எல்லோரும் இணையதளம் வைத்தி ருக்கின்றனரே நாமும் ஒரு இணைய தளத்தை வைத்துக் கொள் வோமே என்ற ஆசை உங்களுக்கு இருக்கிறதா?
.
எழுத்தாளர்களாக ஆக விரும்புகிறவர் களுக்கு துவக்கத்தில் எதை எழுதுவது என்று தெரியாமல் குழப்பமும், தடுமாற்ற மும் இருக்கும் அல்லவா? அதுபோல உங்களுக்கும் இணையதளத்தை எதற்காக வைத்துக் கொள்வது அதில் என்ன வகையான தகவல்களை எப்படி இடம் பெற வைப்பது போன்ற கேள்விகள் உங்களை ஆட்டிப்படைக்கலாம்.
அந்த கேள்விகளுக்கு பதில் தெரியா மல் இன்னமும் நீங்கள் உங்களுக்கான இணைய தளத்தை அமைத்துக் கொள்ளாமலே இருக்கலாம்.
ஆம் என்றால் நீங்கள் சென்று பார்க்க வேண்டிய இணையதளம் ஒன்று உண்டு. அதன் முகவரி, “ஐ டிட் நாட் நோ தட் எஸ்டர்டே டாட் காம்”. உடனே இணையதளத்தை எப்படி நடத்து வது என்னும் கேள்விக்கான விடை இந்த தளத்தில் இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள். மற்ற இணைய தளங்களைப் போன்றதுதான் இதுவும்.
ஆனால் உங்கள் கேள்விக்கு நேரடியாக இது பதில் அளிக்கா விட்டாலும், அதற் கான பதிலை குறிப்பாக உணர்த்தக்கூடிய தளம் இது. அதாவது இந்த தளத்தில் ஒரு முறை உலா வந்தீர்கள் என்றால், உங்களுக்கான இணையதயத்தை எப்படி அமைத்துக் கொள்வது என்னும் பதில் தானாகவே உங்கள் மனதில் தோன்றக்கூடும்.
“நேற்று வரை அது எனக்கு தெரியாமல் இருந்தது” என்னும் அர்த்தத்தைக் கொண்ட இந்த தளம் அதற்கேற்பவே நேற்று வரை நீங்கள் அறிந்திராத விஷயங் களையெல்லாம் தொகுத்து தருகிறது. நேற்று வரை என்ன, இந்த தளத்துக்கு வருகை தராவிட்டால்இன்றும் நாளையும் கூட அறிய வாய்ப்பில்லாத அரிய தகவல் களை அழகாக இந்த தளம் தன்னிடத்தே கொண்டிருக்கிறது.
ஆர்வத்தை தூண்டக்கூடிய கேள்விகள். அந்த கேள்விகளுக்கு மிகுந்த ஈடுபாட் டோடு படித்து மகிழக்கூடிய பதில்கள். இதுதான் இந்த தளத்தின் உள்ளடக்கம். கப்பல்களும், படகுகளும் எப்போதுமே அவள் என்றே குறிப்பிடப்படுகிறது. ஏன் என்று தெரியுமா? உலகின் முதல் தொலை நகலை (பேக்ஸ்) அனுப்பி யது யார் என்று தெரியுமா?
உலகிலேயே பீர் அதிகம் குடிக்கும் நாடு எது தெரி யுமா? ஆகாயத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டால் என்ன ஆகும்? ஆடுகளை எண்ணிக் கொண்டிருந்தால் தூக்கம் வரும் என்கிறார்களே உண்மையா? சான்ட்விச் என்னும் வார்த்தை உதயமானது எப்படி?
ஆற்றின் குறுக்கேயும், ஆழ் கடலிலும் பாலம் அமைக்கிறார்களே எப்படி?
இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் வேண்டும் என்றால், இந்த தளத்தில் இருக்கிறது?
பிலாக் தளத்தின் பாணியில் மிக அழகாக தினம் ஒரு கேள்வியை எழுப்பி அதற்கான விளக்கத்தை பதிலாக அளித்திருக்கின்றனர்.
பதில்கள் எல்லாம் முழுமையானது என்று சொல்வதற்கில்லை. ஆனால் சுவாரசியமா னது. எல்லா பதில்களுமே உங்கள் மனதில் மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தி மீண்டும் மீண்டும் இந்த தளத்துக்கு வர செய்யக் கூடியது. அதோடு நீங்களே கொஞ்சம் சுய தேடலில் ஈடுபட வைக்கக்கூடியது.
அறிவியலில் துவங்கி அற்ப விஷயம் வரை கேள்விகளின் தன்மை பல விதமாக இருக்கிறது. ஆனால் அவற்றுக்கான பதிலில் ஒரு பொது தன்மையை பார்க்க முடிகிறது.
கேள்விக்கான விடையை பெறுவதற் கான தேடல், பதிலுக்கான விளக்கம் வழியே பளிச்சிடுவதை எளிதாக உணரலாம். அதுவே இந்த தளத்தின் தனிச்சிறப்பு.
அநேகமாக இந்த தளத்தை உருவாக்கிய வர் கேள்வியை தனக்குத் தானே கேட்டுக் கொண்டு அதற்கான பதிலை இன் டெர் நெட் முழுவதும் தேடிப்பார்த்திருக்க வேண்டும். அப்போது அவர் கண்ணில் படும் விஷ யங்களை அழகாக தொகுத்து நமக்கான பதிலாக கொடுத்து விடுகிறார்.
இந்த பயணத்தின் வழியே பல சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது. உதாரணத்துக்கு படகுகள் மற்றும் கப்பல்களை ஏன் அவள் என்று குறிப்பி டுகிறோம் என்னும் கேள் விக்கான பதிலை எடுத்துக் கொள்வோம்:
“நடுக்கடலில் தனிமையில் வாடும் கப்பல் ஊழியர்களே இந்த பழக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்க வேண்டும் என்று பொதுவாக கருதப் படுகிறது.
பல மாதங்கள் பெண் வாசனையே இல்லாமல் நடுக்கடலில் தவிக்கும் அவர்கள், மற்ற கலங்களை அவள் என்று குறிப்பிட்டிருக்கக்கூடும். என்றாலும் கப்பலை அவள் என்று குறிப்பிடுவது காதல் மயமானது என்பதை விட மொழியியல் சார்ந்தே அமைந்திருக்கிறது.
பொதுவாக சிறுவர்களுக்கான தளத்தை நாம் அதிகம் நாடுவதில்லை. ஆனால் இந்த கேள்விக்கான பதில் போட் பிரண்ட்லி கிட்ஸ் டாட் காம் என்னும் தளத்தில் அமைந் திருக்கிறது. உலகில் உள்ள பல மொழிக ளில் கப்பல்களை அவள் என்றே குறிப்பி டும் பழக்கம் உள்ளது.
எப்படி இருந்தாலும் இப்போது இந்த பழக்கத்துக்கு முடிவு கட்டப்பட்டு விட்டது. இன்று கப்பல் அது என்று அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப் படுகிறது”.
இப்படி கேள்விகளுக்கான பதில்களை படித்துப்பார்த்தீர்கள் என்றால், ஒவ்வொரு கட்டமாக பதிலை விவரிக்கும் முயற்சியும், அதற்கான தேடலும், அதனை அர்த்தப் படுத்தும் விவரங்களும் இடம் பெற்றிருக் கும். கேள்விகளின் சுவாரசியத்துக்கு ஏற்ப அவற்றின் விளக்கமும் சுவாரசியமா கவே இருப்பதைப்ப õர்க்கலாம்.
கேள்விகளை கேட்டுக்கொண்டு அதற் கான பதிலை தேடிப்பார்த்து இந்த தளத்தை அமைத்திருக்கின்றனர். இது எவரும் செய்யக்கூடியது. நினைத்தால் நீங்களும் செய்யலாம்.
கேள்வி பதில்தான் அளிக்க வேண்டும் என்றில்லை இன்டெர்நெட் உங்களுக்கு எப்படி அறிமுகமாகிறதோ அதனை நீங்கள் மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம். அதற்கென ஒரு தளத்தை அமைக்கலாம்.
———–

0 Comments on “நேற்று வரை அறியாத தளம்”
Surya
ரூம் போட்டு யோசிப்பாங்களோ..?? சூப்பர்
Varadharajan
thanks for sharing the link