ஒரு முறை இணையதளங்கள் என்று சில இணையதளங்களை வர்ணிக்கலாம் தெரியுமா?
அதாவது சுவாரஸ்யமான தளங்களாக இருக்கும்.முதல் முரை பார்க்கும் போது கவந்த்தை ஈர்க்க கூடியதாவவும் இருக்கும்.ஆனால் தொடர்ந்து சென்று பார்க்க கூடிய அவசியம் இருக்காது.
அது சரி இணையதளங்கள் எத்தனை தளங்களை தான் தினமும் அல்லது அடிக்கடி பார்த்து கொண்டிருக்க முடியும்.ஆனாலும் கூட சில தளங்கள் அறிமுகமாகும் போது அட என வியக்க வைத்துவிடும்.
ஐலவ்பியூப்பில் இணையதளமும் இந்த ரகத்தைச்சேர்ந்ததாகவே தோன்றுகிறது.
மிக எளிமையான வடிவமைப்போடு வரவேற்கும் இந்த தளம் ஒரே ஒரு கேள்வியை தான் கேட்கிறது.நீங்கள் யாரை எதற்காக விரும்புகிறீர்கள் என்பது தான் அந்த கேள்வி?
இதற்கான பதிலை டைப் செய்ய வேண்டிய கட்டமும் ,அதன் கீழ் மற்றவர்கள் இந்த கேள்விக்கு சொன்ன பதில்களும் இடம் பெற்றுள்ளன.அவ்வளவு தான் .வேறு எந்த விவரமும் கிடையாது.
நீங்களும் உங்கள் பங்கிற்கு ,யாரை உங்களூக்கு பிடிக்கும் என்று டைப் செய்ய வேண்டியது தான்.அது உள்ளத்தில் இருந்து வருவதாகவும் இருக்கலாம்.கிண்டலானதாகவும் இருக்கலாம்.ஆழந்த சிந்தனை செய்து வெளியிடுவதாவும் இருக்கலாம்.
உங்கள் பெயரை கூட குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.எல்லாமே அநாமதேயம் தான்.
கருத்து சொன்னவரின் நாடு மட்டுமே இடம்பெறும்.அன்பை சொல்லுவதற்கான இணைய பலகையாக கருதி இதில் நம் கருத்தையும் பதிவு செய்யலாம்.
ஒவ்வொருவரும் யாரை எல்லாம் எதற்காக விரும்புவதாக சொல்லியிருக்கும் கருத்துக்கள் படிக்க சுவையாக உள்ளது.
முதல் முறை கருத்தை கவரும் இந்த தளம் மீண்டும் ஒரு முறை பார்க்க தூண்டும் என்று சொல்வதற்கில்லை.
இத்தகைய தளங்களால் என்ன பயன்?தெரியவில்லை.
இந்த தளத்தில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் படி பீட்டர் பீக்கர் என்னும் அமெரிக்க மாணவர் இதனை உருவாக்கியிருப்பதாக அறிய முடிகிறயது.அவருடைய ஹாபியாம் இந்த தளம்.தளத்தில் இடம் பெறும் வாசகங்கள அடங்கிய டிஷர்ட்களை விற்கவும் செய்கிறார்.
—————

0 Comments on “அன்பை சொல்ல ஒரு இணைய பலகை”
சீனா
அன்பின் சைபர்சிம்மன்
அரியதொரு தளம் – அறிமுகத்திற்கு நன்றி
நல்வாழ்த்துகள் சைபர்சிம்மன்
நட்புடன் சீனா
Pingback: அன்பை தெரிவிக்க ஒரு இணைய விண்ணப்ப படிவம் « Cybersimman's Blog