உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள் -II

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்? நிறுவனத்தின் திட்டம் அநீதியானது என்று எடுத்துச் சொல்வதற்காக ஒரு இணைய தளத்தை அமைப்பதன் மூலமாக மட்டும் அதனை பணிய வைத்து விட முடியுமா?
.
ஆனால் ருயின்டு ஐபோன் டாட்காம் இணைய தளத்தை அமைத்தவரும் அப்படி நினைக்கவில்லை. இந்த தளத்தை ஆதரித்தவர்களும் அப்படி நினைக்கவில்லை. கனடாவில் ஆப்பிளின் ஐபோன் அறிமுகம் செய்யப்படும் போது, அதற்கான உரிமையை பெற்றுள்ள ரோஜர்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் தனது கட்டணத்தை குறைக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் மத்தியில் இருந்தது.

இந்த நம்பிக்கையோடுதான் நிறு வனத்திற்கு ஆன்லைன் விண்ணப் பத்தை சமர்பிக்க திட்ட மிட்டு, இணையவாசிகளிடமிருந்து கையெழுத்து திரட்டி வந்தனர். முதல் கட்டத்திலேயே ஆயிரக்கணக் கானோர் ஆதரவு தெரிவித்து கையெழுத் திட்டனர். இந்த இடத்தில் தளத்தின் வடிவமைப்பு பற்றி கொஞ்சம் சொல்லியாக வேண்டும்.

தளம் மிகமிக எளிமையாகவே உருவாக்கப்பட்டிருந்தது. முகப்பு பக்கத்தில் அதிக அம்சங்கள் கிடையாது. முறையிடுவதற்கான விண்ணப்பப்படிவம், ஏற்கனவே சமர்பிக்கப்பட்ட படிவங்கள் மற்றும் வலைப்பதிவு ஆகியவை மட்டுமே இடம் பெற்றிருந்தன. தளம் பற்றிய பத்திரிகை செய்திகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு, ஒவ்வொரு தினமும் ஏற்படும் முன்னேற்றம் தொடர்பான உடனடி செய்திகளும் பதிவேற்றப்பட்டு வந்தன.

பிரச்சனை என்ன அதை எதிர்த்து நடத்தப்படும் போராட்ட முறை மற்றும் தீர்வுக்கான வழியை இவை துல்லியமாக உணர்த்தின. இதனை புரிந்து கொண்ட பலரும், கனடாவில் மட்டும் ஐபோன் சேவைக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவது தவறு, அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆமோதித்து விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர்.

ஆரம்பத்தில் ரோஜர்ஸ் நிறுவனம் இதனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் நிறுவன திட்டத்திற்கு எதிரான வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததால் நிறுவனம் நெருக்கடிக்கு உள்ளானது. எனவே ஐபோன் அறிமுக தேதி நெருங்கி வந்த நிலையில், கட்டணத்தை கொடுத்தும் குறைத்துக் கொள்வதாக அறிவித்தது.

ஆனால் இது போதுமானதல்ல என்று தளத்தின் ஆதரவாளர்கள் கருதினர். எனவே இந்த செய்தியையும் குறிப்பிட்டு ரோஜர்ஸ் நிறுவனமே இது போதுமா? என்று கேட்டு விட்டு தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். கொஞ்சம் இறங்கி வந்தால் போதாது தங்கள் கோரிக்கை முழுவதுமாக ஏற்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். இதனிடையே, போராட்டத்தை வேறொரு திசையிலும் கொண்டு சென்றனர்.

முன்கூட்டியே ஐபோனுக்கு பதிவு செய்து கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் இப்போது, எதிர்ப்பு தெரிவித்து அதனை துறக்க தயாராக இருக்கிறீர்கள் என்று மற்றொரு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கைக்கும் ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்தனர். அதாவது அநியாய கட்டணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐபோனை திருப்பி கொடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நிச்சயம் இது நிறுவனத்துக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும் ஐபோனை வாங்காமல் இருக்கும் பட்சத்தில் வேறு மாற்று திட்டங்கள் என்ன என்னும் யோசனையும் நுகர்வோர் முன் வைக்கப்பட்டது. இதற்கு மத்தியில் அந்நாட்டைச் சேர்ந்த எம்.பி. ஒருவரும் இந்த போராட்டத்தில் குதித்து விட்டார். அதாவது நுகர்வோருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தார்.

கனடாவின் சராசரி மக்கள் அதிக கட்டணம் கொண்ட செல்போன் சேவையை ஏற்று கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். இது தவறானது என அவர் தெரிவித்தார். பொதுவாகவே எல்லா கனடா செல்போன் நிறுவனங்களும் கூடுதல் கட்டணத்தை வசூலிக்கின்றன என்று குறிப்பிட்டிருந்த அவர், இந்த நிலையில் நுகர்வோர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவிப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் அவர் அழுத்தம், திருத்தமாக குறிப் பிட்டிருந்தார்.

கனடாவில் ஐபோன் அறிமுகமாக வெகுசில நாட்களே மிச்சம் உள்ள நிலையில், சரித்திரத்தை மாற்றி காட்டுவது நுகர்வோர் கையில்தான் இருக்கிறது என்று அவர் தெரிவித் திருந்தார். இது வெறும் ஆரம்பம்தான். கனடா நுகர்வோர் பலவிதங்களில் வஞ்சிக்கப் படுகின்றனர். அதற்கு எதிராக யெல்லாம் குரல் கொடுக்க கனடியன்ஸ்டாட்காம் தளத்திற்கு வருகைதருங்கள் என அவர் வேண்டு கோள் விடுத்தார். (கனடாவில் வர்த்தக நிறுவனங்களின் செயல்பாடு மீது நுகர்வோர் அதிருப்தி கொண்டால் அவற்றை வெளிப்படுத்துவதற்கான இடமாக இந்த தளம் அமைந்துள்ளது.)

அவரது இந்த கருத்து யூடியூப் வீடியோ காட்சியோடு முகப்பு பக்கத்தில் இடம் பெற்றிருந்தது. இது போராட்டத்துக்கு மேலும் வலுசேர்த்தது. இப்படி போராட்டம் தீவிரமடைந்த நிலையில் ஒருசில இணையவாசிகள் வெறும் முறையீட்டு மனு கொடுப்பதோடு நிறுத்தி கொள்ளாமல் வீதியில் இறங்கி போராடினால் என்று யோசனை தெரிவித்தனர்.

குறிப்பிட்ட தினத்தன்று நுகர்வோர் அனைவரும் பேரணியாக நிறுவன அலுவலகத்திற்கு சென்று முறையீட்டு மனுவை கொடுத்தால் என்ன என்றும் கோபத்தோடு கேட்டனர். நிறுவனத்தை அதன் இஷ்டம்போல செயல்பட அனுமதிக்க முடியாது என்ற நுகர்வோரின் உணர்வு இதன் மூலம் பரவலாக உணர்த்தப்பட்டது. இணைய சக்தியின் மூலம் நுகர்வோர் எப்படி போர்குரலை எழுப்ப முடியும் என்பதற்கான மற்றொரு உதாரணமாக இந்த முயற்சி அமைந்துள்ளது.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள் -II

  1. நல்ல தகவல்.

    இவர்களை போல நம் நாட்டில் ஒற்றுமையுடன் போறாடா மாட்டார்கள் என்பது நமக்கு வருத்தம் அளிக்கும் செய்தி

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *