பக்கத்து வீட்டுக்காரர்களை போல பக்கத்து வீட்டு இணையதளங்களும் இருக்கின்றன தெரியுமா?
எந்த இணையதளத்தை எடுத்து கொண்டாலும் அதே போன்ற இணையதளங்கள் இருக்கும் அல்லவா?இப்படி ஒரே மாதிரியான இணையதளங்களை தான் பக்கத்து வீட்டு இணையதளங்கள் என்று குறிப்பிடுகிறது சைட் நெக்ஸ்ட் டோர் இணையதளம். இத்தகைய தளங்களை தேடுவதற்காக என்றே உதயமாகியுள்ள தளம் இது.
அட புதுசாக இருக்கிறதே என்று தோன்றினாலும் இது முற்றிலும் புதிய சேவை அல்ல.கூகுல் தனது தேடல் பட்டியலில் ஒவ்வொரு தளத்திற்கு அருகிலும் அதே போன்ற தளங்களை தேடும் வசதியை தருகிறது.இது ஒரு உப சேவையை போல தான்.
ஆனால் சிமிலர்சைட்ஸ் டாட் காம் இப்படி ஒரே போன்ற இணையதளங்களை தேடித்தருவதையே பிரதான சேவையாக வழங்குகிறது.
இந்த தளத்தில் எந்த இணையதளத்தை வேண்டுமானாலும் குறிப்பிட்டு அதே போன்ற உள்ளடக்கத்தை கொண்ட தளங்களின் பட்டியலை பெறலாம்.அது மட்டுமல்ல இதில் உள்ள சிமிலர்வெப் என்னும் பிரவுசர் விரிவாக்க சேவையின் மூலம் இணையவாசிகள் தாங்கள் படித்து கொண்டிருக்கும் செய்தி அல்லது தகவல்களை போன்ற தகவல்களை தானாகவே பெற முடியும்.
கிவேர்டை கொண்டு தேடும் வழக்கமான முறை எல்லோருக்குமானது அல்ல என்று சொல்லும் சிமிலர்சைட்ஸ்,கூகுல் போன்ற தேடியந்திரங்களில் தேவையான தகவல்களை பெற பல நேரங்களில் தேடல் யுக்திகளை அறிந்திருக்க வேண்டும் என்கிறது.அதோடு அனுபவமும் தேவைப்படும். ஆனால் இங்கே தெரிந்த ஒரு இணையதளத்தில் இருந்து ஆரம்பித்து தொடர்புடைய தளங்களின் வழியே புதிய பொருத்தமான தளங்களை அறிமுக செய்து கொள்ளளாம் என்கிறது சிமிலர்சைட்ஸ்.
இந்த பட்டியலில் இடம் பெறும் தளங்களை பயனாளிகள் தெரிவிக்கும் கருத்துக்களின் அடிப்படையில் பட்டை தீட்டிகொண்டே இருப்பதாகவும் சிமிலர்ஸைட்ஸ் கூறுகிறது.அதற்கேற்ப இணையவாசிகள் ஸ்மிலர்ஸைட்ஸ் சுட்டிக்காட்டும் இணையதளங்கள் பொருத்தமாக இருக்கின்றனவா அல்லவா என்று வாக்களிக்கலாம்.விமர்சன கருத்துக்க்ளையும் தெரிவிக்கலாம்.
சிமிலர்ஸைட்ஸ் தளத்தில் தேடுவது சுவார்ஸ்யமாகவே இருக்கிறது.எல்லோரும் அறிந்த தேடியந்திரமான கூகுலை போன்ற தளங்களை தேடினால் யாஹூ,பிங்,ஆஸ்க் உள்ளிட்ட தேடியந்திரங்கள் வரிசையாக தோன்றுகின்றன.ஒவ்வொரு தளத்திற்கு அருகிலேயும் அதே போன்ற தளத்தை தேடும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.இதனை கொண்டு சங்கிலி தொடர் போல தேடிக்கொண்டே போகலாம்.
இந்த சேவையின் மூலம் எந்த தளத்திற்கான மாற்று தளங்களையும் தேடிக்கண்டு பிடிக்க முடியும்.
சிமிலர்ஸைட்ஸ் டாட் நெட் என்னும் தளமும் இதே போன்ற் சேவையை வழங்கி வருகிறது.
சைட்ஸ் லைக், சிமிலர்ஸைட்ஸ்சர்ச் போன்ற தளங்களும் இருக்கின்றன.இவற்றில் சிமிலர் ஸைட் சர்ச் தளம் கூகுலை போலவே எளிமையாக அழகாக இருக்கிறது.
இந்த தளங்கள் எல்லாமே ஒரே மாதிரியான தளங்களை தேடித்தருவதோடு பிரபலமான தேடல்,தொடர்புடைய குறிச்சொல் ஆகியவை மூலமும் இணையதளங்களை பார்க்கும் சேவையை வழங்குகின்றன.
சைட் நெக்ஸ்ட் டோர் இதே ரகம் தான் என்றாலும் மிக அழகாக ஒரே மாதிரியான தளங்களை பக்கத்து வீட்டு தளம் என்று குறிப்பிடுகிறது.தோற்றத்திலும் மாறுபட்டதாக இருக்கிறது.அதோடு இணையதள முகவரியை குறிப்பிட்டு மட்டும் அல்லாமல் தொடர்புடைய சொற்களையும் குறிப்பிட்டு தேடும் வசதியை தருகிறது.
இந்த சேவையை ஏன் பயன்படுத்த வேண்டும் என்று விரிவான விளக்கத்தையும் அளிக்கிறது.இணையத்தில் ஷாப்பிங் செய்யும் போது தொடர்புடைய தளங்களை தேடுவதன் மூலம் போட்டியாளர்களின் தளங்களை தெரிந்து கொண்டு விலை மற்று இதர அம்சங்களையும் ஒப்பிட்டு பார்த்து கொள்ளலாம் என்கிறது இந்த தளம்.
இது வரை அறிந்திறாத தளங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும் சொல்கிறது.
மேலும் இந்த தளத்தில் உரிமையாளர்கள் தங்கள் தளத்தை சமர்பிக்கும் வசதியும் இருக்கிறது.இதன் மூலம் போட்டியாளரின் தளத்திற்கு அருகே தங்கள் தளத்தை இடம் பெறச்செய்யலாம்.
பார்க்கும் தளங்களை பேஸ்புக் அல்லது டிவிட்டர் வாயிலாக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.
———-
—

0 Comments on “ஒரே போன்ற தளங்களை தேட உதவும் இணையதளங்கள்”
எஸ். கே
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி!
gitar dersi
iyi
Pingback: மாற்று இணையதளங்களை தேட! « Cybersimman's Blog
Pingback: மாற்று இணையதளங்களை தேட!. | Cybersimman's Blog
Pingback: இணையதளங்கள் தேட புதிய வழி. | Cybersimman's Blog