சில்லரை தட்டுப்பாட்டால் திண்டாடிய அனுபவம் எல்லோருக்குமே இருக்கும். கோயில்களுக்கு செல்லும் போது யாசகம் கேட்பவர்களுக்கு கொடுக்கலாம் என்று பாக்கெட்டிலோ பர்ஸிலோ கையை விட்டுப் பார்த்தால் சோதனையாக சில்லரை இல்லாமல் இருக்கும்.
பெட்டிக்கடையில், வணிக வளாகங்களில், ரெயில் நிலையங்களில், ரேஷன் கடைகளில் என பல இடங்களில் சில்லரை தட்டுப்பாட்டை எதிரகொள்ளும் அனுபவம் ஏதாவது ஒருநேரத்தில் எல்லோருக்குமே ஏற்பட்டிருக்கும்.
இந்த அனுபவம் பொதுவானதுதான் என்றாலும், இந்த சிக்கலுக்கு தீர்வாக ஒரு இணையதளம் அமைக்கலாம் என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
அமெரிக்காவைச் சேர்ந்த ரெயான் எரிஸ்மேன் என்பவர் இப்படி சில்லரை இல்லாமல் திண்டாடிய போது, இதற்காகவே என்று ஒரு இணைய தளம் அமைத்தால் என்னவென்று நினைத்து பார்த்திருக்கிறார். அதன் பயனாக, இனி யாரும் இப்படி சில்லரை இல்லாமல் திண்டாடக் கூடாது என்ற நிலையை உருவாக்கும் வகையில் ஒரு இணைய தளத்தையும் அவர் உருவாக்கி இருக்கிறார்.
எங்கே என் சன்மானம்? (வேர் ஈஸ் மை டிப்ஸ்) என்று கேட்கக்கூடிய வகையில் அமைந்துள்ள அந்த இணைய தளம் கையில் பணம் வைத்திராத நிலையிலும் சன்மானம் கொடுப்பதற்கான சுலபமான வழியை ஏற்படுத்தி வருகிறது.
அதாவது கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு போல டிப்ஸ் கார்டை உருவாக்கி அதன் மூலமாக சன்மானம் வழங்க இந்த தளம் வழி செய்கிறது. எப்படியென்றால் இந்த தளத்தில் சன்மான அட்டைகளை அதன் உறுப்பினர்கள் வாங்கி வைத்துக் கொள்ளலாம். வெளியே செல்லும் போது விசிட்டிங் கார்டு, கிரடிட் கார்டு ஆகியவற்றோடு இந்த கார்டையும் வைத்துக்கொண்டால் போர்ட்டர்கள், ஓட்டல் ஊழியர்கள் போன்றவர்களின் சேவையை பயன்படுத்திக் கொள்ளும் போது அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த கார்டை அவர்களிடம் கொடுத்து விடலாம்.
இப்படி சன்மான அட்டை பெறுபவர்கள் பின்னர் இணைய தளத்திற்கு வருகை தந்து அதற்காக கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்களுக்கான சன் மானத்தை பெற்றுக்கொள்ளலாம். இணையத்தின் மூலமாக பொருட்களை வாங்கும்போது பணம் செலுத்துவது போலவே சன்மான அட்டை கோரிக்கைக்கான தொகையையும் வழங்கி விடலாம். மிகவும் எளிதான சேவை தான். ஆனால் நடைமுறையில் மிகுந்த பயனை அளிக்கக்கூடியது.
யோசித்துப் பாருங்கள், ஓட்டலிலோ, வணிக வளாகங்களிலோ, நம்முடைய சுமையை தூக்கி வந்து உதவும் நபருக்கு சன்மானமாக சிறு தொகையை அளிக்க விரும்பு வோம். அப்போது சில்லரையாகவோஅல்லது நோட்டாகவோ கையில் பணம் இல்லாவிட்டால் சங்கடமாக போகும். பல நேரங்களில் உதவிய நபருக்கும் வாய்விட்டு கேட்க முடியாமல் போகலாம். யாரும் கழுத்தை பிடித்து எங்கே என் சன்மானம்? என்று கேட்காவிட்டாலும் கூட மனதுக்குள் இப்படி நினைக்கத் தோன்றும். சிலர் வெறுப்படைந்து முதுகுக்கு பின்னே புலம்பவும் கூடும்.
இந்த நிலையை தவிர்க்கும் வகையில் வேர் ஈஸ் மை டிப்ஸ் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தை உருவாக்கிய எரிஸ்மேன் தனது சொந்த அனுபவத்தின் அடிப்படையில் சன்மானம் வழங்குவதற்கான இணைய வழியின் சேவையை உணர்ந்து இந்த தளத்தை அமைத்திருக்கிறார். ஒருமுறை அவர் ஆர்லாண்டோ நகரில் இந்த ஓட்டலில் தங்கியிருக்கிறார். அப்போது ஓட்டல் ஊழியர் அவரது சூட்கேஸ் உள்ளிட்ட சுமைகளை அறையில் கொண்டு வந்து வைத்திருக்கிறார். அந்த சேவைக்கு சன்மானம் தரலாம் என்று பாக்கெட்டில் தேடிய போது பணம் இல்லாமல் இருந்திருக்கிறது.
அந்த ஊழியரை ஏமாற்ற விரும்பாத எரிஸ்மேன் அருகே இருந்த ஏடிஎம் மையத்திற்கு சென்று 10 டாலர் பணத்தை எடுத்து சன்மானமாக வழங்கினார். இதற்காகஅவர் ஏடிஎம் சேவை கட்டணமாக 2.50 டாலர்களும், பிற வங்கி ஏடிஎம்மை பயன்படுத்தியதற்காக மேலும் 2.50 டாலர்களை செலுத்த வேண்டி இருந்தது. அப்போதுதான் அவருக்கு இந்த இணைய யுகத்தில் சன்மானம் வழங்கவும் உதவுக்கூடிய ஒரு இணைய தளம் இருந்தால் எப்படி இருக்கும் என தோன்றியது. இந்த எண்ணத் தோடு இரவு முழுவதும் யோசித்து வேர் ஈஸ் மை டிப்ஸ் இணைய தளத்தை உருவாக்கினார். கையில் ரொக்கம் இல்லாமலேயே உங்கள் தாராள மனதை வெளிப் படுத்துங்கள் என்ற கோஷத்தோடு இந்த தளத்தை அவர் உருவாக்கி இருக்கிறார். இணைய தள முகவரி: www.wheresmytip.com

0 Comments on “எங்கே என் சன்மானம்? கேட்கும் இணையதளம்”
IT Tweets
Thanks simman.
cybersimman
welcome