மதிய உணவு சார்ந்து தான்,லஞ்ச்பிரனர்,வெட்னஸ்டேஸ், என்று எத்தனை இணைய சேவைகள் உருவாகி இருக்கின்றன. அந்த வகையில் இப்போதுச்லெட்ஸ்லஞ்ச் சேவை புதிதாக அறிமுகமாகியுள்ளது.
மதிய உணவை திட்டமிட உதவும் இணையதள வகையை சேர்ந்தது என்றாலும் லெட்ஸ்லஞ்ச் சேவை பலவிதங்களில் மாறுப்பட்டது.முதலில் இந்த சேவை முழுக்க முழுக்க வர்த்தக மயமானது.அதாவது இந்த சேவையின் மூலம் மதிய உணவின் வழியே ஒருவர் வர்த்தக தொடர்புகளை தேடிக்கொள்ளலாம்.
மற்ற மதிய உணவு திட்டமிடல் தளங்கள் உணவு மூலம் நண்பர்களை தேட உதவுகின்றன .அந்த நட்பை வர்த்தக ரீதியாகவும் வளர்தெடுக்கலாம்.ஆனால் இந்த தளத்தை பொருத்தவரை வர்த்தக தொடர்பை ஏற்படுத்து கொள்வதே பிரதான நோக்கம்.எனவே இந்த தளம் ஒன் டு ஒன் சந்திப்பு என்று சொல்வது போல யாராவது ஒருவருடன் மதிய உணவு சாப்பிட ஏற்பாடு செய்து தருகிறது.
இந்த யாரோ ஒருவர்கள் உணமையில் யாரோ ஒருவர் அல்ல.வர்த்தக துறையில் தங்கள் அளவில் சிறந்து விளங்குபவர்கள்.தொழில்முனைவோர்களாகவோ,வர்த்தக பிரதிநிதிகளாகவோ இருப்பவர்கள்.
வர்த்தக உலகில் பிஸ்னஸ் லஞ்ச் என்று ஒரு கருத்தாக்கம் உண்டு.அதாவது மதிய உணவு சாப்பிட்ட படி வர்த்தக விஷயங்களை பேசி முடித்து விடுவது.சந்திப்புக்கு என்று தனியே நேரம் ஒதுக்காமல் மதிய உணவுக்கான நேரத்திலேயே பேசி முடித்து விட்டால் ஒரே நேரத்தில் இரண்டும் வேலைகளை முடித்தது போல இருக்கும்.சில நேரங்களில் மதிய உணவை சாக்கிட்டு புதிய தொடர்புகளையும் ஏற்படுத்தி கொள்ளலாம்.
லெட்ஸ்லஞ்ச் சேவை இப்படிப்பட்ட புதிய வர்த்தக தொடர்புகளை தேடித்தருகிறது.அதற்கேற்பவே மற்ற மதிய உணவு சார்ந்த தளங்கள் போல தொடர்புகளுக்கு பேஸ்புக் போன்ற நட்பு வளையங்களை நாடாமல் தொழி முரையிலான வலைப்பின்னல் சேவையான லிங்க்டுஇன் தொடர்புகளை பயன்படுத்தி கொள்கிறது.
இந்த சேவையை பயன்படுத்த விரும்பும் நபர்கள் தங்கள் லிங்க்டுஇன் கணக்கு மூலம் இதில் உறுப்பினராக சேர வேண்டும்.ஆக உறுப்பினர்கள் எந்த துரையை சேர்ந்தவர்கள்,எந்த நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள் போன்ற விக்வரங்களே முன்னிறுத்தப்படும்.
உறுப்பினரான பின் ,எந்த தேதியில் மதிய உணவுக்கு தயார் என்பதை குறிப்பிட வேண்டும்.அதன் பின் இந்த சேவை மற்ற உறுப்பினர்களின் விவரங்களை ஆய்வு செய்து அன்றைய தினம் சேர்ந்து மதிய உணவு சாப்பிட பொருத்தமானவர் யார் என்பதை பரிந்துரை செய்கிறது.சாப்பிடுவதற்கான அருகாமை ஓட்டலையும் குறிப்பிடுகிறது.
பரிந்துரை திருப்தி அளித்தால் மதிய உணவு சாப்பிட உடன்படலாம்.அநேகமாக பரிந்துரைக்கப்படும் நபர்,தொழில் ரிதீயாக பொருத்தமானவாராகவே இருப்பார் என்பதால் மதிய உணவின் போது இருவரும் பரஸ்பரம் ஆர்வம் அளிக்ககூடிய விஷயங்களை பேசிக்கொள்ளலாம்.இதன் மூலம் புதிய வர்த்தக நட்பும் சாத்தியமாகலாம்.
தொழில் முனைவோர்கள் சக தொழில் முனைவோர்களை இப்படி சந்திக்கலாம்.வர்த்தக நிறுவன அதிகாரிகள் சக அதிகாரிகளை சந்தித்து பேசலாம்.முதலீட்டுக்கான உதவியும்,தொழில் தொடர்பாஅன் ஆலொசனைகளும் கூட இந்த சந்திப்பில் கிடைக்கலாம்.வர்த்தக ரீதியிலான பல மாயங்கள் நிகழக்கூடும்.
மதிய உணவு சந்திப்பு முடிந்ததும் கைகுலுக்கி விடை பெற்ற கையோடு இந்த சந்திப்பு எப்படி இருந்தது என்று இந்த தளத்தில் கருத்து தெரிவிக்கலாம்.உணவு சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததா,உடன் சாப்பிட்ட நபர் எப்படி நடந்து கொன்டார் என்றெல்லாம் குறிப்பிடலாம்.இந்த கருத்துக்களின் அடைப்படையில் உறுப்பினர்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்.எதிர்கால சந்திப்புகளின் போது இவை கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
உறுப்பினர்களை மட்டும் அல்லாமல் மாதம் ஒரு விஐபியையும் இந்த தளத்தின் வழியே உணவுக்கு அழைக்கலாம்.
இணையதள முகவரி;http://www.letslunch.com/

0 Comments on “மதிய உணவு மூலம் வர்த்தக பாலம் வளர்க்கும் இணையதளம்.”
Pingback: உணவுக்கும் உறவுக்கும் ஒரு பேஸ்புக். « Cybersimman's Blog