டிவிட்டரின் பலமே அதன் உடனடி தன்மை தான்.காலையில் டிபன் சாப்பிட்டதையோ,அல்லது நாளிதழில் படித்ததையோ டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளலாம்.சிலருக்கு எதையுமே உடனுக்குடன் டிவிட்டரில் பகிர்ந்து கொண்டு விட வேண்டும் என்று கையும் மனதும் பரபரக்கும்.
எல்லாம் சரி மாரடைப்பு ஏற்படும் போது யாருக்காவது டிவிட்டரை நினைத்துப்பார்க்கத்தோன்றுமா?
அமெரிக்காவைச்சேர்ந்த டாமி கிறிஸ்டோபர் என்பவர் சமீபத்தில் மார்டைப்பால் பாதிக்கப்பட்ட போது அந்த அனுபவத்தை அப்படியே டிவிட்டரில் பதிவு செய்து வியக்க வைத்திருக்கிறார்.
திருமண மேடையில் இருந்து டிவிட்டர் செய்தவர்கள் எல்லாம் இருக்கின்ரனர்.விமான விபத்தில் சிக்கியவர்கள் அந்த அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.பூகம்பத்தின் நடுவில் இருந்து கூட டிவிட்டர் செய்துள்ளனர்.ஆனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிருக்கு போராடும் நிலையில் டிவிட்டர் செய்த முதல் மனிதர் கிறிஸ்டோபராக தான் இருக்க வேண்டும்.
கிறிஸ்டோபரின் செயலை சிலர் துணிச்சல் என்று பாராட்டலாம். சிலர் பொறுப்பற்ற செயல் என கண்டனம் செய்யலாம்.டிவிட்டர் மோகம் எப்படி ஆட்டிப்படைக்கிறது என்ற எண்ணமும் ஏற்படலாம்.
சரியோ தவறோ கிறிஸ்டோபரின் செயல் டிவிட்டர் உலக முதல் முயற்சி என்பதில் சந்தேகமில்லை.முன்னோடி செயலா என்பது விவாதத்திற்குறியது.
ஆனால் கிறிஸ்டோபர் இந்த அனுபவத்தை பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார்.சர்ச்சைகளுக்கும் கேள்விகளுக்கும் விடையளிக்கும் வகையில் அந்த பதிவு அமைந்துள்ளது.
கிறிஸ்டோபர் மீடியேட் என்னும் இணையதளத்தின் வெள்லை மாளிகை நிருபராக இருப்பவர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப் 5)அன்று அவருக்கு திடிரென் மார்டைப்பு ஏற்பட்டது.அப்போது மருத்துவ உதவிக்காக காத்திருந்த நிலையில் கிறிஸ்டோபர் ,தனது டிவிட்டர் பதிவில் எனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டு அதன் பிறகு மருத்துவர்கள் வந்துவிட்டனர் நான் பிழைத்துவிடுவேன் என்று கூறுகின்றனர் என்ற தகவலையும் ஒரு நிமிடம் கழித்து பகிர்ந்து கொண்டார்.
லை ரிலே என்று சொல்வது போல கிறிஸ்டோபர் தனக்கு ஏற்பட்ட மாரடைப்பை இப்படி டிவிட்டர் வழியே நேரடியாக பகிர்ந்து கொண்டார்.
எதிர்பார்க்க கூடியது போலவே இந்த செய்தி உடனே இணைய உலகில் பற்றிக்கொண்டது.மாரடைப்பை டிவிட்டர் வழியே பகிர்ந்து கொன்ட மனிதர் என்னும் தலைப்பில் இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிவிட்டரில் மாரடைப்பை பகிர்ந்து கொண்ட முதல் மனிதர் என்ற குறிப்பும் தவறாமல் இடம்பெற்றிருந்தது.
கிறிஸ்டோபரின் டிவிட்டர் பின்தொடர்பாளர்கள் இந்த செய்தி கேட்டு பதறிப்போயினர்.அவர் குணமாக வேண்டும் என்று பிராத்தனை செய்து கொள்வதாக டிவிட்டரில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இவற்றுக்கு நடுவே ஒரு சிலர் டிவிட்டர் மோகம் அளவுக்கு அதிகமாகி விட்டதன் அறிகுறி இதுவோ என்று கவலை தெரிவித்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் டிவிட்டர் செய்வது சரியான செயலா என்று கேள்வி எழுப்பினர்.சிலர் கண்டிக்கவும் செய்தனர்.
நல்லவேளையாக கிறிஸ்டோபர் சிகிச்சைக்கு பின் உயிர் பிழைத்து விட்டார்.அதோடு இந்த நிகழ்வு மற்றும் சர்ச்சை தொடர்பான தனது எண்ணங்களை தனி பதிவாகவும் வெளியிட்டார்.
யாராவது மாரடைப்பு உண்டாகும் போது அதனை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டால் என்ன ஆகும் தெரியுமா?என்னும், கேள்வியோடு துவங்கிய அந்த பதிவில் எனக்கு மார்டைப்பு ஏற்பட்டு நானே அதனை டிவிட்டர் செய்யும் வரை எனக்கும் இது பற்றி தெரியாது என குறிப்பிட்டு விட்டு இந்த அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டது மற்றும் நடந்தது இது தான் என்று முழு நிகழ்வையும் விவரித்திருந்தார்.
ஞாயிறு அன்று எனது காரில் சென்று கொன்டிருந்தேன்.அப்போது மார்பில் லேசாக வலித்தது.வெள்லை மாளிகையில் கால் வைக்கும் பல நேரங்களில் ஏற்படக்கூடிய வலியை போல தான் அதுவும் இருந்து.சில நொடிகளில் அந்த வலி போய்விடும்.ஆனால் இந்த முறை வலி போகவில்லை.என்வே காரில் இருந்து இறங்கி மூச்சு வாங்கினேன்.உடனே எனது நண்பர்கள் அவசர் உதவியை தொடர்பு கொள்ள முயன்றனர்.நான் வேண்டாம் என மறுத்தேன்.ஆனால் நல்லவேளையாக அவர்கள் மருத்துவர்களை அழைத்துவிட்டனர்.அப்போது தான் வலி அதிகமாகி பரவத்தொடங்கியது.
ஆம்புலன்சுக்கு பணம் கட்ட வேண்டுமே என்ற எண்ணத்தால் உண்டான வலி என நினைத்துக்கொண்டேன்.அதன் பிறகு மருத்துவர்கள் வந்த்தும் தான் எனக்கு மார்டைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது… மாரடைப்பால் சிலருக்கு மரணம் ஏற்படுவது என் நினைவில் வந்தது.உடனே எனது 5 வயது மகனுக்கு என் அன்பை தெரிவித்து ஒரு எஸ் எம் எஸ் அனுப்பினேன். பிறகு போனை கையில்வைத்துக்கொண்டு வலியை தாங்கியபடி யோசித்த போது ஒரு எண்ணம் பிறந்தது.எனக்கு மார்டைப்பு ஏற்பட்டிருப்பதை டிவிட்டரில் பகிர்ந்து கொள்ல துவங்கினேன்.இதை படித்துவிட்டு எலோரும் என்ன சொல்வார்கள் என்று நினைத்து சிரித்தபடி டிவிட்டர் செய்தேன்.ஆனால் பின்னர் வலி அதிகமகவே நிறுத்திக்கொண்டேன்.
இப்படி குறிப்பிட்டிருந்தவர் தனது உடல்நிலை தொடர்பாக டிவிட்டரில் வெளியான் கரிசனமும் சக நிருபர்கள் மற்றும் நண்பர்கள்,முன்பின் தெரியாதவர்களின் அன்பும் தன்னை நெகிழச்செய்து விட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த இயற்கையான அன்பு மாரடைப்பை டிவிட்டர் செய்யும் போது தன்ககு இருந்த எண்ணங்களை மாற்றிவிட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
டிவிட்டர் போன்ற சமுக வலைப்பின்னல் சேவையின் மோசமான தன்மையை உணர்த்த முற்பட்டு அதன் மிகச்சிறந்த இயல்பை புரிந்து கொன்டதகவும் அவர் குறிப்பிடிருந்தார்.
என்னைவிட அடுத்த நபர் டிவிட்டர் மார்டைப்பு அனுபவத்தை இன்னும் சிறப்பாக வெளிப்படுத்துவார் என்றும் அவர் கூறியிருந்தார்.
———–

0 Comments on “மாரடைப்பை டிவிட்டர் செய்த மனிதர்”
chollukireen
மாரடைப்பு என்று தோன்றாத நிலையில் வேண்டுமானால் ஸாத்தியமாக இருக்கலாம். போகிர போக்கில்இதைத்தானா செய்யத் தோன்
றும்? ஒரு வேளை
சாதாரணமான மார்வலியையே டிவிட்டருக்காக பெரியதாக கற்பனை விரிந்துவிடப் போகிரது டிவிட்டரே ஜாக்கிரதை.
cybersimman
இல்லை அவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு என டாக்டர்கள் உறுதிபடுத்தி சிகிச்சை அளித்துள்ளனர்.
ff
your very mongal