இண்டெர்நெட் மூலம் வருவாய் ஈட்ட பலவழிகள் இருந்தாலும் வலைப்பதிவாளர்கள் சம்பாதிப்பதற்கான வழி என்று வரும் போது கூகுல் ஆட்ஸ் மட்டுமே பிரதானமாக சொல்லப்படுகிறது. அந்த ஒரே வழியும் கூட எத்தனை பதிவாளர்களுக்கு அள்ளிக் கொடுத்திருக்கிறது என்று தெரியவில்லை.
.
சர்ச் இஞ்ஜின் மார்க்கெட்டிங் என்று சொல்லப்படும் இணைய டிராபிக் விளையாட்டில் கில்லாடியாக இருந்தால்தான் கூகுல் விளம்பரங்கள் மூலம் சம்பாதிப்பது சாத்தியம். இருப்பினும் தமிழில் இந்த விளையாட்டை நடத்துவது சாத்தியம் இல்லை என்றே சொல்கின்றனர்.
எனவே ஏதோ கூகுல் ஆட்சென்சை அணுகியவுடன் டாலர்கள் கொட்டும் என்று நினைப்பது தவறு. இது ஒருபுறம் இருக்க இணையம் மூலம் சம்பாதிப்பதற்கான புதிய வழியோடு ஒரு இணையதளம் அறிமுகமாகியுள்ளது. பிலேசிபைடஸ் என்பது அந்த இணைய தளத்தின் பெயர். இணைய சாமான்யர்களுக்கான விளம்பர சந்தை என்று இதனை சொல்லலாம். அதாவது விளம்பரங்களை வாங்குவதற்கான, விற்பதற்கான இடம்.
விளம்பரம் என்றவுடன் வழக்கமான பேனர் விளம்பரங்கள் போன்றவை அல்ல. சமூக விளம்பரங்கள்.அதென்ன சமூக விளம்பரங்கள் என்று கேட்கலாம். இணையவாசிகள் தங்கள் வசம்உள்ள வலைப்பதிவு, டிவிட்டர், பேஸ்புக் போன்ற சேவைகளில் செய்யத் தயாராக இருக்கும் விளம்பரங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகிறதது.
உதாரணத்திற்கு வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் பிற இணையதளங்கள் பற்றி நல்லதாக நாலு வார்த்தை எழுதுகிறேன் என்று சொல்லி அதற்கான கட்டணத்தை நிர்ணயிக்கலாம். அதே போல டிவிட்டரில் இருப்பவர்கள் எனது பின்தொடர்பாளர்களிடம் சொல்கிறேன் என்று அதற்கு ஒரு கட்டணத்தை கோரலாம்.
விளம்பரம் வேண்டுபவர்கள் தங்கள் கோரிக்கையை தெரிவித்து வலைப்பதிவாளர்கள் அல்லது பேஸ்புக் வைத்திருப்பவர்களின் உதவியை நாடலாம்.வலைப்பதிவு வைத்திருப்பவர்கள் தங்களுக்கு இணையவாசிகள் மத்தியில் உள்ள ஆதரவை குறிப்பிட்டு அதற்கேற்ப விளம்பர கட்டணத்தை கோரலாம்.
இந்த தளத்தில் உறுப்பினராவது சுலபம் கட்டணமும் கிடையாது. விளம்பரம் செய்யவும் கட்டணம் கிடையாது. விளம்பரங்கள் மூலம் வருவாய் கிடைத்தாலும் கமிஷன் போன்றவை இல்லை.என்னுடைய 1500 டிவிட்டர் பின்தொடர்பாளர்களுக்கு ஒரு டாலருக்கு உங்கள் இணைப்பை டிவிட் செய்வேன் என்பது போன்ற விளம்பரங்களை பார்க்கும் போது இணையவாசிகளுக்கான புதிய விளம்பர சந்தை உருவாகி வருவதை புரிந்து கொள்ள முடிகிறது. அதே போல இன்னொருவரோ தன்னுடைய பிரபலமான கார் வலைப்பதிவில் 100 டாலர்களுக்கு ஒரு மாத காலம் விளம்பரத்தை இடம் பெறச் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
யூடியூப், டிக் போன்ற சேவைகள் அடிப்படையிலும் விளம்பரம் செய்யலாம்.விற்பனை நிறுவனம் ஒன்று தங்கள் தயாரிப்பை விளம்பரம் செய்தால் வரும் வருமானத்தில் 29 சதவீத கமிஷன் தருவதாக தெரிவித்துள்ளது. இணைய வங்கி ஒன்றோ தனது சேவையை விளம்பரம் செய்ய உதவி தேவை என்று கோரியுள்ளது.
இப்படி பதிவர்களையும், டிவிட்டராளர்களையும் விளம்பரம் தேவைப்படுவோரோடு இணைக்கும் இணைய விளம்பர மேடையாக இந்த தளம் செயல்படுகிறது. வடிவமைப்பு தெளிவாகவும் எளிமையாகவும் பயன்படுத்த சுலபமாகவும் உள்ளது.
தமிழிலும் இது போன்ற தளத்தை உருவாக்கினால் நன்றாக இருக்கும்.
இணைய தள முகவரி: www.plassifieds.com

0 Comments on “இணையம் மூலம் வருவாய் சம்பாதிக்க”
stalinwesley
இது போல் இணையதளம் மூலம் சம்பாதிக்க பல இணையதளங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
cybersimman
நிச்சயமாக நண்பரே.
அழுக்கு பையன்
link is not working i think…. 🙁
cybersimman
மன்னிக்கவும் ஏதோ சிக்கல் என்று நினைக்கிறென்.
இஸ்லாம்
google ads தமிழுக்கு இருந்தால் வேரொன்றும் தேவையில்லை
cybersimman
கூகுல் ஆட்ஸ் தமிழில் செயல்பட நாம் தகவல்களை தமிழில் தேடிப்பெற துவங்க வேண்டும்.தேடியந்திர டிராபிக் இல்லாமல் வருவாய் சாத்தியமில்லை.
அழுக்கு பையன்
நீங்க அந்த இமேஜ் போடும் போதே அந்த லிங்கய் இணைக்கலாமே…
cybersimman
சிக்கல் அந்த இனைப்பில் தான்.விரைவில் விளக்கி எழுதுகிறேன்.
cpsenthilkumar
குட் போஸ்ட்.. யூஸ் ஆகும்.
E.Bhu.GnaanaPragaasan
மதிப்பிற்குரிய ஐயா! வணக்கம்.
அண்மைக்காலமாகப் பல நிறுவனங்கள், தாங்கள் அன்றாடம் அனுப்பும் மின்மடல்களை வெறுமே திறந்து படித்தால் மட்டும் போதும். அதற்குப் பணம் தருவதாகக் கூறுகின்றன. இது எந்த அளவுக்குச் சாத்தியம் அல்லது எந்த அளவுக்கு இவை நம்பிக்கைக்குரியவை? நம்பிச் சேரலாமா? கனிவு கூர்ந்து விளக்குங்களேன்!
cybersimman
விளம்பர யுக்தியாக நில நிறுவனங்கள் இதனை கையாள்வதும் உண்டு.சில நிறுவனங்கள் ஏமாற்றவும் முயல்கின்றன.குறிப்பிட்ட இணையத்தளாத்தை தெரிவித்தால் பரிசிலித்து பார்த்து சொல்கிறேன்.ஆனால் அப்படியே பணம் தருவதாக வைத்து கொண்டாலும் அதற்கு பேபால் கணக்கு தேவை.மேலும் இதில் கிடைக்ககூடிஅ வருவாய் சொற்பமாகவே இருக்கும்.எனவே ஏமாற வேண்டாம் என்பதே என ஆலோசனை.
அன்புடன் சிம்மன்.
E.Bhu.GnaanaPragaasan
மிக்க நன்றி ஐயா!