நோயாளிகளுக்கு நிம்மதி

doctor1அமெரிக்க நோயாளிகள் கொடுத்து வைத்தவர்கள். டாக்டருக்காக காத்திருக்கும்போது இனி மருந்து களை விற்பனை செய்ய வருபவர்கள் குறுக்கீடு அதிகம் இருக்காது. அமெரிக்காவில் பின்பற்றப்படும் உத்திகள் உடனடியாகவோ, தாமத மாகவோ இங்கும் இறக்குமதி செய்யப்படும் நடைமுறை மருத்துவ துறைக்கும் பொருந்தி வரும் என்றால், நம்மூர் நோயாளிகளுக்கும் இதே நிம்மதி பிறக்கலாம்.
.
டாக்டரைப் பார்க்க அவரது வீட்டுக்கோ அல்லது கிளினீக் கிற்கோ சென்று காத்திருக்கும் போது, நமக்கு முன்னர் மற்ற நோயாளிகள் காத்திருப்பதை எதிர்கொள்வதோடு அடிக்கடி மருத்துவ பிரநிநிதி குறுக்கே வந்து டாக்டர்களை சந்திப்பதையும் பொருத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

கையில் சூட்கேசோடு கைகட்டியபடி வந்து நிற்கும் இத்தகைய விற்பனை பிரதிநிதிகளை எல்லா நோயாளி களுமே விரோதிகளாகத்தான் பார்ப்பார்கள். மருத்துவர்களும் இவர்களின் குறுக்கீட்டை முழு மனதோடு ஏற்றுக்கொள்கின்றனர் என்று சொல்வதற்கில்லை.

வர்த்தக நிறுவனங்கள் வியாபார நிமித்தம் காரணமாக இப்படி பிரதிநிதிகளை அனுப்பிவைத்து புதிய மருந்துகளை பரிந்துரைக்க வைக்கின்றன என்றால் டாக்டர்கள் தொழில் நிமித்தம் காரணமாக இவற்றை அனுசரித்து போக வேண்டியிருக்கிறது.

போட்டி அதிகரிக்க அதிகரிக்க விற்பனை பிரதிநிதிகள் மருத்துவர்களை முற்றுகையிடுவதும் அதி கரித்து விடுகிறது. இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி நோயாளிகள்தான். ஆனால் அமெரிக்காவைப் பொருத்தவரை இனி இந்த தொல்லை அதிகம் இருக்காதுஎன்று உறுதியாக சொல்கின்றனர். முன்னிருந்ததை விட டாக்டர் அறையில் விற்பனை பிரதி நிதிகளின் குறுக்கீடு குறைந்து வருவதாகவும், வருங்காலத்தில் இது முற்றாக நீங்கிவிடும் வாய்ப்பும் இருப்பதாக கூறுகின்றனர்.

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. 1990க்கு பிறகு அமெரிக்க மருந்து கம்பெனிகள் முழு மூச்சுடன் விற்பனை பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்தன. டேட்டா மானிட்டர் என்னும் அமைப்பின் அறிக்கை படி 42 சதவீதம் இந்த எண்ணிக்கை உயர்ந்தது. ஆனால் 2000க்கு பிறகு இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது.

டாக்டர்கள், நோயாளிகள் இத் தகைய வருகையை விரும்பாதது ஒரு காரணம் என்றால், மருந்தக கம்பெனிகளின் லாபம் பெருமளவு குறையத் தொடங்கியிருப்பது மற்றொரு முக்கிய காரணம். லாபம் குறைந்த நிலையில் அவை விற்பனை பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் குறைத்திருக்கின்றன.

இந்த பின்னணியில் டாக்டர்களை சென்றடைய நேரடியாக மருத்துவ பிரதிநிதிகளைஅனுப்பி வைப்பதை விட இன்டெர்நெட் மூலம் அவர்களை தொடர்பு கொள்வது சுலபமான தாகவும், சிறப்பானதாகவும் இருப்பதாக கருதப்படுகிறது.

நேரடியாக டாக்டர்களை தேடிவரும்போது அதிகபட்சமாக நான்கு நிமிடங்களுக்கு மேல் அவரோடு பேச முடியவில்லை. ஒரே ஒரு நிமிடத்தை மட்டுமே ஒதுக்கும் டாக்டர்கள் பலர் இருக்கின்றனர். இதற்கு மாறாக தொலைபேசியில் பேசிவிட்டு இன்டெர்நெட் மூலம் மருந்துகள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கும்போது பலர் அதிகமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மருந்துகளை அறிமுகம் செய்து விட்டு அதைப்பற்றி மேலும் விவரங்களைஅறிய நிறுவனத்தின் இணையதள முகவரியை குறிப் பிட்டால் டாக்டர்கள், நேரடியாக அங்கு சென்று தங்களுக்கு தேவையான விவரங்களை தெரிந்து கொள்கின்றனர்.

பல முன்னணி நிறுவனங்கள் இந்த உத்தியை பின்பற்றத் துவங்கியுள்ளன. அதுமட்டு மல்லாமல், மருத்துவ பிரதிநிதிகள் தங்களோடு மருந்து தொடர்பான கட்டுரைகள் மற்றும் ஆய்வு வெளியீடுகளை சுமந்து செல்ல வேண்டிய அவசியமும் இல்லை. அவற்றுக்கான இணைப்புகளையும் இன்டெர்நெட் மூலமே வழங்கி விடலாம்.

மருந்து பற்றிய வர்ணனையை வீடியோ பதிவாக்கிஅதனை டாக்டருக்கு அனுப்பி வைக்கும் வழக்கமும் பின்பற்றப்படுகிறது. இமெயில் மூலம் இத்தகைய விவரங்களைஅனுப்பி வைப்பதை டாக்டர்களும் விரும்புகின்றனர்.

இன்று எல்லோருமே இன்டெர்நெட் மூலம் தகவல்களை பெற விரும்பும்போது டாக்டர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? மருத்துவ பிரதிநிதிகள் இன்டெர்நெட் வாயிலாக தங்களை அணுகுவதை அவர்களும் வரவேற்கவே செய் கின்றனர். எனவே அமெரிக்க மருந்து கம்பெனிகள் நேரடியாக விற்பனை பிரதிநிதிகளை அனுப்பிவைப்பதை குறைத்துக் கொள்ள தொடங்கியிருக்கின்றன.

தொழில்நுட்பம் அதைவிட சிறப்பான வழியை காண்பித் திருக்கும்போது இந்த பழைய வழி காலாவதியாகிவிட்டதாக மருத்துவ துறை கருதுகிறது. அமெரிக்காவில் பிரபலமாகும் இந்த உத்தி விரைவில் இந்தியா வுக்கும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கலாம்.
——–

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “நோயாளிகளுக்கு நிம்மதி

  1. அரசு மருத்துவமனைகளை போல் தனியார் மருத்துவமனைகளிலும் மருந்துக்களை generic nameல் மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் என்ற சட்டம் முதலில் கொண்டு வர வேண்டும்

    Reply
  2. RAM

    I have been in this industry for the past 20 years, worked thru ladders, in various corporate companies, in pharmaceutical marketing. In “INDIA”, the implemetation of the said American strategy in 100% is not possible. Because, already, we do have the same infrastructure, as mentioned in the article…that corporate companies, communicating with Doctor’s thru the advancement of internet, and Specialists themselfs…do go to the respective web site and gather all required informations….according to their speciality…about medicine, surgery…and other advancements in the medical field. Lots of eminent doctors are now doing tele-surgeries also in the majorcities of tamil nadu. Nothing is new for us. We are pioneers in updating the advancements of medical technologies, over a period of time. However, still all the corporate companies requires sales officers and other ladders….to launch new products, and to ensure the business of the existing products…with the respective doctors. In this regard, doctors, also require informations in person about medical advancements,new launches and other details like seminars, state wide,all india conferences, which is normally passed on thru company people only. In the nut shell, no company can function in INDIA…without field force in different ladders, in pharmaceutical marketing, should meet doctors in regular intervels,as a courtesy, and to thank him for the Rx supports. This routine, will never get stopped,irrespective of the scientific advancement, internet communications..etc, because its a vicious cycle. Because, in normal words…we describe pharmaceutical marketing as …”RELATIONSHIP MARKETING”…I am sure, everybody, who knows the industry will agree these points…

    Reply
  3. aஅப்பிடி எண்ண நேயாளிகளுக்கு நின்மதிதான் சரி தொடர்ந்து எழுதுங்கhttp://nallurran-nallur.blogspot.com/

    Reply
  4. tsr

    The article highlights the irritations faced by the patients at the site of Medical Representatives as the main reason pushing the time constraint to the second spot. I was in the field representing a leading Indian pharma. Though, updates on new products and their pharmacokinetics are available for Doctors, the question is ‘do they have time to STUDY and UNDERSTAND. These Reps are helpful in briefing the features and benefits of products specific to Doctors interests. That way Doctors also can get clarifications. Price comparison, Product availability and personalized service are additional contributions.
    This marketing industry has been offering jobs to millions of youngsters who are smart, intelligent and understand the mood prevailing in the clinic and the doctor’s cabin before they approach.
    The world is witnessing the wrong policies practiced in US and how it bothers the rest of the world.
    Pray this scheme doesn’t make its entry here.
    Time is available for every individual.
    Reps are not going to interfere life saving treatment.
    (Besides, I believe doctors expect Reps for one more reason..which is omni present in every field…that of expecting something in return for prescribing a product…and this cannot take place on electronic communication.)
    tsr

    Reply
  5. //கையில் சூட்கேசோடு கைகட்டியபடி வந்து நிற்கும் இத்தகைய விற்பனை பிரதிநிதிகளை எல்லா நோயாளி களுமே விரோதிகளாகத்தான் பார்ப்பார்கள். //

    நான் கூட இப்படி நினைத்துள்ளேன்..வரிசையில் நாம் காத்திருக்கும் போது இவர்கள் எளிதாக உள்ளே சென்று விடுவார்கள்..

    Reply
  6. டாக்டர்கள் இவர்களுக்கென்று ஒரு கிழமையோ நேரத்தையோ

    ஒதுக்கலாம்.

    ஆனால் இந்தியாவில் கமிஷன் பேரம் தான் என்றும்,

    Percentage ரேட் பேசிதான் புதிய மருந்துகள்

    அறிமுகப்படுத்தபடுகிறது என்று 20 வருட இதே துறையில்

    பண்ணியாற்றும் நண்பன் கூறுகிறான்.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *