தோழருக்காக தொழில்நுட்பம்

gray11grayகம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும், மனித நேயமும் இணைந்த அபூர்வ மனிதர் என்று, தொழில்நுட்ப உலகம் அவரை புகழ்ந்தது. அதைவிட நேசித்தது.
.
ஆய்வுதான் அவரது உயிர்மூச்சாக இருந்தது. டேட்டாபேஸ் என்று சொல்லப் படும் தகவல்கள் திரட்டை கையாளுவது தொடர்பான ஆய்வில் ஜேம்ஸ் கிரே மன்ன ராக இருந்தார். அதோடு பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் அவருடைய நிபுணத்துவமும் அபரிமிதமானதுதான்.

இந்த இரு துறைகளிலும் அவர் நடத்திய ஆய்வின் பலனைதான் உலகம் அனுபவித் துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை நீங்கள் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும்போதும், கிரேவை நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும்.

பரிவர்த்தனை தொடர்பான அவரது ஆய்வு முடிவுகளே, ஏடிஎம் இயந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் பல துறைகளில் அவருடைய பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. தொழில்நுட்ப உலகின் பல்வேறு பிரிவுகளில், தனியொரு மனிதராக அவர் மாற்றிக் காட்டி யிருப்பதாக நிபுணர்கள் பாராட்டுகின்றனர்.

ஒரு காலத்தில் சரிபார்க்க முடியாது என கருதப்பட்ட தகவல் திரட்டின் அளவை எல்லாம் கையா ளும் வழியை உலகிற்கு உணர்த்தியவர் அவர். இன்டெர் நெட் மூலம் பொருட்களை வாங்குவது, வரை பட சேவை ஆகிய வற்றையும் சாத் திய மாக்கியது அவருடைய தொழில்நுட்ப உள்ளொளிதான்.

விமானங்களில் டிக்கெட் முன் பதிவு செய்யும் வசதியை இயக்குவதும் அவருடைய கண்டுபிடிப்புதான். இன்டெர்நெட் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பல சேவைகளுக்கு கிரேவுக்கு நாம் கடன்பட்டிருக்கிறோம். அறியப்படாத உண்மையாக இருந்தாலும், அவரோடு பணியாற்றியவர்களும், அவரின் கீழ் பாடம் பயின்றவர்களும் ‘கிரே’வின் மகத்து வத்தை நன்றாக உணர்ந்திருந்தனர்.

கலிபோர்னியாவின் பெர்க்லி பல்கலை யில் பொறியியல் கணிதத்தில் பட்டம் பெற்று பின்னர் கம்ப்யூட்டர் விஞ்ஞானத் தில் ஆய்வு பட்டம் பெற்ற அவர், ஐபிஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் ஆய்வாளராக பணியாற்றிய பிறகு, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஆய்வாளரானார்.

சமீபத்தில் வானவியலில் ஆர்வம் கொண்ட அவர், பிரபஞ்சம் மற் றும் சொர்க்கம் உள்ளிட்ட வற்றை உணர்த் தும் மிகப்பெரிய ஆன் லைன் வரைபடத்தை உருவாக்கி வானவியல் ஆய்விலும் புதிய பாதை போட்டுக் கொடுத்தார்.

கம்ப்யூட்டர் உலகின் நோபல் பரிசு என்று கருதப்படும் ‘டூரிங் பிரசு’ உள்ளிட்ட விருதுகள் அவரது அறிவுத்திறனுக்கு சாட்சி. அதைவிட, தொழில்நுட்ப உலகில் உள்ளவர்கள் மத்தியில் அவருக்கு இருந்த அங்கீகாரம் நெகிழ்ச்சியானது.

அறிவுத்திறனையும் விஞ்சக்கூடிய, மனித நேய உள்ளம் கொண்ட அவர், மூத்த சகோதரரைப்போல தன்னுடன் பணியாற் றியவர்களை நேசித்து ஊக்குவித்தி ருக்கிறார். அவரிடம் உந்துசக்தி பெற்று சிறந்த ஆய்வாளர் ஆனவர்கள் பலர்.

இதனால் பிற்கால ஆய்வுகளிலும் அவற்றின் முடிவுகளிலும் அவருடைய தாக்கம் கணிசமாகவே இருந்தது. சுருக்கமாகச் சொன்னால், தொழில்நுட்ப உலகில் கிரே அனைவரும் நேசித்த பலருக்கு வழிகாட்டிய முன்னோடி மனிதராக விளங்கினார்.

எனவேதான் ஜனவரி 28-ம் தேதி இவர் நடுக்கடலில் காணாமல் போனதாக செய்தி வெளியானதும், தொழில்நுட்ப உலகம் துடிதுடித்துப் போய்விட்டது. கிரேவுக்கு என்ன ஆச்சு கவலையிலும் ஆழ்த்தியது.

கிரே, படகு பயணத்திலும் ஆர்வம் கொண்டவர். சான்பிரான்சிஸ்கோ நகரில் வசித்து வந்த கிரே, தன்னுடைய தாயின் அஸ்தியை ஃபர்சான் தீவுகளுக்கு அருகே கடலில் கரைக்க விரும்பினார். அதற்கு 40 அடி நீள படகில் அஸ்தி கலசத்தை எடுத்துக் கொண்டு தனியே புறப்பட்டுச் சென்றார்.

படகை செலுத்துவதிலும் அவர் நிபுணர் தான். அதோடு, வயர்லஸ் தொடர்பு, டிஜிட்டல் வழிகாட்டி உள்ளிட்ட நவீன வசதிகளை உள்ளடக்கிய படகு அவருடையது.

காலையில் புறப்பட்டவர் மாலையில் திரு“ம்பிவந்திருக்க வேண்டும். ஆனால், செல்போன் மூலம் தொடர்பு கொள்ளும் எல்லையை கடந்து செல்கிறேன் என அவரிடம் இருந்து மனைவிக்கு கடைசி யாக செய்தி வந்ததோடு சரி. அதன் பிறகு அவரும் திரும்பி வரவில்லை. அவரிடம் இருந்து செய்தியும் வரவில்லை.

காத்திருந்து கலங்கிய அவரது மனைவி கடலோர காவல் படையின் உதவியை நாடினார். உடனே மீட்பு படையினர் விரைந்தனர். அவர் பயணம் செய்த கடல் பகுதியில் கடலோர காவல் படையினர் அங்குலம் அங்குலமாக அலசிப் பார்த்தனர். இனி தேடுவதற்கு இடமில்லை என சொல்லும் அளவுக்கு தேடிப்பார்த்து விட்டனர். ஆனாலும், கிரேவின் படகையோ, அவரது கதி குறித்த தகவலோ கிடைக்கவில்லை.

கடைசியில் வேறு வழியில்லாமல், தேடுவதை கைவிடுவதாக அறிவித்தனர். கிரே போன்ற பிரபலமான கம்ப்யூட்டர் விஞ்ஞானியை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்ல, தேடலை கைவிட அவர்கள் விரும்பாவிட்டாலும், மிகுந்த வருத்தத்தோடு அந்த முடிவை அறிவித்தனர். ஆனால், அவரது தொழில்நுட்ப உலக நண்பர்கள் அப்படி கைவிட தயாராக இல்லை.

கிரேவை மீட்க (அ) கண்டுபிடிக்க ஒரு சின்ன வாய்ப்பு இருந்தாலும் அதனை விட்டுவிட அவர்களுக்கு மனமில்லை. தாங்களாகவே களத்தில் இறங்கினர். விளைவு, இதுவரை தனிமனிதர் ஒருவருக்காக நடத்தப்பட்டிராத, மிகப் பெரிய அளவிலான தேடல் முயற்சி, தனி மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டது.

தேடலின் முடிவு சுலபமானது இல்லை என்றாலும், நாம் எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய மனிதாபிமான முயற்சி அது. நடுக்கடலில் காணாமல் போன கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஜேம்ஸ் கிரேவை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை என்று கடலோர காவல்படை கைவிட்டதும், தொழில்நுட்ப உலகம் துவண்டுபோனது.

தங்களில் ஒருவராக கருதிக் கொண்டி ருந்த மேதை ஒருவன் மாயமாகிவிட்ட நிலையில், அவருக்கு நேர்ந்த கதியை அறிந்து கொள்ள முடியவில்லைவே என்னும் கவலை, தொழில்நுட்ப உலகை வாட் டியது. ஆனால், கவலைப்படுவ தோடு கைகட்டிக் கொண்டிருந்துவிட வில்லை.

தானே காரியத்தில் இறங்கி தேடலை தொடர்வது என தீர்மானித்தது. கிரே காணாமல் போன கடல்பகுதியில் தேடிப் பார்த்தாகிவிட்டது. அவருடைய படகு சென்றிருக்க கூடும் என கருதப்பட்ட இடங்களிலும் அலசியாகிவிட்டது. அப்படியும் எந்த தகவலும் இல்லை.

இத்தனைக்கும் பிறகு என்ன செய்துவிட முடியும்? தொழில்நுட்ப உலகம் இப்படி நினைக்கவில்லை. மாறாக, எவ்வளவோ ஆய்வு கள் செய்கிறோம், எத்தனையோ பிரச்சனை களுக்கு தீர்வு காண சாப்ட்வேர் உருவாக்கு கிறோம். நம்மில் ஒருவர் காணாமல் போயிருக்கிறார், இப்போது ஒன்றும் செய்ய முடியாவிட்டால் எப்படி என நினைத்தது!

இதனிடையே கிரேவின் தேடல் பட லத்தை தொழில்நுட்ப உலகின் அங்கத்தி னர்கள், அங்குலம் அங்குலமாக கவனித்துக் கொண்டு தானிருந்தனர். படகில் தனியே சென்ற ஜேம்ஸ் கிரேவை காணவில்லை என்று புகார் கொடுக்கப் பட்டதாக செய்தி வெளியானதுமே அவரது நண்பர்கள் கவலைத்தொனியில் ஏறிக் கொண்டு தேடலை பின் தொடரத் தொடங்கி விட்டனர்.

கிரே காணாமல் போன தகவலை மற்ற நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற அக்கரையோடு, பிலாக் தளத்தில் இதனை குறிப்பிட்டு, தேடும் பணி நடக்கிறது. நல்ல செய்திக்கு காத்திருப் போம் என எழுதி வைத்தனர். முதல் கட்ட தேடல் முடிந்தும், பயனுள்ள செய்தி வராத நிலையில் இன்னமும் கிரே பற்றிய விவரம் தெரியவில்லை என பதிவு செய்தனர்.

அதற்குள் மற்றவர்கள், கிரேவை காண வில்லையாம், என தங்கள் வட்டத்து நண்பர்களுக்காக பிலாக் தளங்களில் தங்கள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

ஆக, அடுத்த சில மணிகளில் எல்லாம், கிரே காணாமல் போன விவரம் தொழில் நுட்ப உலகில் பரவி கவலையும் அக்கரை யும் கலந்த ஒரு உரையாடலை உண்டாக்கி இருந்தது. தேடல் தொடர்ந்து, அதன் பலனில் நம்பிக்கை குறைந்து கொண்டி ருக்கும் போது, கிரேவின் நண்பர்கள் பதட்டத் தோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த கட்டத்தில்தான் கடலோர காவல் படை இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என தெரிவித்தது. இனியும் காத்திருக்க முடியாது என கிரேவின் நண்பர்கள் தேடலில் குதித்தனர். கிரேவின் நண்பர்களில் அமேசான், கூகுல் போன்ற மெகா நிறுவனங்களில் இருந்த வர்கள், தனி விமானத்தை வாடகைக்கு எடுத்து, கிரே காணாமல் போன கடல்பகுதி மீது பறந்து, புகைப்படங்களை எடுத்தனர்.

இப்படி முழு பகுதியையும் புகைப்படங்க ளில் அடக்கியவுடன், அமேசான் டாட் காம், அந்த படங்களை இன்டெர்நெட்டில் தாங்கி நிற்பதற்கான வசதியை வழங்கியது. அடுத்த கட்டமாக, அந்த புகைப்படங்கள் சிறு சிறு துண்டுகளாக ஆக்கப்பட்டு, அமேசானின் துணை நிறுவன தளமான ‘மெக்கானிகல் டர்க்’ தளத்தின் மூலம் இணையவாசிகள் பார்வைக்கு வைக்கப் பட்டது. கூடவே, அந்த படங்களை ஸ்கேன் செய்து பார்த்து படகு போன்ற வஸ்து கண்ணில்
படுகிறதா? என கண்டுபிடித்து சொல்லுங்கள் என வேண்டுகோள் வைக்கப் பட்டது.

‘மெக்கானிகல் டர்க்’ தளம் கொஞ்சம் விஷேசமானது.கம்ப்யூட்டரால் முடியாத, ஆனால் மானுடர்களால் செய்து முடிக்க கூடிய, பணிகளை இந்த தளத்தில் சமர்ப்பிக்கலாம். நேரமும், ஆர்வமும் இருப்பவர்கள் அந்த வேலையை பூர்த்தி செய்து, அதற்கு பரிசாக சிறு தொகையை யும் பெற்றுக் கொள்ளலாம்.

உலகம் முழுவதும் உள்ளவர்கள், ஆர்வத் தோடு இந்த தளத்தில் தொண்டர்களாக பங்கேற்று பல பணிகளை முடித்து தருகின்றனர். இவர்களிடம் தான், கிரேவின் படகை புகைப்படத்தில் ஸ்கேன் செய்து பார்க்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே, தொண்டர்கள் குவிந்து, படங்களை சிரத்தையோடு ஸ்கேன் செய்து பார்த்தனர்.

அதாவது, கடல் பகுதியில் அங்குலம் அங்குலமாக தேடலாயினர். கூகுலும் தன் பங்குக்கு, ‘கூகுல் எர்த்’தில் பதிவான செயற்கைகோள் வரைபட புகைப் படத்தில், கிரே படகின் அடிச்சுவட்டை தேடிப்பார்த்தது. இந்த தேடலில் கிரேவை கண்டுபிடிக்க முடியவில்லை என்றாலும், அந்த நம்பிக்கையோடு, தொழில்நுட்ப உலகம் தனது நண்பனை முழு வேகத் தோடு தேடிப்பார்க்க இது கைகொடுத்தது.

கிரே மாயமானது புரியாத புதிராகவே இருக்கிறது. ஆனால், அவர் கண்டுபிடிக் கப்பட சிறு வாய்ப்பு இருந்திருந்தாலும், அவருக்கு நேர்ந்த கதியை உணர சிறு குறிப்பு இருந்திருந்தாலும் அதனை பயன்படுத்திக் கொள்வதற்கான சாத்தியத்தை இந்த மீள் தேடல் அளித்தது.
அது மட்டும் அல்ல, ஆபத்து நேரத்தில் தொழில் நுட்பத்தின் நீள் கரங்கள் எப்படி உதவிக்கு வரும் என்பதையும் உலகிற்கு உணர்த்தியது.

இனி, தனி நபர்கள் காணா மல் போகும் தருணங்களில் வழக்கமான தேடலை மட்டும் நம்பிக்கொண்டிருக் காமல், தொழிலநுட்ப வலைவீசி முழுமை யான தேடலில் ஈடுபடலாம் என்ற நம்பிக்கையும் உறுதிபடுத்தியது.

தனது தகுதியை மீறி ஜேம்ஸ் கிரே அதற்காக சந்தோஷப்படுவார். தொழில் நுட்பம் மனித குலத்தின் பிரச்சனைகள் தீர்க்கவே என நினைத்த வராயிற்றே!

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “தோழருக்காக தொழில்நுட்பம்

  1. ஜனவரி 28-ம் தேதி இவர் நடுக்கடலில் காணாமல் போனதாக செய்தி வெளியானதும்…???

    அடுத்த ஜனவரி வந்து விட்டதே ..?? கிடைத்தாரா..??

    நெகிழ்ச்சியூட்டும் பதிவு..

    Reply
  2. Mujib

    Really..Really..Superb article.

    Reply
    1. cybersimman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *