இந்து மதத்தின் படி இது கலியுகம்.ஆனால் இண்டெர்நெட்டைப்பொருத்தவரை நடப்பு காலத்தை இமெயில் யுகம் ,டிவிட்டர் யுகம், வலைப்பின்னல் அல்லது ஃபேஸ்புக் யுகம் என்று எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம்.
ஃபேஸ்புக் யுகம் என்று சொல்வதற்கான காரணங்களை எளிதாகவே புரிந்து கொள்ளலாம்.
ஒரு காலத்தில் இமெயில் முகவரி இருப்பது எப்படி இன்றியமையாததாக கருதப்பட்டதோ அதே போல இன்று வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக்கில் ஒருவருக்கென சொந்தமாக பக்கம் இருப்பது இயல்பானதாக கருதப்படுகிறது.
ஃபேஸ்புக் பக்கம் மூலம் தகவல்களை பகிர்ந்து கொள்வது சுலபமாக இருப்பதோடு நணபர்களைப்பற்ரி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் ஃபேஸ்புக்கில் நுழைவதே போதுமானதாக இருக்கிறது.
ஃபேஸ்புக் பக்கத்தின் மூலம் சமயங்களில் ஒருவரது ஜாதகத்தையே தெரிந்து கொண்டுவிட முடியும். யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் இப்போது தொலைபேசி எண்ணையோ ஏன் இமெயில் முகவரியையோ கூட பலரும் தேடுவதில்லை.ஃபேஸ்புக் பக்கம் இருக்கிறதா என்றே பார்க்கின்றனர்.
இப்படி ஃபேஸ்புக் பக்கம் மூலம் பெல்ஜியம் மனிதர் ஒருவருக்கு ஆச்சர்யமான அனுபவம் நிகந்துள்ளது.33 வருடங்களுக்கு முன் அவர் அனுப்பிய செய்திக்கான பதில் ஃபேஸ்புக் மூலம் கிடைத்திருக்கிறது. அவரே கூட அந்த செய்தியை மறந்து விட்ட நிலையில் இத்தனை ஆண்டுகளுக்கு பின் யாரோ ஒரு பெண்மணி பதில் அளித்து வியப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த ஆச்சர்யத்தின் பின்னே இருப்பதும் ஒரு புதிரான சங்கதி தான். பாட்டிலில் ஒரு செய்தி பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். புறா காலில் செய்தியை அனுப்பி வைப்பது முதல் தபால் தந்தி ,இமெயில் என மனிதகுலம் எத்தனையோ த்கவல் தொடர்பு வழிகளை கையாண்டு இருக்கிறது.
இவற்றுக்கு நடுவே கொஞ்சம் விநோதமான தகவல் தொடர்பும் புழக்கத்தில் இருக்கிறது.இதனை பரவலானது என்றோ பிரபலமாது என்றோ சொல்ல முடியாது..ஆனால் சுவாரஸ்யமானது. பாட்டிலில் செய்தியை எழுதி கடலில் வீசி எறிந்து விட்டு எப்போதாவது யாராவது அதனை பார்த்து தொடர்பு கொள்கின்றனரா என்று காத்திருப்பது தான் இந்த தகவல் தொடர்பு முறை. இந்த செய்தி பார்க்கப்படும் என்பதற்கோ பார்க்கப்பட்டாலும் பதில் வரும் என்பதற்கோ எந்த உத்திரவாதமும் இல்லை.
உண்மையில் இந்த நிச்சயமற்ற தனமையே இதில் உள்ள சுவாரஸ்யம்.அந்த வகையில் இது ஒரு புதிர் கலந்த விளையாட்டு. இந்த பழக்கத்தின் ரிஷி மூலம் நதி மூலம் பற்றி தெரியவில்லை.இத்னை அடிப்படையாக கொண்டு அழகான படங்கள் வந்துள்ளன. கிட்டத்தட்ட 33 ஆன்டுகளுக்கு முன் ஆலிவர் வான்டேவல்லே என்னும் வாலிபருக்கு இங்கிலாந்தில் சுற்றுலா சென்றிருந்த போது திடிரென இப்படி பாட்டிலில் செய்தி அனுப்ப வேண்டும் என தோன்றியிருக்கிறது.
அப்போது ம்வருக்கு 14 வயது.படகில் சென்று கொண்டிருந்த அவர் அந்த நேரத்தின் இந்துதலில் ஒரு காகிதத்தை கிழித்து அதில் தன்னைப்பற்றியும் தான மேற்கொள்ளும் பயணத்தையும் குறிப்பிட்டு ஒரு செய்தி எழுதி அதனை பாட்டிலில் அடைத்து தண்ணீரில் வீசிவிட்டார். யாராவது அதனை பார்த்து கடிதம் எழுதுகின்றனரா பார்க்கலா
என்பது அவரது எண்ணம்.பதில் வந்தால் பயணத்தின் நினைவுச்சின்னமாக வைத்துக்கொள்ளலாம் என்று அவர் நினைத்திருக்கலாம்.வராவிட்டாலும் இந்த எதிர்பார்ப்பே ஒரு சுவார்ஸ்யம் என நினைத்திருக்கலாம்.
எது எப்படியோ இந்த பாட்டில் கடலில் தண்ணீரில் மூழ்கியது 1977 ல்.அதன் பிறகு வாலிபர் ஆலிவர் இந்த சம்பவத்தை மறந்தே விட்டார்.
இப்படி ஒரு செய்தி அனுப்பயதை அவர் மீண்டும் நினைத்து பார்த்திருக்க கூட வாய்ப்பில்லை. ஆனால் இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்மணி அவரது ஃபேஸ்புக பக்கத்தில் தொடர்பு கொண்டு பாட்டில் செய்தியை நினைவு படுத்திய போது அவர் வியந்தே போய்விட்டார். டோர்செட் நகரில் வசிக்கும் லாரனே யீட்ஸ் என்னும் பெண்மணி அந்த பாட்டிலை சமீபத்தில் கண்டெடுத்திருக்கிறார்.உடனே அதற்கு பதில் அளிக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
அதில் இருந்த தபால் முகவரியை பெரிதாக எடுத்துக்கொள்ளத யீட்ஸ் ஆலிவரின் பெயரை இண்டெர்நெட்டில் தேடி அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தை கண்டுபிடித்து தொடர்பு கொண்டிருக்கிறார். முதலில் ஆலிவருக்கு எதுவுமே புரியவில்லை.தன்க்கும் அதற்கும் சம்பதமில்லை என கூறிவிட்டார். பிறகு தான் 14 வயதில் தான் மேற்கொண்ட புதிரான முயற்சி நினைவுக்கு வந்தது. இப்போது இருவரும் ஃபேஸ்புக்கில் நண்பர்களாகிவிட்டனர்.
33 ஆண்டுகளுக்கு முன் எப்போதாவது கடிதம் மூலம் பதில் வந்தால் வரும் என கடலில் கலந்த செய்திக்கு இப்போது ஃபேஸ்புக் வாயிலாக பதில் வந்து இரண்டு பேர் வலை பின்னல் நண்பர்களாகி இருப்பதை என்னெவென்று சொல்வது.

0 Comments on “ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம்”
Pingback: Tweets that mention ஃபேஸ்புக்கில் ஒரு ஆச்சர்யம் « Cybersimman's Blog -- Topsy.com
karthik
oru siru thiruthhanm. ithu kali yugam.
cybersimman
திருத்ததை ஏற்கிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
அ.பிரகாஷ்
இணையத்தமிழில் பேஸ்புக், டிவிட்டர் பற்றிய தங்களின் கட்டுரைகள் தனித்துவமானவை. தங்களின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற்று பாதுகாத்து வருகிறேன். அவை பாதுகாக்கப்பட வேண்டியவை. பணி தொடர வாழ்த்துக்கள்.
cybersimman
ஊக்கம் தரும் பாராட்டு வார்த்தைகளுக்கு மிக்க நன்றி நண்பரே.
அன்புடன் சிம்மன்
அ.பிரகாஷ்
facebook இல் கணக்கு வைத்துள்ளீர்களா நண்பரே?
cybersimman
ஃபேஸ்புக்கில் பக்கம் இருக்கிறது நண்பரே.ஆனால் அடிக்கடி பயபடுத்த முடிவதில்லை.
aruna
அட!அதிசயம்!
Manian
Facebook as well as Twitter are the modern day tools of effective communication. As told by Thiruvalluvar in his Thirukkural, here too one has to confine within 140 letters in twitter. Facebook serves multifarious purposes. Sometimes, some people get into trouble in putting their remarks in Facebook and I refer to Mr. Sashi Tharoor’s remarks in Facebook. It is unfortunate those things were magnified.
‘Manian’
ஜெகதீஸ்வரன்
பேஸ்புக்கில் சினிமா பிரபலங்கள் கூட இருக்கின்றார்கள்.
பார்க்க…http://sagotharan.wordpress.com/2010/05/05/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/
ஜெகதீஸ்வரன்
பேஸ் புக்கில் ஏகப்பட்ட விளையாட்டுகள் பிரபலம். அதில் ஒன்று தான் பாம் வில்லி. இதை வைத்துக் கொண்டு பணம் சம்பாதிப்பதென பெரிய திட்டமே போட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இது அப்படியே விவசாயத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
அப்பாவி தங்கமணி
இதே கதை தெலுங்கு படம் கொஞ்ச நாள் முன்னாடி பாத்தேன்… கொஞ்சம் வேற மாதிரி…இந்த சம்பவத்துல இருந்து தான் சுட்டாங்களா…இப்படி எல்லாம் யோசிக்கறாங்க பாருங்க?
Jeyamaran
Viry nice orkut a vittutiga boss?