பொருட்களை தவறவிட்டு தவித்த அனுபவம் பலருக்கு உண்டு.அதிலும் செல்போனும் லேப்டாப்பும் வந்த பிறகு இப்படி தவறவிடுவதும் அதிகரித்துள்ளது.செல்போனிலும்,லேப்டாப்பிலும் முக்கிய தொடர்புகளையும்,தகவல்களையும் வைத்திருப்பதால் அவற்றை தவறவிடுவதால் ஏற்படும் தவிப்பும் அதிகரித்துள்ளது.
செல்போன்,லேப்டாப் மட்டும் அல்ல பர்ஸ் ,கைப்பை,சூட்கேஸ் என தொலைந்து போகும் பொருட்களும் இருக்கவே செய்கின்றன.அவ்றை பறிகொடுத்த தவித்த சோக கதைகளும் எண்ணிலடங்காமல் இருக்கின்றன.
இப்படி புலம்புவதற்கு மாறாக தவறவிட்ட பொருட்கள் திரும்பி கிடைத்த வெற்றி கதைகள் உலகில் நிறையத்துவங்கினால் எப்படி இருக்கும்?பொருட்களை தொலைத்து நிற்பவர்கள் இப்படி சந்தோஷ பெருமூச்சு விடவைக்கும் நோக்கத்தோடு உதயமாகியிருக்கிறது ட்ரூலி டேக் இணையதளம்.
இணைய உலகில் இன்று பிரபலமாக இருக்கும் அடையாளக்குறியிடுதலை அதாவது டேக் செய்வதை புற உலகின் பொருட்களுக்கும் கொண்டு வந்து அவை தொலையும் போது உரிமையாளர்களிடமே கிடைக்க செய்வதற்கான வழியை இந்த தளம் உருவாக்கி தருகிறது.
இதற்கு முதலில் இந்த தளத்தில் உறுப்பினராக சேர வேண்டும்.அதன் பிறகு உங்கள் வசம் உள்ள செல்போன்,லேப்டாப்,பைக் சாவி போன்ற பொருட்களை பற்றிய விவரத்தை இங்கு சமர்பிக்க வேண்டும்.சைக்கிள்,ஐபேட்,ஐபோன் போன்ற பொருட்கள் பற்றிய விவரத்தையும் சமர்பிக்கலாம்.உடனே அந்த பொருட்களுக்கான அடையாள குறியை(டேக்) இந்த தளம் அனுப்பி வைக்கும்.ஸ்டிக்கர் போல இருக்கும் அதனை உங்கள் பொருட்களின் மீது ஒட்டி வைத்து கொள்ள வேண்டும்.
அவ்வளவு தான்,அதன் பிறகு எப்போதாவது அந்த பொருளை நீங்கள் தவறவிட நேர்ந்தால் அதனை கண்டெடுக்கும் நபர் அதில் ஒட்டப்பட்டுள்ள அடையாள குறி ஸ்டிக்கரை பார்த்து இந்த தளத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.உடனே இந்த தளம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கும்.
பல நேரங்களில் தொலைந்த பொருட்கள் திரும்பி கிடைப்பதில் உள்ள பிரச்னை அதன் உரிமையாளர் யார் என்பதை தெரிந்து கொண்டு அவரை தொடர்பு கொள்ள வாய்ப்பில்லாமல் போவது தான்.தவறவிடப்பட்ட பொருளை கண்டெடுப்பவர் அதனை ஒப்படைக்க உள்ளபடியே விரும்பினாலும் உரிமையாளாரை தேடி கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
அதே போல காவல்துறையினர் மீட்ட திருடு போன பொருட்களின் உரிமாயாளர் என்று கண்டுபிடிப்பது இயலாமல் போகலாம்.
இத்தகைய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பொருளின் உரிமையாளரை உடனடியாக தெரிந்து கொள்ள அவற்றின் மீது ஒட்டப்பட்ட அடையாள குறி கைகொடுக்கும்.பொருட்களை கண்டெடுத்தவரும் தனது வேலையை விட்டுவிட்டு உரிமையாளர் பற்றிய தகவலை தேடி அலைய வேண்டியிருக்காது.
பொருட்கள் தொலைவதையோ அல்லது திருடு போவதையோ இந்த தளம் தடுத்து நிறுத்தாது.ஆனால் அவை திரும்பி கிடைப்பதற்கான வாய்ப்பை நிச்சயம் அதிகரிக்கும்.
சேத பிரைஸ் எனும் அமெரிக்கர் இந்த தளத்தை துவக்கியுள்ளார்.தொலைந்து போகும் விலை மதிப்பில்லா பொருட்கள் பற்றிய தகவலை தெரிவிக்க சுலபமான ஒரு வழி இருக்க வேண்டும் என நினைத்து அடையாளகுறி மூலம் அவற்றை அறியும் வழியாக இந்த தளத்தை அமைத்திருக்கிறார்.அமெரிக்காவில் ஆண்டுதோறும் 5 லட்சம் லேப்டாப்கள் தொலைகின்றன என்ற விவரமும் அவற்றில் திரும்பி கிடைத்தவற்றில் 65 சதவீதம் உரிமையாளர் தெரியாமல் தேங்கி கிடக்கும் புள்ளிவிவரமும் இந்த தளத்திற்கான உத்வேகமாக அமைந்ததாக சேத் குறிப்பிடுகிறார்.
இணையதள முகவரி;http://www.turlytag.com/

0 Comments on “இனி மறப்பதில்லை தம்பி;எல்லா பொருளையும் டேக் செய்திடுவாய்!”
rathnavel natarajan
நல்ல பதிவு.
எடுப்பவர்கள் கொடுக்க வேண்டுமே.
நன்றி.
பூபால அருண் குமரன் . ரா
இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் தளம் இடம் பெற்று உள்ளது. வாழ்த்துக்கள்…
cybersimman
வாழ்த்துக்கு நன்றி நண்பரே.
Angel Anish
இந்த வார ஆனந்த விகடனில் உங்கள் தளம் இடம் பெற்று உள்ளது.
வாழ்த்துக்கள்…
cybersimman
thank u very much