர் பதிவுகளை ஒரே இடத்தில் படிக்க முடிந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

மிகச்சரியாக இதை தான் இண்டியாடிவீட்ஸ் செய்கிறது. இந்த தளம் இந்தியா தொடர்பான‌ மற்றும் இந்தியர்களின் டிவிடர் பதிவுகளை திரட்டி தருகிறது. 

அதிலும் மிக‌ எளிமையாக‌ தெளிவாக‌ த‌ருகிற‌து. இத‌ன் முக‌ப்பு ப‌க்க‌த்தில் வ‌ரிசையாக‌ டிவிட்ட‌ர் ப‌ய்னாளிக‌ளீன் பெய‌ர்க‌ளுக்கு ப‌க்க‌த்தில் அவ‌ர்க‌ளின் ச‌மீப‌த்திய‌ ப‌திவு இட‌ம் பெறுகிற‌து.

இதை த‌விர‌ ப‌ல்வேறு த‌லைப்புக‌ளின் கீழும் ப‌திவுக‌ள் தொகுத்த‌ளீக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன. எதில் ஆர்வ‌மோ அத‌னை கிளிக் செய்து ப‌டிக்க‌லாம்.
தேட‌ல் வ‌ச‌தியும் உண்டு.

இந்தியாவை ம‌ற்றும் இந்திய‌ர்க‌ளை டிவிட‌ரில் பின்தொடர‌ இந்த‌ த‌ள‌மே போதுமான‌து.

இந்த‌தளத்தில் நான் பார்த்த‌ போது பாலிவுட் இய‌க்குன‌ர் கரண் ஜோகர் கிரிக்கெட் ந‌ட்ச‌த்திர‌ம் டிவிட்ட‌ரில் இல்லை என்னும் த‌க‌வ‌லை ப‌கிர்ந்து கொண்டிருந்தார்.க‌வ‌னிக்க‌ ச‌ச்சின் டென்டுல்க‌ர் என்னும் பெய‌ரில் டிவிட‌ரில் ப‌ல‌ க‌ண‌க்குக‌ள் இருக்கின்ற‌ன். எல்லாம் ர‌சிக‌ர்க‌ளின் கைவ‌ரிசையாக‌ இருக்கும்.
டிவிட்ட‌ர்

 —————

http://www.indiatweetz.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “ஒரே இடத்தில் இந்தியர்களின் டிவிட்டர் பதிவுகள்

  1. மிகவும் பயனுள்ள பகிர்வு.
    நன்றி,
    இவண்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *