வலையில் உலாவும் போது பின்னர் படிக்கலாம் என கட்டுரைகளை இணையபக்கங்களாக சேமித்து வைக்கும் சேவைகள் பல இருந்தாலும் லேட்டர்லூப் அவற்றில் வித்தியாசமானது விஷேசமானது .
காரணம் இந்த சேவை இணையபக்கங்களை உங்கள் செல்போனில் சேமித்து வைத்து கொண்டு நேரம் கிடைக்கும் போது செல் திரை வழியே படிக்க உதவுகிறது.
லேட்டர் லூப்பில் உறுப்பினராக பதிவு செய்து கொண்ட பிறகு இணையத்தில் உலாவும் போது உடனடியாக படிக்க முடியாத எந்த இணையபக்கத்தை பார்த்தாலும் சரி அதனை அப்படியே உங்கள் கணக்கில் சேமித்து வைத்து கொள்ளலாம்.பின்னர் எப்போது தேவையோ அப்போது உங்கள் செல்போன் வழியே அந்த பக்கத்தை படிக்கலாம்.
இங்கே செல்போன் என குறிப்பிடப்படுவது பிரபலமான ஐபோனாகும்.ஆனால் ஐபோன் தவிர பிளாக்பெரி மற்றும் நோக்கியாவின் உயர்தர மாடல்களிலும் செயல்படும்.மற்ற போன்கள் என்றால் இண்டெர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.
ஐபோனில் தானாக பக்கத்தை அணுகலாம்.மற்ர போன்கள் என்றால் அதற்கான லேட்டெர் லூப்பின் செல் வடிவ தளத்தை அணுக வேண்டும்.
இணையபக்கங்களை சேமித்து வைத்து விட்டு அவற்றை மறந்து போய்விடும் இணைய சோம்பல் பலருக்கு வாடிக்கையாக இருக்கும் நிலையில் சேமித்த பக்கங்களை செல்போன் வழியே அணுக முடிவது விமான நிலையத்திலோ அல்லது வேறு இடத்திலோ காத்திருக்கும் போதும் ஓய்வாக இருக்கும் போதும் படிக்க உதவும் அல்லவா?
———

0 Comments on “செல்போனில் இணையதளங்களை படிக்க”
எஸ். கே
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி!