அதென்ன புகைப்பட யுத்தம்,புதுசாக இருக்கிறதே என்று கேட்க தோன்றலாம்.புகைப்படங்களுக்கான நீயா நானா போட்டி என்று வைத்துக்கொள்ளுங்களேன்.ஆம் இரண்டு புகைப்படங்களை பக்கத்தில் பக்கத்தில் வைத்து அவற்றில் எது சிறந்தது என தீர்மானிக்க உதவுகிறது போட்டோபேட்டில் என்னும் இணையதளம்.இந்த தளத்தில் நுழைந்ததுமே ஏதாவது இரண்டு புகைப்படங்கள் கண் சிமிட்டிக்கொண்டிருக்கும்.அவற்றில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறதோ அதில் கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு அடுத்த ஜோடி புகைப்படத்துக்கு சென்றுவிடலாம். முதலில் பார்க்கும் புகைப்படங்கள் பிடிக்காவிட்டாலும் அடுத்த ஜோடிக்கு போய்விடலாம்.ஒவ்வொரு புகைப்படத்திற்கும் எத்தனை வாக்குகள் என்பது ஆரம்பத்திலேயே மின்னி மறைந்துவிடுகிறது.புகைப்படங்கள் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு ஒப்பிடப்படுகின்றன என்பது தெரியவில்லை.ஆனால் விதவிதமான படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.சில உண்மையிலேயே அருமையாக உள்ளன்.புகைப்படங்களை நேசிப்பவர்கள் வரிசையாக படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.முதல் பத்து இடம் பிடித்த புகைப்படங்களுக்கான பட்டியலும் உள்ளது. நீங்கள் விரும்பினால் உங்கள் படங்களையும் சமர்பிக்கலாம். ஆனால் அதற்கு முன்பாக உறுப்பினராக வேண்டும்.இப்படு புகைப்படங்களை மோதவிடுவதன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை.இதன் பயன் குறித்தும் சந்தேகமே எழுகிறது.ஆனால் சுவாரஸ்யமான தளம்.ஆனால் அருமையான புகைப்படங்களையும் அதன் மூலம் நல்ல புகைப்படக்கலைஞர்களையும் அறிமுகம் செய்து கொள்ளலாம்.சொல்லப்போனால் இத்தகைய தளங்கள் இண்டெர்நெட்டில் தொடர்ந்து வேறு வேறு வடிவில் முளைத்துக்கொண்டே தான் இருக்கின்றன.ஹாட் ஆர் நாட் இணையதளம் துவக்கி வைத்த இணைய மோகம் என்று இதனை சொல்ல வேண்டும்.இண்டெர்நெட்டின் ஆரம்ப காலத்தில் உதயமான இந்த இணையதளம் இணையவாசிகள் தங்களது புகைப்படங்களை பதிவேற்றி இணையவாசிகளின் புகைப்படத்தோடு ஒப்பிட்டு பார்த்து கொள்ள வழி செய்தது.மற்றவர்கள் இவற்றுக்கு வாக்களீக்கலாம் என்பது சுவாரஸ்யமாக அமைந்தது. இணையவாசிகளின் தன்முனைப்பை கொம்பு சீவி கொள்ள உதவும் இந்த தளம் மிகவும் பிரபலமாகி அதன் பிறகு மவுஸ் குறைந்து போனால
ும் இதே கருத்தாக்கத்தில் புதிய மாற்றங்களோடு புதிய தளங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.சமீபத்திய வரவு போட்டோபேட்டில்
.மீ

0 Comments on “புகைப்பட யுத்ததிற்கு நீங்க தயாரா?”
makdns
good
makdns.blogspot.com
MinMini.com
MinMini.com பார்த்தீங்களா..? இல்லையா..?
அப்புறம் சீட் கிடைக்கலைன்னு
Feel பண்ணக்கூடாது…
cybersimman
vazka million dollar homepage