ஒரு இணைய தளத்தின் மீது உங்களுக்கு எதற்காக வேண்டுமா னாலும் கோபம் வரலாம். ஒரு சில இணைய தளங்களின் மீது தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு கோபம் பொங்கவும் செய்யலாம்.
.
குறிப்பிட்ட சேவை, செயலாக் கம் பெறாததால் கோபப்படலாம். எதிர்பார்த்த தகவல் இல்லாததா லும் கோபம் வரலாம். முக்கிய கட்டுரை அல்லது பயனுள்ள விவரம் சந்தாதாரர் களுக்கு மட்டும் என சொல்லப் படுவதால் வெறுப்படையலாம். இப்படி எத்தனையோ காரணங்களினால் இணையவாசிகள் இணைய தளங்களின் முன் முகம் சிவக்க அமர்ந்திருக்கலாம்.
நீங்களே ஒரு இணையவாசி என்ற முறையில், இது போன்ற அனுபவங்கள் உங்களுக்கே கூட ஏற்பட்டிருக்கலாம். விஷயம் என்ன வென்றால் அவ்வாறு கோபம் ஏற்படும் போது, ஆற்றாமையின் பாதை யில் செல்லாமல், நின்று நிதானமாக அந்த தளத்தின் மீது உங்கள் கோபத்தை வெளிப் படுத்த வழியிருக்கிறது என்பதே.
இணைய தளங்கள் மீதான கோபத்தை தணித்து கொள்வதற் காக வென்றே ஒரு இணைய தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை இணைய தளம் என்று சொல்வதை விட இணைய விளையாட்டு என்று சொல்வது பொருத்தமாக இருக்கும்.
நெட் டயாஸ்டர் என்னும் பெயரி லான அந்த தளம், ஒரு விரல் அசைப்பில் அதாவது ஒரு கிளிக் கில் உங்களுக்கு பிடிக்காத தளங் களை அழியுங்கள், நாசமாக் குங்கள், சின்னா பின்னமாக்குங் கள் என்று அழைப்பு விடுகிறது.
நிஜ வாழ்க்கையில் கோபத்தை காட்டுவ தற்கென்றே எண் ணற்ற வழிகளை நாம் கையாள்கிறோம். அவற்றையெல்லாம் இணைய தளங்களின் மீது நாம் பிரயோகிக்க லாம். அதற்கான வழியை இந்த தளம் செய்து தருகிறது.
உங்களை கொதித்து எழச்செய்த தளத்தின் மீது தக்காளியை வீசி எறிந்து, அதன் முகப்பு பக்கத்தை எல்லாம் கரையாக்கலாம். சுவரொட்டி மீது சாணி பூசுவது போல, முகப்பு பக்கத்தில் சேறாக்கலாம்.
இல்லை என்றால் ரம்பம் கொண்டு அறுப்பது போல முகப்பு பக்கத்தை சுக்குநூறாக்க லாம். லேசர் கதிர் கொண்டு ஹைடெக் முறையில் இணைய தளத்தை சல்லடை யாக்கலாம்.
இப்படி விதவிதமான வழிகளில் இணைய தளங்கள் மீது கோபத்தை கொட்டு வதற்கு நெட் டயாஸ்டர் வழி செய்து தருகிறது.
ஆகவே இணைய தளம் ஏற்படுத்திய வெறுப்போடு மற்ற காரியங்களுக்கு செல் லாமல் கோபத்தை எல்லாம் கொட்டி ரிலாஸ்சாகி விட இந்த தளம் உதவலாம். ஒருமுறை இந்த தளத் தில் உலாவி, எப்படி எல்லாம் இணைய தளங்களை சேதப்படுத்தலாம் என்பதை பார்த்தால் ஒரு விதத்தில் மகிழ்ச்சி யாக இருக்கும். என்றாலும் இன்னொரு புறத்தில் இப்படி செய்வது நியாயமா என்னும் குற்ற உணர்வும் ஏற்படும்.
ஆனால் ரொம்பவும் கூனி குறுக வேண்டிய அவசியம் இல்லை. காரணம் இணைய தளங்களை நிஜமாகவே நாம் சேதமாக்கப்போவதில்லை. இணைய தளத்தின் முகப்பு பக்கத்தை நகல் எடுத்து, அதன் மீதுதான் கோபத்தை வெளிக் காட்ட போகிறோம்.
இந்த நகலை, சம்பந்தப்பட்ட இணைய தளத்துக்கே அனுப்பி வைக்கலாம். அல்லது நம்மு டைய நண்பர்களுக்கே அனுப்பி வைக்கலாம். எல்லாம் பாதிப்பு இல்லாத வகையில் பழி தீர்த்து கொள்ளும் சுவாரஸ்யமான வழிதான்.
இந்த தளத்தால் என்ன பயன் என்று கேட்கலாம். கோபத்துக்கு வடிகால் என்பதோடு, தளத்தின் வடிவமைப்பாளர்கள், தங்கள் தளத்தில் உள்ள குறைகளை புரிந்து கொண்டு திருத்தி கொள்ளவும் இது கை கொடுக்கும்.
———–
link;
www.netdisaster.com

0 Comments on “கோபத்திற்கு கிளிக் செய்யவும்”
கிரி
ஹா ஹா ஹா சூப்பர்
நான் ஒரு தளத்தை இப்படி செய்தேன்..என்ன தளம் என்று கேட்கப்படாது 🙂
hajan
ஆக அசத்திறீங்களே அசத்துங்க
sharun
Fantastic…I’ll try out and come back…
anbudan aruna