பெரும்பாலான நேரங்களில் புகைப்படங்களை தேடவும் கூகுலே போதுமானது.கூகுலில் உள்ள இமேஜ் பகுதியை கிளிக் செய்தால் தேடல் பக்கத்தில் உருவங்களாக தோன்றும்.தேவையான புகைப்படத்தை அவற்றிலிருந்து தேர்வு செய்து கொள்ளலாம்.
ஆனால் பல நேரங்களில் கூகுலின் தேடல் போதாமையை உணர்த்தக்ககூடும்.அதாவது பொழுது போக்காக படங்களை தேடும் போது பிரச்சனையில்லை.உதாரணத்திற்கு ஐஸ்வர்யாவின் லேட்டஸ்ட் படத்தையோ அல்லது சச்சினின் படத்தையோ தேடும் போது கூகுல் இமேஜ் படங்களை கொண்டு வந்து கொட்டி விடும்.
ஆனால் தொழில் ரீதியாக தேடும் போது சரியான படங்களை சட்டென்று கண்டுபிடிக்க கூகுல் உதவி போதுமானதாக இருக்காது.
ஒவ்வொருவரின் துறை மற்றும் நோக்கத்திற்கு ஏற்ப வெவ்வேறு வகையான படங்கள் தேவைப்படலாம்.உதாரணத்திற்கு புகைப்படம் ஜேபெக் வடிவிலோ அல்லது கிப் வடிவொலோ இருக்க வேண்டும் என்று விரும்பலாம்.வேறு சில புகைப்பட கோப்பு வடிவங்களும் இருக்கின்றன.
அதே போல புகைப்படத்தின் அளவு பெரிதாக,மிகப்பெரிதாக இருக்க வேண்டும் என்று விரும்பலாம்.இன்னும் நிறைய புகைப்படம் சார்ந்த அம்சங்கள் இருக்கின்றன.
இத்தகைய எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்றால் புகைப்பட தேடலுக்கு என்று தனி தேடியந்திரம் அவசியம்.
சைட்ராலை இத்தகைய தேடியந்திரம் என்று சொல்லலாம்.புகைப்படங்களை தேட விரும்புகிறவர்கள் தங்களுக்கு எந்த வகையான புகைப்படம் தேவையோ அவற்றை குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம்.
புகைப்படம் எந்த கோப்பு வடிவில் இருக்க வேண்டும்,அதன் அளவு சின்னதா,பெரியதா,அதன் நிறம் எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற பல விஷய்ங்களை குறிப்பிட்டு தேடலாம்.இவற்றுக்காக தனிதனி பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு ஏன் புகைப்படம் ஓவியமாக இருக்க வேண்டுமா,தனித்தோற்றம் வேண்டுமா,அல்லது கூட்டத்தினரோடு உள்ள படம் தேவையா என்று கூட குறிப்பிடலாம்.அப்படியே கிளிப் ஆர்ட் வகை தேவையா ,கோட்டொவியமாக இருக்க வேண்டுமா,போட்டோவாக இருக்கணுமா என்றும் குறிப்பிடலாம்.
இவற்றில் பலவற்றை கூகுலில் கூட பெறலாம்.ஆனால் எல்லாவற்றையும் தனித்தனியே குறிப்பிட வேண்டும்.அதுவும் முதலில் தேடிப்பார்த்து ஏமாந்துவிட்டு அதன் பிறகு கூடுதல் கீவேர்டுகளை சேர்த்து தேட வேண்டும்.
ஆனால் சைட்ரால் தேடியந்திரத்தில் எடுத்த எடுப்பிலேயே எந்த வகையான படம் தேவை என்பதை குறிப்பிட்டு தேடலை பட்டை தீட்டிக்கொள்ளலாம்.எனவே கூகுலில் தேடுவதை கூட குறைவான நேரத்தில் வேண்டிய படங்களை தேடி விட முடியும்.
கோப்பு வகைகள் போன்றவை இதிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதால் தேர்வு செய்வதும் சுலபம்.
சைட்ரால் தேடலில் தலைகீழ் தேடல் என்னும் புதிய வசதியும் உள்ளது.கீவேர்டு சொல்லி புகைப்படத்தை தேடுவதற்கு பதிலாக புகைப்படத்தை சமர்பித்து தொடர்பான படங்களை இதன் மூலம் தேடலாம்.இணையத்தில் இருந்து எடுத்த புகைப்படத்தை சமர்பித்து கூட தேடலாம்.

0 Comments on “புகைப்பட தேடலுக்கு புதிய தேடியந்திரம்”
Abarajithan
Useful Post.
mohanji
உபயோகமான தகவல்ங்க ,நன்றி!
Ganesh Babu
Your Posts are really nice friend, they are one of a kind, to take these wonderful posts to a broader audience, can you allow me to translate this blog posts to English and publish in my blog, with a link to your site.
cybersimman
thanks for the complement
Arul
where is the website link
cybersimman
http://www.cydral.com