நேற்றைய தொடர்ச்சி)
ஆரின் கிரம்லேயும் சூசன் பைசும் தங்கள் காதல் வாழ்க்கையை தாங்களே படமாக்கி விட்டனர். நிஜ வாழ்க்கை நிகழ்வுகளும், கற்பனையும் கலந்த கதையோட்டத்தில் தயாரான அந்தப்படம் “ஃபோர் ஐடுமான்ஸ்டர்ஸ்’ ஆக அவர்கள் கைகளில் இருந்தது.
.
டிஜிட்டல் தொழில்நுட்பம் கைகொடுத்ததால் படம் எடுப்பது சுலபமாக இருந்தது. தயாரிப்பு நிலையில் பெரிதாக யார் உதவியும் தேவைப்படவில்லை. படத்தை எடுத்ததோடு திருப்தி அடைய முடியாதே! அதனை ரசிகர்கள் பார்க்க செய்ய வேண்டுமே!
வர்த்தக சினிமாத்துறையின் தயவு இல்லாமல் படம் எடுக்கும் சுயேட்சையான படைப்பாளிகளுக்கு திரைப்பட விழாக்களை விட்டால் வேறு வழியில்லை. சுயேட்சை படங்களுக்காக என்றே நடத்தப்படும் படவிழாக்களும் கூட இருக்கின்றன.
கிரம்லேவும், சூசனும் தங்கள் படத்தை “ஸ்லேம்டான்ஸ்’ படவிழாவுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பல படவிழாக்களிலும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். படத்தின் புதுமையான உள்ளடக்கத்தை பலரும் பாராட்டவே செய்தனர். ஆனால் படத்தை தியேட்டர்களில் திரையிடுவதற்கான வாய்ப்பு வரவில்லை. படவிழாவுக்கு வந்திருந்த விநியோகஸ்தர்கள் யாரும் அதற்கு முன்வரவில்லை.
இந்தக்கதை இத்தோடு முடிந்திருக்க வேண்டும். சுயமுயற்சியில் உருவான ஒரு நல்லபடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் போய்விட்டது என தீர்ப்பு கூறப்பட்டு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்க வேண்டும். நூற்றுக்கணக்கான சிறிய படங்களுக்கு இந்த கதிதான் ஏற்பட்டுள்ளது.
18 மாதங்கள் வாழ்க்கையோடு போராடி, படத்தை எடுக்க கிரம்லேவும், சூசனும் ஏமாற்றத்தோடு தங்கள் கலைப்பயணத்தை முடித்துக் கொள்ள தயாராக இல்லை. எப்படி படத்தை தாங்களாகவே எடுத்தனரோ அதுபோலவே, தாங்களே ரசிகர்களிடம் படத்தை கொண்டு செல்வது என்றும் தீர்மானித்தனர். இங்கிருந்து தான் டிஜிட்டல் புரட்சிக்கான புதிய பாதையை கண்டறியும் இரண்டாம் கட்ட பயணம் ஆரம்பமானது.
ஸ்லேம்டான்ஸ் பட விழாவுக்காக படத்தை அனுப்புவதற்கு முன்பாக, படத்திற்காக ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் டாட்காம் என அதன் தலைப்பிலேயே இணையதளம் ஒன்றையும் அமைத்திருந்தனர்.
தொடர்ந்து படவிழாக்களில் பங்கேற்றும், தியேட்டர்களில் வெளியிடுவதற்கான வாய்ப்பை பெற முடியாத நிலையில், யூடியூப்பில் படத்தை வெளியிட முடிவு செய்தனர். யாருக்கும் தோன்றியிராத புரட்சிகர மான முடிவாக இது அமைந்தது.
வீடியோ கோப்புகளை சுலபமாக பகிர்ந்து கொள்வதற்கான “யூடியூப்’ தளத்தில் லட்சக்கணக்கான வீடியோ படங்கள் அரங்கேற்றப்பட்டுள்ளன. அவற்றில் இணையவாசிகளால் விரும்பி பார்க்கப்படுபவை உலக அளவில் கவனத்தை ஈர்த்து நட்சத்திர அந்தஸ்த்தும் பெற்றுள்ளன. யூடியூப் மூலமே வெளிச்சத்திற்கு வந்த நட்சத் திரங்களும் இல்லாமல் இல்லை.
யூடியூப், வீடியோ பிரியர்களுக்கு ஏற்றது என்றாலும் அதில் முக்கிய குறைபாடு ஒன்று இருக்கிறது. யூடியூப்பில் சிறிய அளவிலான கோப்புகளை மட்டுமே இடம் பெற வைக்க முடியும். முழுநீள படத்தை எல்லாம் அந்த தளம் தாங்காது. எனவே பெரும்பாலும் நான்கு(அ) ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடிய படங்களே யூடியூப்பில் பதிவேற்றப்படுகின்றன. யூடியூப்பை முன்னோட்டமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவுதான்!.
இந்தநிலையில் தான் கிரம்லேவும், சூசனும் தாங்கள் இயக்கிய ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ் படத்தை யூடியூப்பில் வெளியிட முடிவு செய்தனர். படத்தை மொத்தமாக பதிவேற்றாமல் பல பகுதிகளாக பிரித்து ஒவ்வொன்றாக பதிவேற்றினர்.
படத்திற்காக அமைக்கப்பட்டிருந்த இணைய தளத்தில் இந்த தகவலை குறிப்பிட்டு, அதற்கான இணைப்பையும் கொடுத்திருந்தனர். ஒவ்வொரு பகுதியாக கிளிக் செய்தால், முழுபடத்தையும் பார்த்து முடித்து விடலாம். யூடியூப்பில் புதுமையாக ஒரு வீடியோ கோப்பு அரங்கேறினால் இன்டெர்நெட் உலகம் முழுவதும் பரபரப்பாகி விடும். இப்போதும் அதுதான் நிகழ்ந்தது.
யூடியூப்பில் வெளியான முதல் முழுநீள திரைப்படம் என்னும் தலைப்பின் கீழ் இந்தச் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பிலாக் தளங்களும் இந்தச் செய்தியை வெளியிட்டு அட, படங்களை திரையிட யூடியூப்பையும் பயன்படுத்தலாமா? என ஆர்வத்துடன் விவாதித்தன.
காப்புரிமையை காரணம் காட்டி பல படங்களின் காட்சிகள் யூடியூப்பில் இருந்து விலக்கப்பட்டு வந்தநிலை யில், படைப்பாளர்களே முன்வந்து படத்தை யூடியூப்பில் வெளியிட்டது பரவலான கவனத்தை ஈர்த்தது.
இதனால் ஏற்பட்ட ஆர்வத்தை பயன்படுத்திக்கொள்ளும் வகையில், திரைப்படத்திற்கான
இணைய தளத்தையும் மேம்படுத்தியிருந்தனர். ஆரம்ப கட்டத்தில் இந்த இணையதளம் சாதாரணமாக தான் அமைக்கப்பட்டிருந்தது. அதனை மாற்றி ரசிகர்களின் ஆர்வத்திற்கு தீனிபோடும் வகையில், படத்தின் கதை, படம் எடுக்கப்பட்ட விதம் என சகலவிதமான தகவல்களையும் தளத்தின் மூலம் பகிர்ந்து கொண்டனர்.
இன்டெர்நெட் உலக வழக்கப்படி இந்த தளத்தையும், படத்தையும் பார்த்து ரசித்தவர்கள் மற்றவர்களுக்கு பரிந்துரை செய்தனர். இப்படியாக இன்டெர்நெட் மூலமே அவர்களுக்கு என்று கொஞ்சம் ரசிகர்கள் உருவாகி விட்டனர்.
கிரம்லேவும், சூசனும் ஆரம்ப உற்சாகத்தோடு ரசிகர்களின் ஆர்வம் அடங்கிப்போய் விடக்கூடாது என நினைத்தனர். இதற்காக ரசிகர்களுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.
(டிஜிட்டல் பயணம் தொடரும்)
————–
link;
www.foureyedmonsters.com