சாப்பட்டையும் சமூக வலைப்பின்னலையும் இணைக்கும் வகையில் மேலும் ஒரு சேவை உதயமாகியுள்ளது.
அதாவது சேர்ந்து சாப்பிட நண்பர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கான இணையதளம்.
சாப்பிடுவதற்கு நண்பர்களை அழைக்க வேண்டும் என்றால் செல்போன் இருக்கிறதே என்றெல்லாம் அசட்டுத்தனமாக கேட்டால் நீங்கள் இன்னும் பேஸ்புக் யுகத்திற்கு வந்து சேரவில்லை என்று பொருள்.
போனில் கை வைக்காமால் ,இமெயில் உதவியை நாடாமல் பேஸ்புக் போன்ற சமுக வலைப்பின்னல் சேவை ஏற்படுத்தி தரும் வசதியை பயன்படுத்தி மதிய உணவுக்காக நண்பர்களை அணி சேர்ப்பது தான் இப்போதைய பேஷன்.அது மட்டும் அல்ல நண்பர்கள் என்னும் போது ஏற்கனவே உள்ள நெருக்கமான வட்டத்தை சேர்ந்த நண்பர்கள் அல்ல.புதிய நண்பர்கள்.
பேஸ்புக்கில் வலைவீசினால் புதிய நண்பர்கள் கிடைக்கின்றனர் அல்லவா?அதே போல சேர்ந்து சாப்பிடுவதன் மூலமே அறிமுகமாகி நட்பை வளர்த்து கொள்ளும் நண்பர்கள்.
தொழில்முறையில் பலரை சந்தித்து பேச வேண்டியவர்களுக்கு இதன் அருமை புரியும்.தொழில் முறையில் புதிய வாய்ப்புகள் தேவைப்படும் போது புதியவர்களை சந்திக்க வேண்டியிருக்கும்.இத்தகைய நண்பர்களை அடைய சிறந்த வழி அப்படியே சாப்பிட்டு கொண்டே பேசலாமா என் கேட்டு ரெஸ்டாரண்டுக்கு போவது தான்.
சேர்ந்து சாப்பிட்டது போலவும் இருக்கும்.அப்படியே பேச்சு வாக்கில் பரஸ்பரம் கருத்துக்களை பரிமாறிக்கொண்டு நட்பையும் ஏற்படுத்தி கொள்ளலாம்.இந்த நட்பு தொழில் ரீதியாக உதவும்.
ஆனால் திடிரென சாப்பிட வாருங்கள் என அழைப்பது எப்படி?
இந்த இடத்தில் தான் சாப்பிடுவதையும் சமுக தொடர்புகளையும் இணைக்கும் சேவைகள் வருகின்றன.
இந்த பிரிவில் புதிய வரவான பைட் டூ மீட் இணையதளம் மிக சுலபமாக சாப்பிடுவதற்கான நண்பர்களை தேடிக்கொள்ள உதவுகிறது.
இந்த தளத்தில் உறுப்பினராக சேர்ந்ததுமே உங்கள் பேஸ்புக் அல்லது டிவிட்டர் தொடர்புகளை நீங்கள் எங்கே எப்போது சாப்பிட விரும்பிகிறீகள் என்று குறிப்பிடலாம்.அதே நேரத்தில் உங்கள் தொடர்புகளில் யாரெல்லாம் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை இந்த தளம் வரைபடத்தில் காட்டும்.(அதாவது அவர்களும் இதில் உறுப்பினராக இருந்தால்).நீங்கள் தேர்வு செய்த இடத்தில் யார் இருக்கின்றனறோ அவர்களை தொடர்பு கொண்டு சாப்பிட அழைக்கலாம்.
அதே போல நீங்களும் கூட இந்த வகையில் யாராலாவது சாப்பிட அழைக்கப்படலாம்.எல்லாமே இருப்பிடம் சார்ந்தது என்பதால் மிகவும் உடனே சந்தித்து சாப்பிட ,சாப்பிட்டபடி பேச வசதியாக இருக்கும்
டேட்டிங் போல ஒருவரை மட்டும் சாப்பிட அழைக்கலாம்.அல்லது ஒன்றுக்கு மேற்ப்பட்டவரையும் அழைக்கலாம்.
ஆனால் சாப்பாட்டுக்கான பில் யார் பொறுப்பு என்பதை எல்லாம் முன்கூட்டியே முடிவு செய்து கொள்வது நல்லது.
எதை பற்றி பேசுவது என்பதை தீர்மானிக்க அல்லது யாரை சாப்பிட் அழைத்தல் நமக்கேற்றவராக இருப்பார் என்பதை முடிவு செய்ய ஒவ்வொருவரும் குறிச்சொற்கள் மூலம் தங்கள் விருப்பங்களை அடையாளப்படுத்தி கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.
அதே போல் ரெஸ்டாரண்டுகளுடன் கூட்டணி வைத்து கொண்டு உறுப்பினர்களுக்கு சலுகை மற்றும் தள்ளுபடி பெற்றுத்தரும் திட்டமும் உள்ளதாம்.ஆனால் ஒன்று சாப்பிட செல்லும் இடம் பாதுகாப்பானது தானா என்றெல்லாம் யோசித்து கொள்ள வேண்டும்.
இணையதள முகவரி;http://bitetomeet.com/accounts/sign_in

0 Comments on “சாப்பிடலாம்;சந்திக்கலாம்;அழைக்கும் இணையதளம்.”
ponmalar
sir. good info. but a lot of spelling mistakes. keep write good.
cybersimman
ok.i wlil check it.
thanks