உதாரணங்களுக்காக ஒரு இணையதளம்.

அரிசி மூட்டையிலிருந்து சிதறிய நெல்மணிகள் போல்…என்று துவங்கும் ஆத்மாநாமின் இன்றைய எதிர்கால நிஜம் என்ற கவிதையின் வரிகளான
“இவற்றை போன்று இன்னும் ஆயிரக்கணக்கான போல்கள்’ வரிகள் தான் 10எக்சாம்பில்ஸ் இணையதளத்தை பார்த்ததுமே நினைவுக்கு வருகின்றன.

இந்த தளம் கவித்துவமானதோ அல்லது கவிதை தொடர்பானதோ அல்ல என்றாலும் ஆதமாநாம் சொல்வது போல இன்னும் பல போல்களை அறிந்து கொள்ள இந்த தளம் உதவுகிற‌து.அதாவது உதாரண‌ங்களை முன் வைக்கிறது இந்த தளம்.

உதாரணமாக அஜெக்ஸ் போன்ற கம்ப்யூட்டர் மொழிகள் வேறு எவை என்ற விவரம் தேவையா ஏசிஎஸ்,ஜாவா,எச்டிஎமெல்,பிஎச்பி போன்ற மொழிகளை இந்த தளம் முன் வைக்கிறது.

இதே போல எத்தனை விதமான கொண்டாட்டங்கள் இருக்கின்றன என்ற சந்தேகம் உண்டாகிறதா,பிறந்த நாள் கொண்டாட்டம்,திருமண நாள் கொண்டாட்டம் ,பட்டமளிப்பு விழா கொண்டாட்டம் என்று பலவகையான கொண்டாட்டங்கள் பட்டியலிடப்படுகின்றன.

பல்வேறு தலைப்புகளின் கீழ் பல்வேறு வகையான உதாரணங்கள் இதே போல இடம் பெற்றுள்ளன.

ஆங்கிலத்தில் உள்ள கிரேக்க மொழி சொற்கள்,பெயர்சொற்கள்,காதல் கடிதங்களின் கடைசி வரிகள் என்று எண்ணற்ற உதாரணங்களை பார்க்கலாம்.

இந்த உதாரணங்களால் என்ன பயன் என்று கேட்கலாம்.உதாரணத்திற்கு அலுவல் நிமித்தமாக கடிதம் எழுதும் போது வழக்கமாக முடிக்கும் வார்த்தைக்கு மாறாக ஒரு புதிய வார்த்தையை பயன்படுத்த விரும்பினீர்கள் என்று வைத்து கொள்வோம் அந்த வார்த்தையை போலவே பொருள் தரக்கூடிய சொற்களை தேடுவீர்கள் அல்லவா?அந்த தேடலுக்கான விடையை தான் இந்த உதாரணங்கள் தருகின்றன.

பள்ளி அல்லது கல்லூரி மாணவர்கள் வீட்டுப்பாடம் எழுதும் போது,எழுத்தாளர்கள் புதிய கட்டுரைக்கான ஆய்வில் ஈடுபட்டிருக்கும் போது என பல்வேறு சூழ்நிலையில் இந்த தளத்தை பயன்ப்டுத்தி கொள்ளலாம்.

இவ்வள‌வு ஏன் திடீரென நம‌க்கே கூட பல சந்தேகங்கள் வரலாம்.நல்ல அடைமொழிகள் தேவைப்படலாம்.பிரபலமான பிரயோகங்களில் சந்தேகம் வரலாம்.அப்போதெல்லாம் இந்த‌ தளத்தை பயன்படுத்தலாம்.ஆர்வம் இருப்பவர்கள் புதிய உதராணங்களை தெரிந்து கொள்வதற்காகவும் இந்த தளத்தை பயன்படுத்தலாம்.

அதற்கேற்ப இணையவாசிகளின் பங்களிப்போடு தான் இந்த தளம் உருவாகி வருகிறது.புதிய உதாரணம் அறிந்தவர்கள் அவற்றை இந்த தளத்தில் சமர்பிக்கலாம்.உதாணம் தேவைப்படுபவர்கள் அதற்கான கோரிக்கையையும் சமர்பிக்கலாம்.

ஏற்கனவே சமர்பிக்கப்பட்டுள்ள உதாரணங்கள் குறித்து கருத்துக்களை தெரிவிக்கலாம்.இப்படி உறுப்பினர்களை கவரக்கூடிய அம்சங்கள் நிறைந்திருக்கின்றன.

முதல் முறையாக இந்த த‌ளத்தை பார்ப்பவர்கள் அட உதாரணங்களில் இவ்வளவு இருக்கின்றனவா என்று வியந்து போகும் அளவுக்கு இந்த அம்சங்கள் சுவாரஸ்யம் அளிக்ககூடியவையாகவும் உள்ளன.

உதாரணங்களை பலவிதங்களில் தெரிந்து கொள்ளலாம்.பிரபலமான உதாரணங்கள் ,சமீபத்தில் சமர்பிக்கப்பட்ட உதாரணங்கள் என்று தனிதனியே பட்டியலிடப்பட்டுள்ளன.பிரபலமான உறுப்பினர்,அதிக உதாரணங்களை சமர்பித்தவர்கள் போன்ற தலைப்புகளிலும் உதாரணங்களை அணுகலாம்.

எல்லாவற்றுக்கும் மேல் எந்த‌ உதாரணம் தேவையோ அதனை குறிப்பிட்டு  தேடும் வ‌சதியும் இருக்கிற‌து.

இணையயதள முகவரி;http://www.examples10.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உதாரணங்களுக்காக ஒரு இணையதளம்.

  1. மிகவும் பயனுள்ள தளம்,
    நன்றி நண்பரே.

    Reply
  2. http://www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website http://www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here —— > http://www.classiindia.com

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *