வாழ்க்கையே ஒரு டெஸ்க்டாப்

நவீன வாழக்கையின் ஒரு அங்கமாக மாறியுள்ள கம்ப்யூட்டர்களின் அடையாளமான டெஸ்க்டாப்பிற்குள் வாழக்கையை அடக்கி விட முடியாதுதான். ஆனால் உங்கள் வாழ்க்கையை டெஸ்க்டாப் கொண்டு அழகாக நிர்வகிக்க  முடியும். அதைத்தான் லைப் டெஸ்க் டாப் செய்கிறது.
டெஸ்க்டாப் என்றதும் உங்கள் வீடு அல்லது அலுவலக மேஜை மீது வீற்றிருக்கும் டெஸ்க்டாப் அல்ல. உலகின் எந்த மூலையில் இருந்தாலும் இன்டர்நெட் மூலம் அணுகக்கூடிய இணைய டெஸ்க்டாப்.
இணைய டெஸ்க்டாப் என்று
சொன்னதும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில் செயல்படும் வர்சுவல் பிசி ரகத்தைச் சேர்ந்த இன்னொரு சேவையோ என்று நினைத்து விட வேண்டாம்.
இந்த லைப் டெஸ்க்டாப் புதிய
சேவை. புதுமையானதும் கூட.
தினசரி வாழ்க்கையை ஒருங்கிணைத்துக்கொள்ள உதவக்கூடிய அனைத்து  சேவைகளையும் உள்ளடக்கியதாக  இந்த லைப் டெஸ்க்டாப் அமைந்துள்ளது.
லைப் டெஸ்க்டாப் டாட் காம் தளத்தில் நுழைந்து நீங்களும் உங்களுக்கான இணைய டெஸ்க்டாப்பை உருவாக்கிக் கொண்டால் அதன் பிறகு மிகச்
சுலபமாக அதன் மூலமே வாழ்க்கையை நிர்வகித்துக் கொள்ளலாம்.
இன்று செய்து முடிக்க வேண்டிய செயல்களை குறித்து வைப்பதில் துவங்கி, பிறந்த நாள்களை மறக்காமல் இருப்பது, முக்கிய நிகழ்வுகளை குறித்து வைப்பது, மனதில் தோன்றும் எண்ணங்களை மறதியால் இழக்காமல் பாதுகாப்பாக பதிவு செய்து வைப்பது என தினசரி வாழக்கையை ஒருங்கிணைப்பதற்கு தேவையான
சேவைகளை எல்லாம் இந்த டெஸ்க்டாப் வழங்குகிறது.
நாள்தோறும் செய்ய வேண்டியவற்றின் குறித்து வைக்க உதவும் இணைய குறிப்பேடுகளாக விளங்கக்கூடிய தளங்களுக்கு இன்டெர் நெட்டில் பஞ்சமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
அதேபோல, பிறந்தநாள்களை நினைவுபடுத்தும் சேவைகளுக்கும் குறைவில்லை. நாட்காட்டியாக செயல்படும் தளங்களும் இருக்கின்றன. அப்படி இருக்க இவற்றையெல்லாம் வழங்கும் லைப் டெஸ்க்டாப் தளத்தில் அப்படி என்ன புதுமை என்று கேட்கலாம்.
ஒரே குடையின் கீழ் அனைத்து பொருட்களும் கிடைக்கும் என்று சிலாகித்து சொல்வதைப் போல, ஒரே இடத்தில் இவை அத்தனையும் வழங்குவதுதான் இந்த தளத்தின் சிறப்பு அம்சம்.
அதிலும் மிக அழகாக பயன்படுத்த எளிமையாக வழங்குவது கூடுதல் சிறப்பு அம்சமாகும். நமது டெஸ்க் டாப்பில் இருக்கக்கூடிய சின்னங்களைப் போலவே (ஐகான்கள்) இந்த லைப் டெஸ்க் டாப்பிலும் ஐகான்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் ஐகான் குறிபேடுகளுக்கானது. இன்று செய்து முடிக்க வேண்டிய செயல்களை இந்த பகுதியில் குறித்து வைக்கலாம். செய்ய வேண்டியவற்றை செய்து முடிப்போமா என்பதையும் இந்த பகுதியை பார்த்தே தெரிந்து கொண்டு நமது செயல்பாடுகளை முடுக்கி விட்டுக்கொள்ளலாம்.
அடுத்ததாக வருவது கோப்புகளை சேர்த்து வைப்பதற்கான பகுதி.
புகைப்படம், செய்தி, வீடியோக்கள் என் இணையத்தில் நாம் பார்க்கும் எந்த பயனுள்ள விஷயங்களையும் இங்கு கோப்புகளாக சேமித்து வைக்கலாம்.
புகைப்படங்களையோ, வீடியோக்களையோ போட்டு வைக்க தனியே ஒரு போல்டரை உருவாக்குவதும் தேவையில்லை. வேறு ஒரு கம்ப்யூட்டரில் இருக்கும் போது அதனை அணுக முடியாமல் தவிப்பதும் இனி நேராது.
இதேபோல இமெயில் தொடர்புகளை குறித்து வைப்பதற்கான பகுதியும் இருக்கிறது. அதிலேயே போன், செல்போன் எண்களையும் சேமித்து வைக்கலாம்.  சில நேரங்களில் மின்னல் கீற்று போல மனதில் தோன்றும் புதிய திட்டங்களுக்கான எண்ணங்களையும் சேமித்து வைக்க ஐடியாஸ் எனும் தலைப்பில் தனி பகுதி இருக்கிறது.
நோட்ஸ் எனும் பகுதியில் இவற்றை இன்னும் கூட விரிவாக சேமித்து வைக்கலாம். ஒரு இணைய டைரியாகவே இதனை பராமரிக்க முடியும்.
இவற்றைத் தவிர பிறந்தநாள், திருமண நாள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளை குறித்து வைத்து உரிய நேரத்தில் நினைவு படுத்துவதற்கான பகுதியும் இருக்கிறது.
தினசரி நாட்காட்டியை கொண்டு நிகழ்ச்சி நிரல்களை திட்டமிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. ஆக இந்த லைப் டெஸ்க் டாப்பை உருவாக்கிக் கொண்டாலே போதும் இணையம்
சார்ந்து செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை சிறப்பாக நிர்வகித்து விட முடியும்.
இவைப் போதாது என்று மேலும் புதிய அம்சங்களும் அறிமுகம் செய்யவும் இந்த தளம் திட்டமிட்டுள்ளதாம்.
செயல்கள், நண்பர்கள், எண்ணங்கள் என வாழ்க்கையின் முக்கிய செயல்பாடுகளையும் ஒருங்கிணைப்பதற்கான உற்ற நண்பனாக இந்த தளம் விளங்குகிறது என்று தாராளமாக சொல்லலாம்.
http://www.lifedesktop.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “வாழ்க்கையே ஒரு டெஸ்க்டாப்

  1. manikandan s

    pls update to me

    Reply
    1. cybersimman

      புரியவில்லை நண்பரே.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *