உங்களுக்காக ஒரு இணைய உதவியாளர்.

இன்று என்ன செய்தீர்கள் ?

இந்த கேள்வியை தான் அந்த இணையதளம் தினந்தோறும் கேட்கிறது.அந்த கேள்விக்கு பொறுப்பாக நாள் தவறாமல் பதில் அளித்தீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கையே மாறிவிட் வாய்ப்பிருக்கிறது.நீங்கள் நினைத்ததை முடிப்பவராகலாம்.

இணையதளம் கேட்கும் கேள்விகெல்லாம் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று ஆவேசபடவோ குழப்பமடையவோ வேண்டாம்.காரணம் இந்த இணையதளம் உங்கள் நலனில் அக்கறை கொண்டு தான் கேள்வி கேட்கிறது.தவிர இந்த தளத்தின் நோக்கத்தை அறிந்து கொண்டால் நீங்களும் ஆர்வத்தோடு இந்த கேள்விக்கு பதில் அளிக்கவே விரும்புவீர்கள்.

திட்டமிடல் சேவையை வழங்கும் ஐ டன் திஸ் எனும் தளம் தான் ‘இன்று என்ன செய்தீர்கள்?’ என்ற கேள்வியை உரிமையோடு கேட்கிறது.இதற்கு பதில் அளிப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை திறம்பட நிர்வகித்து கொள்ள முடியும் என்றும் சொல்கிறது.இந்த கருத்தை நீங்களும் ஏற்று கொள்வீர்கள்.

எப்படி என்றால் திட்டமிட்டு செய்லபடுவதில் உள்ள இயல்பான சிக்கலுக்கு இந்த தளம் அழகான எளிமையான தீர்வை முன்வைக்கிறது.

தினசரி வாழ்க்கையை திட்டமிட உதவும் இணைய சேவைகள் பல இருக்கின்றன.ஆனால் திட்டமிடல் என்பது பாதி கிண்று தாண்டுவது போல தான்.திட்டமிட்டதை திட்டமிட்டபடியே செய்து முடித்தால் தான் வெற்றிப்படிகளில் ஏற முடியும்.

வரிசையாக செய்ய வேண்டியவற்றை பட்டியலிட்டு அவற்றை செய்து முடிக்கும் உறுதியோ உக்கமோ இல்லாவிடில் எந்த பயனும் இல்லையே.இந்த இடத்தில் தான் அ டன் திஸ் இணையசேவை கைகொடுக்கிறது.

செய்ய நினைப்பவற்றை செய்து முடிக்க உதவுகிறது இந்த சேவை.அதிக அதிக்கம் செலுத்தாமல்,அழுத்ததையும் ஏற்படுத்தாமல் எளிமையாக இதற்கு உதவுகிறது.

இந்த தளத்தில் உறுப்பினரானதுமே உங்களுக்காக ஒரு நாட்காட்டி பக்கத்தை உருவாக்கி தருகிறது .அந்த நாட்காட்டியில் நீங்கள் குறித்து வைக்க வேண்டியதில்லை.அந்த பொருப்பை இந்த தளமே ஏற்று கொள்கிறது.உறுப்பினரானவுடன் இன்று என்னவெல்லாம் செய்தீர்கள்?என்று கேள்வியோடு ஒரு இமெயிலை எனுப்பி வைக்கும்.அன்றைய தினம் செய்ததை எல்லாம் நினைவுபடுத்தி பதில் அனுப்பி வைத்தீர்கள் என்றால் மறுநாள் உங்கள் சார்பாக நாட்காட்டியில் அந்த செயல்களை குறித்து வைக்கும்.

இப்படியாக தினமும் இமெயிலில் பதில் அளித்தீர்கள் என்றால் நாட்காட்டியில் உங்கள் செயல்கள் பதிவாகி கொண்டே இருக்கும்.

ஒரு கட்டடத்தில் திரும்பி பார்த்தீர்கள் என்றால் உங்கள் செய்லகளுகாக டைரி போல இந்த நாட்காட்டி அமைந்திருக்கும்.நீங்கள் செய்தது செய்யாதது எல்லாவற்றையும் இந்த நாட்காட்டியை பார்த்தே தெரிந்து கொள்ளலாம்.

நினைத்ததையெல்லாம் செய்து முடித்திருந்தால் இந்த நாட்காட்டி விவரங்களை பார்க்கும் போதே உற்சாகமாக இருக்கும்.இல்லை என்றால் குற்ற உணர்வு வாட்டி எடுத்து முடிக்கி விடும்.

குறிப்பிட்ட இலக்கை அடைய நினைப்பவர்களுக்கு இந்த தளம் நிச்சயம் உதவியாக இருக்கும்.

http://idonethis.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “உங்களுக்காக ஒரு இணைய உதவியாளர்.

  1. பயனுள்ள பகிர்வுக்குப்பாராட்டுக்கள்.

    Reply
  2. bsmanian

    please send me new entries ! thankyou>

    Reply
    1. cybersimman

      you can subscribe via email my friend.

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *