டெக்ஸ்ட் மிரர் போலவே இணைய வாசிப்புக்கு உதவ ரீடபில்,ரீடபிலிட்டி,ரீட்மயோ,நாட் பாரஸ்ட்,டைனி ரீட் உள்ளிட்ட மேலும் சில சேவைகள் இருக்கின்றன.
இவற்றில் ரீடபில் சேவை இணைய தளங்களைல் உள்ள கட்டுரையை விளம்பரம் போன்றவை இல்லாமால் சுத்தமாக்கி தருவதோடு அந்த கட்டுரையை இணையவாசிகள் விரும்பும் எழுத்துருவில் படிக்கவும் வழி செய்கிறது.
வுரும்பிய எழுத்துருவை தேர்வு செய்த பிறகு அதன் அளவு, எழுத்துக்களுக்கு இடையிலான இடைவெளி, பின்னணி அமைப்பு போன்ற அம்சங்களையும் இணையவாசிகள் தாங்கள் விரும்பிய வகையில் மாற்றி கொள்ளலாம்.
பிரவுசருக்கான புக்கமார்ர்கிங் இணைப்பாக டவுண்லோடு செய்து கொண்டு பயன்படுத்தலாம்.
சில நேரங்களில் குறிப்பிட்ட இணைய பக்கத்தில் உள்ள கட்டுரை சுவாரஸ்யமாக இருக்கலாம்.ஆனால் அதன் எழுத்துருவும் வடிவமைப்பும் அதிருப்தியை அளிக்கலாம்.இது போன்ற நேரங்களில் இணைய பக்கத்தை விருப்பம் போல மாற்றி கொள்ளும் அதிகாரத்தை இணையவாசிகள் கையில் வழங்குகிறது இந்த சேவை
இணையத்தில் வாசிப்பதை மேலும் அதிகரிக்க செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள சேவை இது.விரும்பிய வகையில் படிக்க முடிவதால் இணையத்தில் அதிகமாகவும் படிக்கலாம்.விரைவாகவும் படிக்கலாம்.
ரீடபிலிட்டி சேவையும் இதே போன்ற வசதியை அளிக்கிறது.எந்த இணைய பக்கத்தையும் இணக்கமான வடிவில் பார்க்க மாற்றி தருவதாக கூறும் இந்த சேவையில் உள்ள கூடுதல் வசதி கட்டுரைகளை சேமித்து வைத்து கொண்டு பின்னர் வேண்டும் போது படித்து கொள்ளலாம்.ஐபோன் இபுக் ரீடர் போன்ற சாதன்ங்களிலும் சேமித்து கொள்ளலாம்.ஆனால் உறுப்பினராக சேர்ந்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
இணைய வாசிப்புக்கு உதவும் சேவைகள் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.
——–
இணைய முகவரி;http://www.readability.com/
http://readable-app.appspot.com/
———
தொடர்புடைய முந்தைய பதிவு இங்கே….;http://cybersimman.wordpress.com/2011/07/10/websites-29/