எளிது,எளிது இணையதளம் அமைப்பது எளிது.ஜாட்டிட் சேவை அப்படி தான் சொல்ல வைக்கிறது.சொன்னது போலவே மிக எளிதாக உங்களுக்கான இணையதளத்தை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது.
மந்திரம் இல்லை,மாயாஜாலம் இல்லை என்பது போல கோடிங் இல்லை;ரிஜிஸ்டிரேஷனும் இல்லை.மிக சுலபமாக இணையதளத்தை அமைத்து கொள்ளலாம்.உறுப்பினராக பதிவு செய்யக்கூட தேவையில்லாமால் ஒரு இணையதளத்தை அமைக்க முடிவது ஆச்சர்யமானது தானே.
அந்த அளவுக்கு இந்த சேவையில் எல்லாமே எளிமை தான்.
டிவிட்டர் பாதி விக்கி மீதி என்று வர்ணிக்க கூடிய இந்த தளத்தில் உள்ளே நுழைந்ததும் நோட்பேடு போன்ற ஒரு பகுதி தோன்றும்.வலைப்பதிவில் டைப் செய்வது போல இந்த பகுதியில் டைப் செய்து விட்டு கிளிக் செய்தால் நமக்கான புதிய தளத்தை உருவாக்கி கொண்டு விடலாம்.
எதையும் டைப் செய்யக்கூட வேண்டாம்.தளத்தை உருவாக்குவது எப்படி என்பதை பார்ப்பதற்காக அப்படியே கிளிக் செய்தும் பார்க்கலாம்.
அதன் பிறகு அந்த பக்கத்திற்கு நாம் விரும்பும் பெயரை கொடுத்துவிட்டு அதில் புகைபடங்கள் அல்லது வீடியோவை இணைத்து கொள்ளலாம்.எழுத்துருவின் அளவு மற்றும் வண்ணங்களையும் மார்ரிக்கொள்ளலாம்.தேவைப்பட்டால் புதிய பக்கத்தை உருவாக்கி கொள்ளலாம்.
உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாதாதால் நமக்கான பக்கத்தின் மீது உரிமை கொண்டாடுவதற்கான வசதி தனியே தரப்பட்டுள்ளது.அந்த இடத்தில் கிளிக் செய்து பாஸ்வேர்டு மற்றும் இமெயிலை சமர்பித்தால் பதில் மெயிலில் இணைய பக்கத்திற்கான நிரந்திர இணைப்பு வந்துவிடும்.
ஒரு வலைப்பதிவை பயன்படுத்துவது போலவே இதனையும் பயன்படுத்தலாம்.வலைப்பதிவை விட சுலபமானது.அதோடு இணைய குறிப்பேடாகவும் பயன்படுத்தலாம்.
இந்த சேவை விக்கியின் தன்மை கொண்டிருப்பதால் நமது பக்கத்தை நணபர்களோடு பகிர்ந்து கொண்டு அவர்களும் திருத்தங்களை மேற்கொள்ள வழி செய்யலாம்.மற்றவர்கள செய்யும் திருத்தங்களை பார்வையிடும் வசதியும் உண்டு.
எனவே கூட்டு முயற்சிக்கு மிகவும் ஏற்றது.
அவரவர் தேவைக்கு ஏற்ப எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம்.
எளிமையான இந்த சேவை பலவிதங்களில் பாராட்டப்படுகிறது.கவிதைகளில் எப்படி ஹைகூவோ அதே போல இணையதள வடிவமைப்பில் இந்த தளம் ஒரு ஹைகூ என்கின்றனர்.
இணையதள முகவரி;http://jottit.com/

0 Comments on “கவிதையாக ஒரு இணையதளம்”
sudarsanan
ennaku sandosham ungal blogspot
cybersimman
மிகவும் நன்றி நண்பரே.
sudarsanan
nandri thiru simman
Giri
Class!
balu
thanks for you
KALPANA K
superrrrrrrrrrrrrrrrrrrrrrrrr