நீங்கள் எதைப் பற்றி வேண்டுமானாலும் டிவிட்டர் செய்யலாம். சுயசரிதை நோக்கில் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை குறும்பதிவுகளாக பதிந்து கொள்ளலாம். அல்லது ஒரு விமர்சகர் போல எண்ணிக்கொண்டு நாட்டு நடப்புகள், தொழில்நுட்பம், கலை, விளையாட்டு என சகல விஷயங்கள் குறித்தும் உங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.
.
டிவிட்டரை எப்படி பயன்படுத்து கிறீர்கள் என்பது அந்த சேவையை நீங்கள் எப்படி புரிந்துகொள்கிறீர்கள் என்பதை பொறுத்து அமையும்!
சொந்த பெயரிலும் டிவிட்டர் செய்யலாம் அல்லது டிவிட்டருக்கென்று தனியே புனைப்பெயர் வைத்துக் கொண்டும் பதிவுகளை வெளியிடலாம்.
நீங்கள் நீங்களாக கூட இருக்க வேண்டிய அவசியமில்லை. வேறு ஒரு பொருள் போலக்கூட நீங்கள் டிவிட்டர் செய்யலாம். இதற்கு அழகான முன்னுதாரணமாக வாக்குப் பதிவு இயந்திரம் போல டிவிட்டர் செய்து புகழ்பெற்ற பிலிப்பைன்ஸ் வாலிபர் கோன்சாலசை குறிப்பிடலாம்.
கோன்சாலசுக்கு அப்போது 27
வயது இருக்கும். தொழில்நுட்ப ரீதியாக ஆர்வமும் அனுபவமும் கொண்ட அவர் ஐபோனுக்கான செயலி போன்றவற்றை உருவாக்குவதிலும் ஈடுபட்டு வருகிறார். தனக்கென்று தனியே ஒரு டிவிட்டர் கணக்கையும் அவர் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில்தான் பிலிப்பைன்ஸ் நாட்டில் தேர்தல்கள் நடைபெற்றன. இந்த தேர்தலின் போது வாக்குப்பதிவுக்காக நவீன இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.
வாக்குப்பதிவு தினத்தன்று இயந்திரங்கள் மந்தமாக செயல்பட்டு விமர்சனத்துக்கு ஆளாயின. ஒரு சில மையங்களில் இயந்திரங்களின் செயல்பாட்டில் கோளாறும் ஏற்பட்டு குழப்பம் உண்டானது. இதனால் வாக்குப்பதிவு இயந்திரம் மற்றவர்கள் வசைபாடும் இயந்திரமாக மாறியது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேவைதானா எனும் விவாதமும் தீவிரமாக அரங்கேறியது. பலர் இயந்திரங்களை சாடிய அதே நேரத்தில் அதற்கு ஆதரவாக பேசவும் பலர் இருந்தனர். இந்த விவாதத்துக்கு நடுவே மவுன சாட்சியாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் வீற்றிருந்தன. அந்த அப்பாவி இயந்திரங்கள் மீது வாலிபர் கோன்சாலசுக்கு பரிவும், பரிதாபமும் உண்டானது. பேச முடியாத வாக்குப்பதிவு இயந்திரங்களை இப்படி பந்தாடுவது சரியா என்று அவர் யோசித்த அவரது மனதில் அந்த இயந்திரங்களுக்கு மட்டும் பேசும் திறன் இருந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் உண்டானது.
அந்த நொடியிலேயே வாக்குப் பதிவு இயந்திரங்களை டிவிட்டரில் பேச வைப்பது என தீர்மானித்தார். அதாவது வாக்குப்பதிவு இயந்திரங்களின் பெயரில் ஒரு டிவிட்டர் கணக்கை துவக்கி அவற்றின் சார்பாக பேசுவது என முடிவு செய்தார். அதன்படியே வாக்குப்பதிவு இயந்திரத்தின் பெயரான பிசிஓஎஸ் மெஷின் எனப் பெயரில் டிவிட்டர் கணக்கை துவக்கி பதிவுகளை வெளியிட்டார்.
வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு மனிதர்களைப் போலவே உணர்வு இருந்தால் அவை எப்படி சிந்திக்குமோ அந்த வகையில் அவரது பதிவுகள் அமைந்திருந்தன. இயந்திரங்களாகிய எங்களை குற்றம் சொல்லாதீர்கள். இயன்ற அளவுக்கு நாங்கள் சிறப்பாக செயல்பட முயன்று கொண்டிருக்கிறோம் என்று துவங்கிய பதிவுகள் வாக்குப்பதிவு இயந்திரங்களின் உணர்வுகளாக வெளிப்பட்டன.
காலையிலிருந்து செயல்பட்டு உஷ்ணம் தாங்காமல் தண்ணீர் தாகம் எடுக்கிறது என்று ஒரு பதிவில் அவை புலம்பி தள்ளின. மற்றொரு பதிவில் எல்லா வாக்குச்சீட்டுகளையும் விழுங்கிவிட்டு அமர்ந்திருக்கிறோம் என்று அவை அமைதியாக தெரிவித்தன.
லேசான நகைச்சுவையோடு அமைந்திருந்த இந்த பதிவுகள் பலரது கவனத்தை ஈர்த்தன. இதன் விளைவாக வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின் தொடர்பாளர்கள் கிடைத்தனர். பேச முடியாத வாக்குப்பதிவு இயந்திரங்களின் சார்பாக அவற்றுக்காக வாதிடுபவர் போல கோன்சாலஸ் வெளியிட்ட இந்த பதிவுகள் பிலிப்பைன்ஸ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.
தொலைக்காட்சிகளில் பேட்டி கண்டு வெளியிடும் அளவுக்கு அவர் புகழ் பெற்றார். அதுமட்டுமல்ல மேலும் பலர் இந்த ஐடியாவை காப்பியடித்து இதேபோன்ற டிவிட்டர் கணக்கை துவக்கினர்www.twitter.com/pcosmachine
——–
(முந்தைய பதிவான டிவிட்டரில் சீறீய நல்ல பாம்ப்பிலேயே இது பற்றி குறிப்பிட்டுள்ளேன்)