பீர் வாங்கித் தருவதற்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
இன்டெர்நெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய எத்தனையோ இணையதளங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று.
பீர் வாங்கித் தருவதற்காக இணைய தளத்தை ஏற்படுத்துவது அவசியமா என்று கேட்கலாம். அவசியமா, இல்லையா என்பதை விட இந்த தளம் நமக்கு தேவைப்படக் கூடிய எளிய சேவையை அழகாக வழங்குகிறது என்பதே விஷயம்.
பீர் வாங்கித் தரும் இணையதளம் என்று பார்ப்பதை விட, பீருக்கு நிகராக நமது கலாச்சாரத்தில் எந்த பானத்தை சொல்லலாம் என்று நினைத்துப் பார்த்தால் இந்த தளத்தின்
தேவையை எளிதாக புரிந்து கொண்டு விடலாம்.
பீர் என்பது இங்கே போதையை தரும் பானம் என்று புரிந்து கொள்வதற் கில்லை. காபி அல்லது தேனீர் போல களைப்பை போக்கிக் கொள்ளவும், புத்துணர்ச்சிக்காகவும் அருந்தப்படும் பானம்.
காபி அல்லது டீ குடிப்பது என்பதை மீறி, இந்த பானங்கள் உபசரிப்பின் அடையாளமாக இருக்கின்றன. நண்பர்களை சந்திக்கும்போது பரிமாறிக் கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது.
அமெரிக்கா போன்ற நாடுகளில் பீர் இந்த வகையான அர்த்தத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
காபி, டீ போன்ற பானங்களை விட பீருக்கு கூடுதல் மவுசும் இருக்கிறது. அது வெற்றியை, மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வதற்கான பான மாகவும், சில நேரங்களில் மனபாரத்தை இறக்கி வைப்பதற்கான பானமாகவும் கூட இருக்கிறது.
நம்மூரில் டீ சாப்பிட போகலாம் என்று சொல்வதை போல, அமெரிக்காவில் ஒரு பீர் அருந்தலாம் என்று சொல்வது சர்வசகஜமானது. அதிலும் நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை, வெற்றிகளை கொண் டாடும் போது பீரோடு அந்த உணர்வை பகிர்ந்து கொள்கின்றனர்.
இத்தகைய உணவை கொண்ட அமெரிக்கரான ஸ்டீவன் கோன் என்ப வர்தான் பீர் வாங்கித் தருவதற்கான இணையதளத்தை அமைத்து இருக்கிறார்.
உங்கள் நண்பனுக்கு பீர் வாங்கிக் கொடுங்கள் என்று அர்த்தம் வரும் வகையில், “பை யுவர் பிரண்ட் எ டிரிங் டாட் காம்’ எனும் பெயரில் இதற்கான தளத்தை அவர் அமைத்திருக்கிறார்.
அருகாமையில் இருக்கும்போது மகிழ்ச்சியை பீரோடு பகிர்ந்து கொள்வது சகஜமானது மட்டுமல்ல; சுலபமானதாகவும் இருக்கிறது. ஆனால் நண்பர்கள், நெடுந் தொலைவு விலகி இருக்கும்போது இது எப்படி சாத்தியம்.
உதாரணமாக கல்லூரி காலத்து நண்பர்கள் படித்துக் கொண்டிருக்கும் போது ஒன்றாக வளைய வருவார்கள். அவர்களே பட்டம் பெற்று வேலை யில் சேர்ந்து விட்டார்கள் என்றால் வேறு வேறு திசையில் பயணிக்க தொடங்கி விடுவார்கள்.
இந்த பயணத்தின் நடுவில் அவர்கள் தங்களுக்கான வெற்றி களையும், மைல்கல்களையும் சந்திப்பதுண்டு. அந்த வெற்றியை போன் அல்லது இமெயில் மூலம் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள லாமே தவிர
ஒன்றாக அமர்ந்து பீர் அருந்துவது சாத்தியமில்லை.
இது போன்ற தருணங்களில் நண்பர் களுக்கு பாராட்டு தெரிவிக்க விரும்பி னால் அல்லது அவர்களின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்பினால் அவர்களுக்காக இங்கிருந்தபடியே பீர் வாங்கிக் கொடுக்க முடிந்தால் எப்படி யிருக்கும் என்று ஸ்டீவன் கோனுக்கு தோன்றியது.
அவரே இது போன்றதொரு சூழ்நிலையை எதிர்கொண்டபோது இந்த எண்ணம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் தனது டெக்சாஸ் நண்பனோடு தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது நண்பர், பதவி உயர்வு கிடைத் திருக்கும் விஷயத்தை கூறி கல்லூரி நாட்களில் எப்படி சந்தோஷமாக பேசி கழித்துள் ளோம் என்று நினைவு கூர்ந்துள்ளார்.
அந்த நொடியில் ஸ்டீவனுக்கு தன்னுடைய நண்பனோடு பீர் அருந்தி மகிழ்ந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியது. அது பற்றியே யோசித்து கொண்டிருந்தவர் தன்னை போன்றே மேலும் பலரும் உணரலாம் என்று நினைத்துப் பார்த்தார். இவர்களுக்காக எல்லாம் இன்டெர்நெட் மூலம் ஏதாவது செய்ய முடியுமா? என்று யோசித்தார். அதன் விளைவாக உருவானதுதான் இந்த இணையதளம்.
இந்த இணையதளத்தை உருவாக்கி யவுடன் போஸ்டன் நகரில் உள்ள பார்களோடு எல்லாம் பேசி அவர் உடன்பாடு செய்து கொண்டார். அவற்றின் பட்டியலை தனது தளத்திலும் இடம் பெற வைத்தார்.
வெற்றி அல்லது மகிழ்ச்சியை கொண்டாட விரும்பும் நபர்கள் இந்த தளத்திற்கு விஜயம் செய்து பட்டிய லில் உள்ள ஏதாவதொரு பாரில் பீருக்கான கூப்பனை வாங்கி அதனை இமெயில் மூலம் தனது நண்பருக்கு அனுப்பி வைக்கலாம்.
நண்பனுக்கான பிரத்யேக வாழ்த்து செய்தியோடு இந்த கூப்பனையும் அனுப்பி வைக்கலாம். அதனை பெறும் நண்பர் குறிப்பிட்ட பாரில், பீர் அருந்தி மகிழலாம்.
சாதாரணமானது என்று தோன்றக் கூடிய எளிமையான சேவைதான். ஆனால் நட்பால் ஆட்பட்டிருப்பவர் களுக்கு இது அருமையானதாக இருக்கும்.
வெறும் பீர் வாங்கித் தருவதற்கான தளமாக இதனை பார்க்கக் கூடாது. இன்டெர்நெட் மூலம் பரிசுப் பொருட்களை வாங்கித் தரக் கூடிய சேவைகளை போலவே இதனை கருத வேண்டும்.
இன்டெர்நெட் நண்பர் களோடு இமெயில், புகைப்படம், வீடியோ ஆகியவற்றையெல்லாம் பகிர்ந்து கொள்ள வழி செய்திருக்கிறது. ஒரு கோப்பை பீர் வாங்கித் தர அது உதவக் கூடாதா என்று ஸ்டீவன் கோன் நட்போடு கேட்கிறார்.
————-

0 Comments on “நட்பு வளர்க்கும் இணையதளம்”
நெ.ரெஜோலன்
நட்பு வளர்க்க பீர் தேவை என்பது உண்மையாக இருக்கலாம்
ஆனாலும்
வலைத்தளத்திலும் பீர் கேட்பதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியல
இருந்தாலும் பீர் கிடைத்தால்தான் நட்பு வளரும் என்றால் எப்படி
anniyan
நட்பை வளர்க்கும் என்பதை விட தொப்பையை வளர்க்கும் என்றே தலைப்பிடிருக்கலாம் :))