உலகில் எங்கெல்லாம் கடற்கரைகள் இருக்கின்றன,அந்த கடற்கரைகள் எப்படி இருக்கின்றன என்று அறிவதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் பீச்சிஷ்னரி(கடற்கரைகளுக்கான அகராதி) இணையதளம் உங்களை உற்சாகத்தில் ஆழ்த்தக்கூடும்.
இந்த தளம் உலக கடற்கரைகளை அழகாக படம் போட்டு காட்டுகிறது.அதாவது கூகுல் வரைபடத்தின் மீது கடற்கரை அமைந்திருக்கும் இடங்களை சுட்டிகாட்டுகிறது.இந்த தளத்தில் கடற்கரைகளை தேடுவதற்கும் சுலபமான வழி இருக்கிறது.
வரைபடத்தின் கீழே உள்ள உங்கள் கடற்கரையை கண்டுபிடியுங்கள் என்னும் பகுதியில் நாடுகளின் பட்டியல் இடம்பெறுகிறது.அந்த பட்டியலில் இருந்து உங்களுக்கு தேவையான நாட்டினை தேர்வு செய்து கொண்டு அநாட்டில் எந்த பகுதி எந்த கடற்கரை என்பதை குறிப்பிட்டீர்கள் என்றால் குறிப்பிட்ட அந்த கடற்கரை பற்றிய விவரங்கள் தோன்றுகின்றன.
கடற்கரையின் புகைப்படம்,அதன் அறிமுக குறிப்பு,அருகே உள்ள ஓட்டல் போன்ற இடங்கள்,அருகே உள்ள கடற்கரைகள்,போன்ற தகவல்கள் இடம்பெறுகின்றன.
இந்தியாவில் இருந்து தமிழகம் உள்ளிட்ட நான்கு பகுதிகளும்,தமிழகத்தில் மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையும் பட்டியலிடப்பட்டுள்ளன.ஆனால் புகழ் பெற்ற மெரினா கடற்கரையின் புகைப்படம் இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால வருந்தும் தமிழ் நெஞ்சங்கள் மெரினாவின் புகைப்படத்தை இங்கு இடம்பெற வைக்கலாம்.அதே போல மெரினா பற்றிய அறிமுக குறிப்புகளையும் சேர்க்கலாம்.
அந்த வகையில் இந்த தளத்தில் விடுபட்டுள்ள கடற்கரைகளையும் சேர்க்கலாம்.
உலகில் உள்ள கடற்கரைகளை பற்றிய தகவல்களை தேடுவது ஒன்றும் பெரிய விஷயமல்ல.கூகுலில் தேடினால் எல்லா தகவல்களும் கிடைத்துவிடும்.ஆனால் இந்த தளம் எல்லா கடற்கரைகளையும் ஒரே இடத்தில் தருவதோடு பெயர் தெரியாத மற்றும் இதுவரை அறிந்திராத கடற்கரைகளையும் அறிமுகம் செய்கிறது.
வசதி படைத்தவர்கள் இந்த தளத்தை பார்த்து விட்டு விரும்பிய கடற்கரைகளுக்கு சென்று வரலாம்.மற்றவர்கள் உடகார்ந்த இடத்திலிருந்தே உலக் கடற்கரைகளை வலம் வரலாம்.
———–

0 Comments on “உலக கடற்கரைகளை அறிவோம் வாருங்கள்.”
shafi
URL engeppa kanom