புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளவும் புகைப்படங்கள் மூலம் நண்பர்களை தேடிக்கொள்ளவும் ஃபிளிக்கர் தளம் ஒன்றே போதுமானது.ஆனாலும் ஃபிளிக்கருக்கு போட்டியாக பல புகைப்பட பகிர்வு தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த பட்டியலில் வால்போஸ்ட் புதிதாக சேர்ந்திருக்கிறது.
ஒவ்வொரு தளத்திற்கும் அதன் அடையாளத்தை பறைசாற்றும் வகையில் ஒரு கோஷம் இருக்கும் அல்லவா?அந்த வகையில் இந்த தளம் ஞாபகங்கள் முடிவதில்லை என்கிறது.அதாவது இணையவாசிகள் தங்கள் வாழ்க்கையின் ஞாபகங்களை புகைப்படங்களாக பகிர்ந்து கொள்ளவும் சேமித்து வைக்கவும் இந்த தளம் வழி செய்கிறது.
புகைப்படங்கள் மட்டும் அல்ல வீடியோ கோப்புகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.
புகைப்படங்கள் ஏதோ விருதுக்குறிய வகையில் இருக்க வேண்டும் என்றில்லை.அன்றாட வாழ்க்கையில் எடுக்கப்பட்ட சாதாரண படங்களாகவும் இருக்கலாம்.உங்கள் வாழ்க்கையின் அருமையான தருணங்களை புகைப்படங்களாக மாற்றி சேமித்து வைத்து கொள்ள உதவுவது எங்கள் நோக்கம் என்கிறது வால்போஸ்ட்.
இந்த படங்களை நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளலாம்.பேஸ்புக்கில் இருப்பது போல ஒரு அப்டத்தை பார்த்து ரசித்த பின்னர் அதனை பகிர்ந்தவரை நண்பராக்கி கொண்டு பின்தொடராலாம்.
இதனை ஜி பி தான் என்ற வரையறை இல்லாமல் எத்தனை படங்களை வேண்டுமானாலும் சேமித்து கொள்ளலாம் என அனுமதி தருகின்றனர்.
வடிவமைப்பு அழகாக உள்ளது.பகிரப்பட்ட படங்களை அதற்குறைய குறிச்சொற்கள் வாயிலாக தேடலாம்.ஆனால் இப்போது தான் துவங்கியுள்ளது என்பதால் அதிக பயனாளீகளை பார்க்க முடியவில்லை.
ஃபிளிக்கரின் பக்கத்தில் கூட இந்த தளத்தால் நெருங்க முடியாது என்றே தோன்றுகிறது.
நிறக ஃபிளிக்கர் இப்போது வீடியோ பகிர்வு வசதியையும் இணைத்துள்ளது தெரியுமா?
—————-

0 Comments on “புகைப்படங்களுக்கான பேஸ்புக்”
எஸ்.கே
மிக்க நன்றி! இணைய முகவரி இல்லையே!
cybersimman
இணைப்பு கொடுத்துவிட்டேன் நண்பரே.
balu
thanks i want website address
cybersimman
http://www.wallpost.com
எம்.கே.முருகானந்தன்
நன்றி. உபயோகமான பதிவு.
callezee
this way of impression is better…