பேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களை அமைப்பது தான் இப்போது பேஷன்.ஆனால் பிரபலம் ஒருவரே டிவிட்டரில் போலி பக்கத்தை உருவாக்கியிருக்கிறார் தெரியுமா?
பாலிவுட் இயக்குனர் அபிஷேக் ஷர்மா தான் இப்படி போலி டிவிட்டர் பக்கம் ஒன்றை அமைத்துள்ளார்.ஆனால் இவர் அமைத்துள்ளது உணமியான போலி பக்கம்.அதென்ன போலியில் உண்மையானது?அதில் தான் சுவாரஸ்யமே இருக்கிறது.
வலைப்பின்னல் தளங்களின் அடையாளமாக திகழும் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் ஆகிய சேவைகளை பிரபலங்களில் பலர் ரசிகர்களோடு நேரடியாக தொடர்பு கொள்ள பயன்படுத்தி வருகின்றனர்.பேஸ்புக்கை விட டிவிட்டரில் அதிக பிரபலங்கள் இருப்பதாக தோன்றுகிறது.
டிவிட்டரில் நட்சத்திரங்களின் வருகை எப்போதுமே தனி கவனத்தை ஈர்த்து விடுகிறது.எந்த நட்சத்திரம் டிவிட்டரில் நுழைந்தாலும் அது செய்தியாக நட்சத்திர அந்தஸ்து பெற்று விடுகிறது.இந்த வரவேற்பையும் மீறி டிவிட்டரின் அருமை பெருமைகளை புரிந்து கொள்ளாத பிரபலங்கள் இருக்கின்றனர்.அல்லது டிவிட்டர் அவசியமில்லை என அவர்கள் நினைக்க கூடும்.
எல்லா நட்சத்திரங்களூம் டிவிட்டரில் பங்கேற்க வேண்டிய அவசியம் இல்லை தான். ஆனல் பிரச்சனை என்னவென்றால் ரசிகர்களில் சிலர் டிவிட்டரில் இல்லாத பிரபலங்களின் பெயரில் தாங்களே டிவிட்டர் பக்கத்தை துவக்கி நடத்துவதுண்டு.சும்மா விளையாட்டுக்கு என்பதில் துவங்கி இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு.ஒரு சிலர் ரொம்பவே உற்சாகத்தோடு பிரபலம் போலவே டிவிட்டர் செய்திகளை வெளியிடுவதுண்டு.
கிரிக்கெட் வீரர் சச்சினில் துவங்கி பல பாலிவுட் பிரபலங்கள் பெயரில் இப்படி டிவிட்டர் பக்கங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.இவை பொலி பக்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சர்வதேச அளவில் இது ஒரு பெரிய பிரச்சனையாகி ஏனுங்க டிவிட்டரில் இருப்பது உங்கள் பக்கம் தானா என கேட்கும் நிலை ஏற்பட்ட போது டிவிட்டர் பிரபலங்களூக்கான சரி பார்க்கும் சேவையை கொண்டு வந்தது.எனவே தற்போது பிரபலங்கள் டிவிட்டர் பக்கம் துவக்கினால் அது அவருடைய அதிகாரபூர்வமான பக்கம் என்பதை தெளிவுபடுத்தும் வாய்ப்பிருக்கிறது.
டிவிட்டரில் பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும் ஒரு சில பிரபலங்கள் போலி பக்கங்களை தடுக்கவே டிவிட்டருக்கு வருவதுண்டு.எதற்கு யாரோ ஒருவரை நம் நம் சார்பில் பேச அனுமதிப்பது என அவர்களே டிவிட்டரில் இறங்கி விடுவதுண்டு.ஒரு சில நட்சத்திரங்கள் போலி பக்கங்கள் மூலமே டிவிட்டர் பற்றி அறிந்து கொள்வதும் உண்டு.
நீங்க டிவிட்டரில் இருக்கிறீர்களா என்றோ ,என்ன டிவிட்டரில் இப்படி சொல்லியிருக்கிறீர்களே என்று கேட்கப்படும் போது பிரபலங்கள் அப்படியா என குழம்பி தவித்து நின்ற பின் டிவிட்டர் ஞானம் பெறுவதுண்டு.
ரசிகர்கள் இப்படி போலி பக்கங்களை அமைப்பது இருக்கட்டும்.அறிமுக இயக்குனரான அபிஷேக் ஷர்மாவோ தன்பங்குக்கு போலி டிவிட்டர் பக்கத்தை அமைத்திருக்கிறார்.அதிலும் ஒசாமா பின்லேடன் பெயரில் போலி பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்.
அவருக்கு எதற்கு இந்த வேலை?அதிலும் சர்வதேச பயங்கரவாதி என கூறப்படும் ஒசமா பெயரில் டிவிட்டர் பக்கம் அமைப்பதற்கான தேவை என்ன?
ஷர்மா இப்போது இயக்கி கொண்டிருக்கும் படத்தின் பெயரை சொன்னால் இந்த கேள்விகளுக்கான பதில் கிடைத்துவிடும்.ஷர்மா இயக்கும் படத்தின் பெயர் தேரா பின்லேடன்.
இந்த படம் ஒசாமாவை பற்றியதோ அல்லது ஒசாமாவின் வாழ்கை வரலாறோ அல்ல.ஒசாமா பெயரில் ஒரு முழு நீள காமெடி என வைத்துக்கொள்ளுங்களேன்.
பாகிஸ்தனை சேர்ந்த கத்துகுட்டி பத்திரிகையாளர் ஒருவர் அமெரிகாவில் குடியேறும் கணவில் இருக்கிறார். அவரது அமெரிக்க முய்ற்சிகள் தோல்வியில் முடிய நடுவே ஒசமா போன்ர தோற்றம் கொண்ட ஒருவரை பார்க்கிறார். அதன் பிறகு எல்லாமே மாறிப்போகிறது.
இப்படி ஒசாமாவை காமெடி செய்திருக்கும் ஷர்மா இந்த படம் பற்றிய தகவல்களை ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்காகவே போலிபின்லேடன் என்னும் பெயரில் டிவிட்டர் பக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.
திரைப்படங்களுக்கான புரோமோஷன் என்கிறார்களே அதற்கு டிவிட்டரை அருமையாக பயன்படுத்தலாம். படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல்களை அழகாக ஒவ்வொரு டிவிட்டர் செய்தியாக தட்டி விட்டுக்கொண்டே இருக்கலாம்.
மிக சுலபமான மற்றும் செலவு குறைந்த வழி இது.
ஷர்மாவும் இதனைதான் செய்து வருகிறார். தோராபோரா மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்திருப்பதாக ஒசாமா கூறுவது போல துவங்கும் அவரது டிவிட்டர் செய்திகள் நகைச்சுவையான பதிவுகளாக தொடர்கின்றன.
படம் பற்றிய தகவல்களை தெரிவித்து ஆர்வத்தை ஏற்படுத்துவதோடு படம் ஒசாமா வரலாறு அல்ல நையாண்டி என்னும் செய்தியையும் இந்த டிவிட்டர் பக்கம் உணர்த்தும் என ஷர்மா நம்பிக்கையோடு கூறுகிறார்.

0 Comments on “டிவிட்டரில் கலக்கும் போலி பின்லேடன்”
Pingback: Tweets that mention டிவிட்டரில் கலக்கும் போலி பின்லேடன் « Cybersimman's Blog -- Topsy.com