இலவச கல்வி வீடியோக்களுக்கு ஒரு இணையதள‌ம்.

இணையத்திலேயே கல்வி பயிலலாம் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.அதோடு இன்டெர்நெட்டில் வீடியோ பாடங்களையும் தேடி படிக்கலாம் என்பதும் தெரிந்திருக்கலாம்.பிரபலமான் எஐடி பல்கலை உட்பட பல கல்வி அமைப்புகள் தங்கள் பாட திட்டங்களை வீடியோ கோப்புகளாக இடம் பெற வைத்துள்ளன.

இதெல்லாம் தெரியும் தான்,ஆனால் எந்த ஆன்லைன் கோர்சை படிப்பது என்று தெரியவில்லை.நல்ல கல்வி வீடியோக்களை எங்கே பெறுவது என தெரியவில்லை என்னும் மனக்குறை உங்களுக்கு இருந்தால் அதனை போக்குவதற்கு என்றே ஒரு இணையதளம் இருக்கிறது.

ஃபிரி வீடியோலெக்சர்ஸ் என்னும் அந்த தளம் இண்டெர்நெட்டில் காணக்கிடைக்கும் விடியோ பாடங்களை மிக அழகாக ஒரே இடத்தில் தொகுத்து தருகிறது.

நம்மூர் அடிக்கடி வாய வார்த்தையாக கூறி நடைமுறையில் கன்டு கொள்ளாமல் இருக்கும்  இலவச கல்வியை எல்லோருக்கும் கிடைக்கச்செய்வதை நோக்கமாக கொண்டுள்ள இந்த தளம் 20 பல்கலைகளில் இருந்து 35 பிரிவுகளில் 740க்கும் மேற்பட்ட ஆன்லைன் பாடங்கள் மற்றும் 1800 க்கும் பேற்பட்ட விடியோ பாடங்களை வழங்குவதாக பெருமை பட்டுக்கொள்கிறது.

இணையத்தில் படிக்க விரும்புகிறவர்கள் தங்களுக்கு பிடித்தமான பிரிவினை தேர்வு செய்து அதில் உள்ள பாடதிட்டங்களில் பொருத்தமானதில் சேரலாம்.மருத்துவம்,வானியல்,நெட்வொர்கிங்,பொருளாதாரம்,தத்துவம்,பொழி,கம்ப்யூட்டர் என எந்த பிரிவில்  வேண்டுமானாலும் படிப்பில் சேரலாம்.

அதே போல் பலகலைகளில் இருந்தும் தேர்வு செய்து கொள்ளலாம்.அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைகளோடு நம் நாட்டு ஐஐடிக்களுக் இடம்பெற்றுள்ளன.குறிப்பிட்ட பலகலையை கிளிக் செய்ததும் அங்கு வழங்கப்படும் ஆன்லைன் பாடங்களின் பட்டியல் வருகிறது.கோராக்பூர் ஐஐடி பயோடெக்னாலஜி,கம்ப்யூட்டர் அறிவியல் ,தலைமை பண்பு உட்பட பல பிரிவுகளில் பாட வகுப்புகளை வழங்குகிறது.

இதே போல கான்பூர் ஐஐடி சிவில் இஞ்சினியரிங் மற்றும் கணிதம் உடபட பல பிரிவுகளில் இணைய பாடம் நடத்துகிறது.

வணிக கல்வியில் புகழ் பெற்ற ஹார்வர்டு போன்ற பலகலைகளிலும் பயிலலாம்.

குறிப்பிட்ட ஆன்லைட் வகுப்புகள் பற்றிய அறிமுக பகுதியும் தனியே உள்ளது.கேம் தியரி அறிமுகம்,கால்குலஸ் என பலவகையான பாட திட்டங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.

புதிய வகுப்புகள் பற்றியும் தனியே கொடுக்கப்பட்டுள்ளது.
விடியோ பாடங்களை எம்பி3 உட்பட பல வடிவங்களில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம்.

அறிவு தாகம் கொண்டவர்களை இந்த தளம் கண்டேன் கல்லூரியை என உற்சாகம் கொள்ள வைக்கும்.அதிக சிக்கலில்லாத எளிமையான வடிவமைப்பு இந்த தளத்தின் தனிச்சிறப்பு.அதஞ் காரணமாகவே வகுப்புகளையும் வீடியோ படங்களையும் தேடி கண்டுபிடிப்பது மிக சுலபம்.

இணையதள முகவரி;http://freevideolectures.com/

இதே பெயரிலேயே மற்றொரு இணையதளமும் இருக்கிறது.விடியோலெக்சர்ஸ் நெட் என்னும் அந்த தளம் பிரதானமாக வீடியோ படங்களில் கவனம் செலுத்துகிறது.கட்டிட கலையில் துவங்கி தொழில்நுட்பம் வரை பல்வேறு தலைப்புகளில் விடியோ பாடங்களை தொகுத்து வழங்குகிறது.

பேராசிரியர்களின் பெயர்களை வைத்து கொண்டும் பாடங்களை தேடலாம்.பலகலை மாநாடுகள் போன்ற செய்திகளையும் தெரிந்து கொள்ளலாம்.

—————

http://videolectures.net/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இலவச கல்வி வீடியோக்களுக்கு ஒரு இணையதள‌ம்.

  1. Abi

    Thanks for your value information

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *