சர்ச் கியூப் தேடியந்திரத்தை உண்மையிலேயே வித்தியாசமான தேடிய்ந்திரம் என்று தான் சொல்ல வேண்டும்.அதிலும் எத்தனை நாள் தான் ஒரே மாதிரியான தேடல் முடிவுகளை பார்த்து கொன்டிருப்பது என நினைப்பவர்களுக்கு இந்த தேடியந்திரம் கொஞ்சம் புத்துணர்ச்சியை அளிக்க கூடும்.
அந்த அளவுக்கு தேடல் முடிவுகளை முற்றிலும் புதிய முறையில் இந்த தேடியந்திரம் காட்டுகிறது.
உடனே கூகுலுக்கு போட்டியாக ஒரு தேடியந்திரம் (அல்லது இன்னொரு தேடியந்திரம்)வந்துவிட்டது என நினைக்க வேண்டாம்.காரணம் கூகுலை வைத்து பிழைப்பு நடத்தும் தேடியந்திர வகையை சேர்ந்தது தான் சர்ச் கீயுப்பும்.
அது மட்டுமல்ல இணையதளங்களை இணையதுண்டுகளாக (தம்ப்ஷாட்) காட்ட தம்ப்ஷாட்ஸ் இணையசேவையை பயன்படுத்துகிறது.
அதாவது சர்ச் கியூப்பும் கூகுல் தேடியந்திரத்தையே பயன்படுத்துகிறது.ஆனால் முடிவுகளை பட்டியலிடுவதில் தான் வித்தியாசம் காட்டுகிறது.உணமையில் இது தேடல் முடிவுகளை பட்டியலிட்டு தரவில்லை.அதற்கு மாறாக முப்பரிமான சதுரமாக தேடல் பட்டியலில் உள்ள இணையதளங்களை இடம்பெற வைக்கிறது.
இணையதளங்களின் துண்டு தோற்றம் (தம்ப்ஷாட்)இந்த சதுரம் சுழன்று கொண்டே இருக்கும்.சதுரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் மவுசை கொண்டு சென்றால் அருகே அந்த இணையதளத்தின் அறிமுகம் வந்து நிற்கிறது.அதில் கிளிக் செய்தால் தளத்திற்கு விஜயம் செய்யலாம்.
இணையதளங்கள்,இணைய பக்கங்கள்,செய்திகள்,வீடியோ,புகைப்படங்கள்,என எல்லாமே இந்த சதுரத்தில் இருக்கின்றன.மொத்தம் 96 இணைய துண்டுகள் இவ்வாறு இடம்பெற்றுள்ளன.
வரிசையாக தேடல் முடிவுகளை பார்த்து பார்த்து ஏற்பட்ட களைப்பு இந்த சதுரத்தை பார்த்த மாத்திரத்தில் விலகிவிடும்.
சதுரத்தை மேலும் கீழாகவோ பக்கவாட்டிலோ புரட்டலாம்.இந்த தேடியந்திரத்தை பயன்படுத்துவது எப்படி என்று தனியே குறிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது.அநேகமாக பயன்படுத்துவது எப்படி? என விளக்கம் அளிக்கும் அபூர்வ தேடியந்திரம் இதுவாக தான் இருக்கும்.
சர்ச் கியூப்பை சூப்பர் தேடிய்ந்திரம் என்று சொல்ல முடியாவிட்டாலும் முடிவுகளை காண்பிக்கும் விதத்தில் சின்ன வித்தியாசத்தை செய்து கவர்ந்திழுக்கிறது.
காட்சிரீதியாக முடிவுகளை காண்பிப்பது என இதனை சர்ச் கியூப் குறிப்பிடுகிறது.வெகு காலம் முன் விவிஸ்மோ தேடியந்திரம் முடிவுகளை பட்டியலிடுவதில் புதுமையை புகுத்த முயன்றது நினைவிருக்கலாம்.விவிஸ்மோ முடிவுகளை பட்டியலிடும் முறையில் இருந்து விலகி அவற்றை வரைபடம் போல காட்ட முயன்றது.ஆனால் விவிஸ்மோ இப்போது பயன்பாட்டில் இல்லை.
அந்த வரிசையில் இப்போது சர் கியுப் அறிமுகமாகியுள்ளது.
எதயும் காட்சி ரீதியாக அணுக விரும்புகிரவர்களுக்கு நிச்சயம் இந்த தேடியந்திரம் பிடித்திருக்கும்.
ஆனால் இதனை முழுமையாக பயன்படுத்த பிளேஷ் வசதி தேவை.
சர்ச் கியூப் உங்களுக்கு பிடித்திருந்தால் அதே பாணியில் வேறு சில தேடிய்ந்திரங்களும் இருக்கின்றன.அவற்றில் ரெட்ஜீயை மிகவும் சிரப்பானது என்று குறிப்பிடலாம்.
அழகிய வரிக்குதிரையின் லோகோ வரவேற்கும் இந்த தேடியந்திரம் வண்ணமயமான பின்னணியில் மாமுலான தேடியந்திரம் போலவே இருக்கிறது.ஆனால் தேடு என கட்டளையிட்ட பின் இதன் தனித்துவம் தெரிகிறது.
தேடல் முடிவுகள் இணையதளங்களின் துண்டு தோற்றங்களாக அரை வட்டமாக தோன்றுகின்றன.வட்டத்தை பக்கவாட்டில் நகர்த்தினால் புதிய இணையதளங்களின் தோற்றத்தை பார்க்க முடியும்.அவை பற்றிய குறிப்பு கீழே கொடுக்கப்பட்டிருக்கும்.
இதே போல ஆஸ்கோப் தேடியந்திரமும் முடிவுகளை காட்சி ரீதியாக தருகிறது.
———–

2 Comments on “வித்தியாசமான தேடியந்திரம்;3 டி தேடல்”
LVISS
Something like using cool iris .It is different. Nice useful post as usual from you Sir.
அன்பரசன்
It is different and nice