ரெயில் பயணிகள் மற்றும் பஸ் பயணிகளை விட விமான பயணிகள் கொடுத்து வைத்தவர்கள்.அதிலும் அமெரிக்க விமான பயணிகள்.
காரணம் விமான நிலையத்தில் காத்திருக்க நேர்ந்தால் பொழுது போகாமல் தவிக்க வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.காத்திருக்கும் நேரத்தில் அவ்பர்களுக்கு கைகொடுப்பதற்காக என்றே ஒரு வலைப்ப்பின்னல் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.காத்திருப்பின் சுமையே தெரியாமல் நேரத்தை பயனுள்ளதாக கழிக்கவும் புதிய விமான நிலைய நட்பை தேடிக்கொள்ளவும் இந்த தளம் விமான பயணிகளுக்கு உதவுகிறது.
எத்தனை தான் தொழில்நுடபம் முன்னேறியிருந்தாலும் விமான சேவையை பொருத்தவரை விமானங்கள் திடிரென ரத்தாவதும்,விமானங்கள் தாமதமாவதும் தவிர்க்க இயலாததாகவே இருக்கிறது.இத்தகைய நேரங்களில் பயணிகள் விமான நிலையத்திலேயே பழியாக கிடப்பதை தவிர வேறு வழியில்லை.
விமான நிலையத்தில் பொழுதை கழிக்க வழிகள் இல்லாமல் இல்லை.விற்பனை நிலையங்கள்,ரெஸ்டாரண்ட்,டியூட்டி பிரி ஷாப் என்று ஏகப்பட்ட இடங்கள் விமான நிலையத்திலேயே அமைந்துள்ளன.நவீன விமான நிலையங்கள் விமான நகரம் என்று சொல்லக்கூடிய வகையில் சகல வசதி கொண்டதாக உருவாக்கப்பட்டு வருகின்றன.விமான நிலையத்தை மையமாக கொண்டு இததகைய விமான நகரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
ஏரோட்ரோபோலீஸ் என்று சொல்லப்படும் இத்தகைய விமான நகரங்களில் மணிக்கணக்கில் என்ன நாட்கணக்கில் நேரத்தை செலவிடலாம்.
ஆனாலும் கூட விமான நிலையத்தில் மணிக்கணக்கில் காத்திருப்பது சோதனையானதே.அதிலும் முக்கிய அலுவலாக செல்லும் போது தாமதமான விமானத்திற்காக காத்திருப்பது பொறுமையை சோதித்து விடும்.
இது போன்ற நேரங்களில் கைகொடுப்பதற்காக என்றே விமான பயணிகளுக்கான வலைப்பின்னல் சேவையாக டைமின்5 தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் தங்களைப்போலவே காத்திருக்கும் சக பயணிகளை தொடர்பு கொண்டு இணைய உரையாடலில் ஈடுபட இந்த தளம் உதவுகிறது.
காத்திருக்கும் பயணிகள் தங்கள் லேப்டாப்பில் இருந்தோ அல்லது நவீன செல்போனில் இருந்தோ பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் நண்பர்களோடு உரையாடலாம் தான்.இதற்கு என தனி வலைப்பின்னல் சேவை தேவையா என்று கேட்கலாம்.
நேரத்தை கொல்வதற்காக பேஸ்புக் அல்லது டிவிட்டர் பக்கம் போவதற்கு பதில் நம்மை போலவே காத்திருக்கும் சக பயணிகளோடு தொடர்பு கொண்டு உரையாடுவது சிறப்பானது தானே.அதை தான் இந்த தளம் செய்கிறது.
காத்திருக்க சபிக்கப்பட்ட பயணிகள் இந்த தளத்தில் நுழைந்து அமெரிக்காவில் தாங்கள் எந்த விமான நிலையத்தில் காத்திருக்கிறோம் என்பதை குறிப்பிட வேண்டும். அதன் பிறகு அதே நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் யாராவது இருந்தால் அவர்களுடன் தொடர்பு ஏற்படுத்தி தரப்படும்.
பல நேரங்களி நம்க்கு சுவாரஸ்யம் தரக்கூடியவர்கள் பக்கத்திலேயே இருந்திருக்கலாம்.ஆனால் நமக்கு தெரியாமலேயே போய்விடும்.அவ்வாறு இல்லாமல் நம்முடன் உரையாடக்குடியவர்கள் அருகாமையில் இருந்தால் இந்த சேவை அடையாளம் காட்டி சேர்த்து வைக்கிறது.
அதன் பிறகு இணைய உரையாடலிலுல் ஈடுபடலாம்.இருவரும் நேரில் சந்தித்தும் உரையாடலாம்.ஒரே சூழலில் இருப்பவர்கள் சந்தித்து பேசிக்கொள்ளும் போது சுவையாக தானே இருக்கும்.
வெறும் பொழுதை கழிக்கமட்டுமல்ல இந்த சேவை.விமான நிலையத்தில் செய்யக்கூடிய பயனுள்ள வேலைகள் பற்றியும் ஆலோசனை கேட்கலாம்.உள்ளூர் பற்றி விஷயமறிந்தவர்கள் அதற்கேற்ற தகவல்களை தரக்கூடும்.
வேறு எந்த சந்தேகம் இருந்தாலோ அல்லது தகவல்கள் தேவை என்றாலோ இதில் குறிப்பிட்டு உதவி கோரலாம்.பயணம் தொடர்பான ஆலோனைகளையும் கேட்டு பெறலாம்.இந்த உரையாடலே புதிய நட்புக்கும் வழி வகுக்கும்.
அமெரிக்காவில் உள்ள விமான நிலையங்களில் சிக்கி தவிப்பவர்கள் இந்த சேவை மூலம் புதிய வகையான நட்பை பெற்று இன்புறலாம்.இந்த சேவையின் வரவேற்பை பொருத்து உலகின் மற்ற நகரங்களுக்கும் இது விரிவு படுத்தப்படலாம்.
=—————

0 Comments on “காத்திருக்கும் நேரத்தில் கைகொடுக்கும் வலைப்பின்னல் தளம்”
winmani
சுவாரஸ்யமான தகவல் நண்பரே…
cybersimman
ஆம் நண்பரே