புதிய இணையதள‌ முகவரி சுருக்க சேவை.

டிவிட்டர் ,பேஸ்புக் யுகத்தில் இணையதள முகவரிகளை சுருக்கும் சேவைகள் அவசியமானது தான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் புதியதொரு சேவை அவசியம் தானா?

பிட்.லி பிரபலமாக்கிய இந்த பிரிவில் இப்போது எண்ணற்ற சேவைகள் இருக்கின்றன.கூகுலே தன் பங்கிற்கு கூகு.ல் என்னும் முகவரி சுருக்க சேவையை அறிமுகம் செய்துள்ளது.என‌வே புதிய இணையதள முகவரி சுருக்க சேவை என்றவுடன் ஒன்னொரு சேவையா யாருக்கு தேவை என்ற எண்ணமே ஏற்படும்.

இந்த அலட்சியத்தை மீறி புதிய முகவரி சுருக்க சேவையான பிரெ.ட் பயனுள்ளதாகவே அமைந்துள்ளது.அதற்கு காரணம் மற்ற எந்த முகவரி சுருக்க சேவையும் வழங்காத கூடுதல் வசதியை இந்த சேவை வழங்குவது தான்.

அடிப்படையில் பிரெ.ட் தளமும் டிவிட்டர் அல்லது பேஸ்புக் மூலம் இணையதள முகவரிகளை பகிர்ந்து கொள்ள ஏற்ற வகையில் அவற்றை சுருக்கி தருகிறது.ஆனால் அத்தோடு நின்றுவிடாமல் அழகானதொரு வசதியையும் தருகிறது.

இணைப்புகளுக்கு இடையே ஒரு பக்கத்தை உருவாக்கி அதில் பயனாளிகள் கவனத்தை ஈர்க்க விரும்பும் விஷயம் குறித்த விவரங்களை இடம்பெற உதவுகிற‌து.

இந்த இடைச்சொருகல் பக்கத்தை  உங்களுக்கான விளம்பரம் என்று கூட வைத்து கொள்ளலாம்.

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு நடுவே விளம்பரங்கள் இடம்பெறுகின்றன அல்லவா?இணையதள‌ங்களில் கூட வர்த்தக நிறுவங்களின் விளம்பரங்கள் செய்தி அல்லது கட்டுரைகளுக்கு செல்லும் வழியில் தலைகாட்டுவது உண்டல்லவா?இந்த வசதியை சாதாரண இணையவாசிகளுக்கும் சாத்தியமாக்கி த‌ருகிறதும் பிரெ.ட்.

அதாவது பிரெ.ட் சேவையை பயன்படுத்தி முகவரிகளை சுருக்கும் பொது அதனை யாரவாது கிளிக் செய்தால் மற்ற சேவைகள் போல  நேரடியாக அந்த இணையதளத்திற்கு அழைத்து செல்லப்படமாடார்கள்.மாறாக பகிர்ந்து கொள்பவர் உருவாக்கியுள்ள பக்கத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அதன் பின்னரே இணையதள‌த்திற்கு செல்ல முடியும்.

இந்த பக்கத்தை இணைப்புகளை பகிபவர்கள் மிக எளிதாக உருவாக்கி கொள்ளலாம்.விளம்பர வாசகம் போல நாம் தெரிவிக்க விரும்பும் வாசகத்தை குறிப்பிட்டு அதனோடு இரண்டு புகைப்படங்களையும் இணைக்கலாம்.டோஸ்ட் என்று பிரெ.ட் இந்த பக்கங்களை குறிப்பிடுகிறது.

டிவிட்டரில் எப்போதெல்லாம் இணைப்புகளை பகிர்ந்து கொள்கிறோமோ அப்போதெலாம் சுட்டிக்காட்டப்படும் இணையதளம் தோன்றும் முன் இந்த பக்கமே முதலில் தோன்றும்.5 விநாடி வரை இந்த பக்கம் விளம்பரம் போல இருக்கும்.பின்னர் மறைந்துவிடும்.

இணையவாசிகள் தாங்கள் ஆதரவு திரட்ட‌ விரும்பும் விஷயம் குறித்து தகவல் தெரிவிக்க இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம்.இதன் மூலம் சேவை அமைப்புக்கு ஆதரவு திரட்டலாம்.அபிமான நடசத்திரம் குறித்த தகவலை பரப்பலாம்.சிறிய நிறுவன விளம்பரமாக பயன்படுத்தலாம்.ஒருவரது வலைப்பதிவுக்கான விளம்பரமாக கூட இதனை பயன்படுத்தலாம்.

இணையவாசிகளை பொருத்தவரை செலவு குறைந்த விளம்பரம் இது.சுபலமானதும் கூட.

இன்னும் எண்ணற்ற வழிகளில் இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். பிரபல பாப் படகர் உள்ளிட்டோர் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

எல்லாம் சரி எல்லா இணையதள  முகவ‌ரி சுருக்க சேவைகளும் விநோதமான பெயரையே கொண்டிருப்பது ஏன்?இதிலும் பிட்.லியின் தாக்கமோ!

இணையதள முகவரி;http://www.bre.ad/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “புதிய இணையதள‌ முகவரி சுருக்க சேவை.

  1. சுபலமானதும் கூட. correct the mistake sir

    Reply
  2. இணையதள முகவரியை சுருக்க, அவர்கள் இணையதளபெயரையும் சுருக்கி விட்டார்கள் போலும். அருமையான தகவல்..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *