பிபிசி,சிஎன்என் ஆகிய செய்தி தளங்களை மறந்து விடுங்கள்.யாஹூ,கூகுல் நியூஸ் போன்ற வலைவாசல் மற்றும் செய்தி திரட்டிகளையும் விட்டுத்தள்ளுங்கள்.டெக் கிரஞ்ச் போன்ற பிரபல வலைப்பதிவுகளையும் டிக்,நியூஸ்வைன் போன்ற திரட்டிகளையும் கூட மறந்து விடுங்கள்.
செய்திகளை தெரிந்து கொள்ள முற்றிலும் புதிய வழி காட்ட அருமையான இணையதளம் ஒன்று அறிமுகமாகியிருக்கிறது.ஃபாலோயுவர்ஸ் என்னும் பெயரிலான அந்த தளம் நீங்கள் படிக்க விரும்பும் செய்தியை மட்டும் பின்தொடர உதவுகிறது.
உங்களுக்கு உகந்த செய்திகளை தெரிந்து கொள்ள தளம் தளமாக தேடி அலைவதிலிருந்து விடுபட வைக்கும் இந்த தளம் ஒரே இடத்தில் செய்திகளை திரட்டித்தரும் வலைவாசல்கள் பக்கம் போய் விருப்பமான செய்தி எங்கெல்லாம் இருக்கிறது என அலைபாய வேண்டிய தேவையையும் இல்லாமல் செய்கிறது.
உண்மையில் எந்த தளத்தின் பக்கமும் செல்லாமல் குறிச்சொற்களை(டேக்)பின்தொடர்வதன் மூலமே நீங்கள் தெரிந்து கொள்ள நினைக்கும் செய்திகளை சுலபமாக தெரிந்து கொள்ள வைக்கிறது இந்த தளம்.
ஃபோலோயுவர்ஸ் தளத்தில் செய்திகளை அவற்றுக்கான வகைகளோ கிடையாது.அவற்றுக்கு மாறாக டேகுகளே இருக்கின்றன. உங்கள் விருப்பம் எதுவோ அந்த கீவேர்டை தேர்வு செய்து கொண்டால் அவை தொடர்பான புதிய செய்திகளை தொடர்ந்து பெறலாம்.
உதாரணமாக நீங்கள் டென்னிஸ் பிரியர் என்றால் டென்னிஸ் டேகை தேர்வு செய்து கொண்டு அது தொடர்பான புதிய செய்திகளை பின்தொடரலாம்.உங்களுக்கு என்று தனிப்பட்ட பக்கத்தை அமைத்து கொண்டு அதில் புதிய செய்திகளை படிக்கலாம்.இதே போல மற்றவர்களின் டேக் இடம்பெறும் செய்திகளையும் பார்க்க முடியும்.
குறிப்பிட்ட டேகுக்கு பொருத்தமான பிற சொற்களையும் ஒன்றாக சேர்த்து டேக் குழுக்களை உருவாக்கி கொள்ளும் வசதியும் இருகிறது.உதாரணத்திற்கு டென்னிஸ் என்ற சொல்லோடு,பெடரர்,நடால்,விம்பிள்டன்,போன்ற சொற்களை குழுவாக் சேர்த்துக்கோள்ளலாம்
.
நீங்கள் திரைப்பட பிரியர் என்றால் சினிமாவை மட்டும் பிந்தொடரலாம்.இன்னும் கொஞ்சம் ஷார்பாகி தல அஜித் அல்லது சூப்பர்ஸ்டாரை மட்டும் பின்தொடரலாம்.
பாரக் ஒபாமா முதல் எந்திரன் வரை எந்த டேக் தொடர்பான செய்திகளையும் நீங்கள் சுலபமாக பின்தொடரலாம் என்று சொல்லும் இந்த தளம் நவீன செய்திதாள் என்று தன்னை வர்ணித்து கொள்கிறது.விருப்பமான செய்திகளை மட்டுமே தெரிந்து கொள்ளலாம்.கூடவும் இல்லை.குறையவும் இல்லை என்பதை இதன் தனிச்சிறப்பாக குறிப்பிடுகிறது.
இப்படி கீவேர்டு வழி செய்திகளை படிப்பது மிகவும் சிறந்தது என்று சொல்லலாம். ஒரு விதத்தில் எல்லோரும் இவ்வாறு செய்திகளை அணுகுகிறோம்.யோசித்துப்பாருங்கள் செய்திதாளை எடுத்ததும் முதல் பக்கத்திலிருந்து ஒவ்வொரு செய்தியாக விடாமலா படிக்கிறோம்.
தலைப்பு செய்தியை படித்துவிட்டு நமக்கு எது தேவையோ அந்த பகுதிக்கு சென்று விடுகிறோம் அல்லவா?செய்தி தளங்களில் கூட நாம் நேராக எந்த பகுதி தேவையோ அதனை தான் கிளிக் செய்கிறோம்.
இந்த பழக்கத்தி அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கிறது ஃபாலோயுவர்ஸ் தளம்.ஒருவருக்கு எந்த பிரிவில் செய்திகள் தேவையோ அதனை மட்டும் கீவேர்டு வழியே திரட்டித்தகிறது.அந்த டேக் தொடர்பான செய்திகள் இடம்பெறும் தளங்களில் இருந்து செய்திகளை பெற்று நம்முடைய பக்கத்தில் இடம்பெற வைக்கிறது.உங்கள் அபிமான தளங்களை சேர்த்துக்கொள்ள அதனை நீங்களும் சமர்பிக்கலாம்.
இதனை முற்றிலும் புதிய கருத்தாக்கம் என்று சொல்வதற்கில்லை.கூகுல் அல்ர்ட் போன்ற சேவை மூலம் குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் புதிய செய்திகளை பெற முடியும்.யாஹூ ,ரீடிப் போன்ட தளங்கள் உங்கள் விருப்பம் சார்ந்த பிரத்யேக செய்தி பக்கத்தை உருவாக்கி கொள்ள வழி செய்கின்றன.
இந்த வசதியை மேலும் எளிமையாக்கி அதோடு முக்கியமாக முழுமையாக்கி தந்துள்ளது ஃபாலோயுவர்ஸ்.
முழுக்க முழுக்க டேகை மட்டுமே நம்பி செய்திகளை பின்தொடர உதவும் இந்த தளம் ஒருவருக்கு விருப்பமான செய்திகளை மட்டுமே வேறு எந்த கவனச்சிதறல்களும் இல்லாமல் தெரிந்து கொள்ள வைக்கிறது. இதன் மூலம் நேரமும் மிச்சமாகும்.அதோடு சுவாரஸ்யமான வழியும் கூட.
————

0 Comments on “செய்திகளை தெரிந்து கொள்ள புதிய வழி காட்டும் இணையதளம்”
Where is the Url
where is the url?
cybersimman
http://www.followyours.com
Parthiban
Yeah. followyours.com is the great site for NEWS bytes of your interest.
I really love it