யூடியூப் நிபுணர்-2

koteckiயூடியூப்பில் அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் சமர்பித்த பிரச்சார வீடியோ காட்சிகளை விமர்சிப்பதன் மூலம் புது யுகத்தின் அரசியல் நிபுணரான ஜேம்ஸ் கோட்டகி செல்வாக்கு பெற்ற கதையை தொடர்ந்து பார்ப்போம்…
.
அதிபர் தேர்தல் வாக்காளர்கள், யூடியூப்பில் வீடியோ கோப்புகளை இடம்பெற வைத்து பிரச்சாரம் செய்வதை புதுமையாக கருதி யிருக்கலாம். அவர்கள் அதனை பெருமையாகவும் நினைத் திருக்கலாம். பலரது பாராட்டிற்கு ஆளாகி இருக்கலாம்.

ஆனால் கேம்ஸ் வாலிபரான கோட்டகிக்கு இவற்றை பார்த்ததும் சிரிப்புதான் வந்தது. சில வேட்பாளர்களின் வீடியோ பிரச்சாரம் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு அலுப்பூட்டுவதாக நினைத்தார்.

காரணம் யூடியூப் வீடியோவுக்கு என்று ஒரு இலக்கணம் உருவாகி இருக்கிறது. உண்மையில் இலக் கணத்தை மீறிய இலக்கணம். யூடியூப் பில் பிரபலமான வீடியோ காட்சிகள் எல்லாமே பாசாங்கு இல்லாதவையாக, ஒளிவு மறைவு இன்றி வெளிப்படும் சுயமான குரலாக இருக்கும். ஏதோ ஒரு விதத்தில் ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள முற்படும் தன்மையும் இருக்கும்.

யார் வேண்டுமானாலும் வீடியோவை உருவாக்கி பகிர்ந்து கொள்ளலாம் என்னும் சுதந்திரத்தை பயன்படுத்திக் கொண்டு தங்கள் படைப்புத்திறனை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் யூடியூப் வீடியோ, இப்படி இருப்பதே நேர்த்தியானது. என்னும் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டவை.

இந்த தன்மை காரணமாகவே யூடியூப் இளைய தலைமுறையினரை பெரிதும் கவர்ந்திருந்தது. நியூயார்க் நகரில் பிறந்து வளர்ந்த ஜேம்ஸ் கோட்டகியும் இந்த கூட்டத்தில் ஒருவர். வாஷிங்டனில் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவருக்கு அரசியல் ஈடுபாடும் உண்டு. யூடியூப்பில் “எமர்ஜென்ஸி சீஸ்’ என்னும் பெயரில் அவர் ரசிகர்களுக்கு அறிமுக மாகியிருந்தார்.

யூடியூப் பிரச்சார வீடியோக்களை பார்த்து அதிருப்தி அடைந்த அவருக்கு யூடியூப் மூலம் வாக்குகளை பெற முயல்வது சரிதான், ஆனால் அதற்கு ஏற்றார் போல நடந்து கொள்ள வேண்டாமா? என்று தோன்றியது. அரசியல்வாதிகள் எப்போதும் போலவே கோட் சூட்டோடு தோன்றி, மேடையில் உரையாற்றுவது போலவே, பகட்டாக பேசிக் கொண்டிருந்தால் யூடியூப் உலகில் யார் காது கொடுத்து கேட்கப் போகிறார்கள் என்றும் கோட்டகி நினைத்தார்.

இப்படி சொற்பொழிவு ஆற்றும் தன்மைக்கு மாறாக உரையாடலுக்கு தயாராக இருக்கும் திறந்த மனதுடன் உங்களில் ஒருவர் போன்ற உணர்வை வெளிப்படுத்தாத வரையில் யூடியூப் கூட்டத்தை கவர முடியாது என அவர் உறுதியாக நம்பினார். இதை அரசியல்வாதிகளுக்குசொல்லவும் விரும்பினார்.

உடனே பென்சிலில் பொம்மைகளை உருவாக்கி, அதன் மீது வேட்பாளர்கள் முகத்தை ஒட்டவைத்து நையாண்டி செய்யத் தொடங்கினார். அந்த காட்சியை வீடியோ படமாக்கி, யூடியூப்பில் அரங்கேற்றினார்.

அதிபர் வேட்பாளரின் பிரச்சார வீடியோவில் உள்ள குறைகளை துணிச்சலுடன் சுட்டிக்காட்டி, கேலிக்கும், கிண்டலுக்கும் நடுவே அவர்களுக் கான ஆலோசனைகளையும் வழங்கினார். உதாரணத்திற்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் டென்னிஸ் குச்னிச் என்பவரின் வீடியோவை பார்த்து விட்டு, வளவளவென்று பேசாமல், விஷயத்துக்கு வாருங்கள்.

அப்படியே கொஞ்சம் நகைச்சுவையாக ஏதாவது சொல்லுங்களேன் என்று தனது பென்சில் பொம்மை மூலம் கூறினார். யூடியூப் ரசிகர்களிடையே ஒரு குணம் உண்டு. நிறைய பாராட்டுவார்கள். நிறைய விமர்சனமும் செய்வார்கள் கோட்டக்கி வீடியோ அலசலை பார்த்தும் இப்படி பலர் பாராட்டினர். இன்னும் பலர் “நீ என்ன பெரிய ஆளா’ என்று அவரையே நையாண்டி செய்தனர்.

ஆனால் விஷயம் அதுவல்ல. கவனிக்க வேண்டியவர்கள் அவரை கவனித்தனர்.
சம்பந்தப்பட்ட வேட்பாளர் குச்னிச்சே, அவரது ஆலோசனை ஆமோதித்து உனது கருத்திற்கு நன்றி என பதில் அளித்தார். இந்த பதிலை யூடியூப் வீடியோ மூலமே சமர்பித்தார் என்பதை சொல்ல வேண்டியதில்லை. தனது கருத்திற்கு கிடைத்த அங்கீகாரம் கோட்டக்கியை துள்ளி குதிக்கவைத்தது.

(அந்த துள்ளலையும், வீடியோவாக சமர்பித்தார்) தொடர்ந்து தனது பென்சில் பொம்மை மூலம் பிரச்சார வீடியோக்களை விமர்சனம் செய்தார். அவருக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.

வேட்பாளர்களின் வீடியோ “யூடியூப்’பில் செல்லுபடி ஆகுமா, ஆகாதா என அவர் அலசி ஆராய்ந்த விதத்தை பத்திரிகைகளும் கவனித்து பாராட்டின. அடுத்த கட்டமாக கோட்டக்கி வேட்பாளர்களை பேட்டிக்காண முயன்றார்.

வீடியோ வழியே கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சில வேட்பாளர்கள் வீடியோ மூலமே பதில் அளித்தனர். சில வேட்பாளர்கள் அவரது அறையை தேடி வந்து கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இவை எல்லாம் கோட்டக்கியின் செல்வாக்கை உயர்த்தின.

கல்லூரி அறையில் எடுக்கப்பட்ட முதல் அதிபர் வேட்பாளர் பேட்டி என்னும் வர்ணனையோடு கோட்டக்கி இவற்றை தனது யூடியூப் பக்கத்தில் ஒளிபரப்பி மகிழ்ந்தார்.
இதனிடையே சி.என்.என். பாக்ஸ் போன்ற டிவிக்கள் அவரை பேட்டி கண்டன.

எக்கானாமிஸ்ட் பத்திரிக்கை யூடியூப் பிரச்சார வீடியோ தொடர்பான நிபுணர் என்று அவரை வர்ணித்தது. அதோடு “பொலிட்டிக்கோ பிளேபுக்’ என்னும் இன்டெர்நெட் நிறுவனம் அவரை ஒப்பந்தம் செய்து கொண்டு தன் சார்பாக நிகழ்ச்சிகளை வழங்க கேட்டுக் கொண்டது.

இப்படியாக கோட்டக்கி, யூடியூப் கலாச்சாரத்தை புரிந்து கொண்டு வெளிப்படுத்தியதன் மூலம் இளம் வயதிலேயே உலகம் அறிந்த அரசியல் நிபுணராகி விட்டார். கோட்டக்கி வீடியோவை காண ஜேம்ஸ் கோட்டக்கிடாட்காம் தளத்திற்கு விஜயம் செய்யலாம்!.

————–
குறிப்பு;
(யு யுஸ் தேர்தலுக்கு முன் எழுதியது)
—————-

linkhttp;
://jameskotecki.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *