புக்மார்கிங் சேவை எளிமையானதாக இருக்க வேண்டும்.அதாவது தளங்களை பார்க்கும் போதே அவற்றை சேமித்து வைக்க கூடியதாக இருக்க வேண்டும்.அதொடு புக்மார்கிங் சேவை அழமானதாக இருந்தாக வேண்டும்.ஆழமானது என்றால் அர்த்தம் பொதிந்த்தாக இருக்க வேண்டும்.அதாவது அவற்றின் மூலம் உங்களுக்கு பயனளிக்க கூடிய புதிய தளங்களை அறிமுக செய்து கொள்வதற்கான வசதி இருக்க வேண்டும்.
இந்த இரண்டு அம்சங்களையும் நல்ல புக்மார்கிங் சேவைகாக இலக்கனம் என்று வைத்து கொண்டால் இந்த பிரிவில் புதிதாக நுழைந்திருக்கும் ரிங்குவிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கலாம்.
மற்றுமொரு புக்மார்கிங் சேவையா என்று இயல்பாக தோன்றக்கூடிய அல்ட்சியத்தை மீறி ரிங்கு இணையவாசிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே அமைந்திருக்கிறது.
இணையத்தில் உலா வரும் போது கன்ணில் படும் நல்ல இணையதளங்களை பின்னர் பார்த்து கொள்ளலாம் என குறித்து வைக்கும் பழக்கம் கொன்டவர்களை முதல் பார்வையிலேயே வளைத்து போடும் வலையில் ரிங்கு சேவை சிறப்பாகவே அமைந்திருக்கிறது.
ர்ங்குவில் உறுப்பினராக சேர்ந்துவிட்டால் அதன் பிறகு புக்மார்கிங் செய்வது,அதாவது நல இணையதளங்களை சேமித்து வைப்பது என்பது மிகவும் எளிது.உண்மையில் பயனாளிகல் எதுவுமே செய்ய வேண்டாம்.இதற்காக என்றே டூல்பார் குறுக்கு வழி தரப்பட்டுள்ளது.அதனை பயன்படுத்தி புக்மார்கிங் செய்து கொள்ளலாம்.அதற்கு முன்பாக ஒரு விஷயம்.
உறுப்பினராக சேரும் போது நீண்ட படிவம் தேவையில்லாத கேள்விகள் என்றெல்லாம் வெறுப்பேற்றாமல் சுலபமான வழிமுறையை வைத்துள்ளனர்.
இந்த எளிமையான அணுகுமுறையால் இந்த சேவையை பயன்படுத்துவது உற்சாகத்தை தரலாம்.
தளங்களை புக்மார்கிங் செய்யத்துவங்கிய பிறகு தான் இந்த சேவையின் மகத்துவமே ஆரம்பமாகிறது.புக்மார்க் செய்த இணைப்புகளை தொடர்புடைய குறிசொற்களை கொண்டு டேக் செய்து கொள்ளலாம்.இதன் பயனாக இணைப்புகள் குவிந்த பிறகும் நமக்கு தேவையானதை தேடி எடுப்பது சுலபமாக இருக்கும்.
இந்த இணைப்புகளை உங்களுக்கானதாக மட்டுமே வைத்து கொள்ளலாம்.அல்லது நீங்கள் விரும்பினால் மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.இதன் மூலம் நாம் பார்த்த நல்ல தளங்களை மற்றவர்களுக்கும் அறிமுக செய்யலாம்.இதே போல மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் நல்ல தளங்களை நாமும் அறிமுகம் செய்து கொள்ள முடியும்.
பேஸ்புக் பிரியர்கள் பேஸ்புக் மூலமும் இணைப்புகளை பகிர்ந்து கொள்ளலாம்.டிவிட்டர் மூலமும் பகிரலாம்.
இந்த தளத்தில் மற்றுமொரு விஷேச வசதியும் உண்டு.பகிர்ந்து கொள்ளப்படும் இணைப்புகள் வரிசையாக பட்டியலிடப்படுகின்றன.இணையவாசிகளின் வாக்குகள் அடிப்படையில் இந்த பட்டியல் அமைந்துள்ளது.நாமும் கூட வாக்களிக்கலாம்.பல்வேறு தலைப்புகளின் கீழும் இணைப்புகளை தேடிப்பார்க்கலாம்.
அந்த வகையில் இந்த தளம் புக்மார்கின் பகிர்வுகளூக்கான டிக் அல்லது தமிழ்ஷ் என்று சொல்லலாம்.
எல்லா இணைப்புகளையும் அலச விரும்பாதவர்கள் தங்களுக்கென குறிப்பிட்ட குறிச்சொற்களை தேர்வு செய்து கொண்டு அவை தொடர்பான இனைப்புகளை மட்டுமே பின்தொடரலாம்.
ஆக இப்போதே இந்த தளத்தை புகார்க் செய்து கொள்ளலாம்.
இணையதள முகவரி;http://www.rinnku.com/default.aspx

0 Comments on “புத்தம் புதிய புக்மார்கிங் சேவை.”
Rathnavel Natarajan
நல்ல பதிவு.
புதிய விஷயம் கற்றுக்கொண்டேன்.
வாழ்த்துக்கள்.