ஒரு நாட்டின் அழகைப்பார்த்து ரசிப்பதற்காக சுற்றுலா பயணியாக சென்ற நேரத்தில் அந்நாட்டில் அரசியல் ரீதியாக கொந்தளிப்பான நிலை ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
கனடா நாட்டைச் சேர்ந்த வாலிபர், அலெக்ஸ் புக்பைண்டர் மியான்மர் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது, இதே போன்ற அனுபவத்தை தான் எதிர்கொள்ள நேர்ந்தது. கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவரான புக் பைண்டர் பர்மா என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட மியான்மரின் கலாச்சாரத்தை நேரில் பார்த்து விரிவான அனுபவத்தைப் பெறுவதற் காக அந்நாட்டுக்கு சென்றிருந்தார்.
.
சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரி என்று சில நாடுகளும், சில நகரங்களும் அழைக்கப்பட்டாலும் ஒவ்வொருவருக்கும் ஒரு நாட்டின் மீது மோகம் இருக்கும்.
தென்கிழக்கு ஆசியாவுக்கு இந்த ஆண்டு துவக்கத்தில் சுற்றுலா பயணியாக வந்த புக்பைண்டருக்கு மியான்மர் நாட்டின் மீது ஒரு விதமான ஆர்வமும், மோகமும் ஏற்பட்டது.
அதன் விளைவாக அவர் சமீபத்தில் மியான்மருக்கு சுற்றுலா பயணியாக சென்றார்.
மியான்மரில் அவர் சுற்றுலா பயணியாக புதுவிதமான அனுப வத்தை எதிர்பார்த்திருந்தார். ஆனால் அங்கே போராட்டம் வெடிக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற் றத்தால் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராடத்தொடங்கி, பின்னர் அந்நாட்டு மக்களால் பெரிதும் மதித்துப்போற்றப்படும் புத்தமத துறவிகள் இந்த போராட்டத்துக்கு தலைமையேற்றபோது, மியான்மர் கொந்தளித்துப்போனது.
அந்நாட்டு ராணுவ அரசு தமது இயல்புபடி இந்த போராட்டத்தை நசுக்க முயன்றது.
அதோடு, இந்த போராட்டம் பற்றி வெளியுலகுக்கு தெரியக்கூடாது என்றும் நினைத்தது.
அந்த நினைப்போடு பத்திரிகைகள் தணிக்கை செய்யப்பட்டு போராட்ட செய்திகள் முடுக்கப்பட்டன. இதனையும்மீறி அந்நாட்டில் போராட்டம் பரவியது என்றால், மக்கள் எத்தகைய மனநிலையில் இருந்து இருப்பார்கள் என்று புரிந்து கொள்ளலாம்.
இதனிடையே இன்டெர்நெட், செல்போன் மற்றும் யூடியூப் வாயிலாக உலகம் மியான்மரில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளத் தொடங்கியது. இதன் மத்தியில்தான் புக்பைண்டர் ஒரு சுற்றுலா பயணியாக மியான்மரில் உலாவிக்கொண்டிருந்தார்.
மியான்மரில் இப்படி ஒரு அனுபவத்தை சந்திக்க நேரும் என்று அவர் எதிர்பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
அதேபோல, இந்த போராட்டத்தில் தானும் பங்குபெற நேரிடும் என்றும் அவர் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அதுதான் நடந்தது. மியான்மரில் ஏற்பட்ட கொந்தளிப்பால் நாட்டைவிட்டு உடனே வெளியேறி விடுவது பாதுகாப்பானது என்று அவருக்குத் தோன்றியிருக்கலாம். அது இயல்பானதும் கூட.
இருந்தும் பிரச்சனை பூமியின் மத்தியில் இருக்கும் நிலையில் அவருக்கு ஒரு கடமை உணர்ச்சி தோன்றியது. இங்கு நடைபெறும் போராட்டத்தை வெளியுலகிற்கு உணர்த்த வேண்டியது தனது கடமை என்று அவர் நினைத்தார்.
இன்டெர்நெட் மையம் ஒன்றில் அமர்ந்து மியான்மர்நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்த போது, அந்த எண்ணம் உண்டானது. திடீரென அந்த நண்பர், நாம் கவனிக்கப்படுகிறோம் என்று எச்சரித்தார்.
இது அவரை திடுக்கிட்டுப்போகச்செய்தது. கனடா போன்ற சுதந்திரமான கலாச்சாரத்தில் வளர்ந்த அவருக்கு ஒரு இன்டெர்நெட் மையத்தில் அமர்ந்திருக்கும் தங்களை யாரோ ஏன் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் ஆட்டிப்படைத்தது. அந்த அளவுக்கு தாங்கள் என்ன குற்றம் செய்து விட்டோம் என்று நெஞ்சம் குமுறியது.
ஆனால் மியான்மரில் இதுதான் நிதர்சனம் என்ற உண்மை சுட்டெரித்தபோது, இத்தகைய அடக்குமுறையான சூழ்நிலையில் பொதுமக்களும், புத்தமத துறவிகளும் போராடிக்கொண்டிருக்கின்றனர் என்பதை அவர் வெளியுலகிற்கு தெரிவிக்க விரும்பினார்.
முதலில் அவர் தான் கண்ட காட்சிகளை நண்பர்களுடனே பகிர்ந்துகொள்ள விரும்பினார்.
புக்பைண்டர் பேஸ்புக் தலைமுறையைச் சேர்ந்தவர். கல்லூரி மாணவர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் இந்த வலைப்பின்னல் தளத்தில் அவரும் ஒரு உறுப்பினர்.
இமெயிலில் தொடங்கி கருத்துக்களை பகிர்ந்துகொள்வது வரை எல்லாமே பேஸ்புக் என்று நினைக்கும் கோடிக்கணக்கானவர் களில் அவரும் ஒருவர்.
அந்த இயல்புபடி பேஸ்புக் தளத்தில் உள்ள தனது இணைய பக்கத்தில் மியான்மரில் நடைபெறும் சம்பவங்களை பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்
—————
சுற்றுலா பயணியாக மியன்மாருக்கு போன கனடாவாலிபர் பேஸ்புக் வலைபின்னல் தளத்தின் மூலம் அங்கு பார்த்த காட்சிகளை பகிர்ந்து கொள்ள தொடங்கினார்.
பேஸ்புக்கில், ஒரு விசேஷ வசதி உண்டு. அதன் உறுப்பினர்கள், தாங்கள் முக்கியமாக கருதும் பிரச்சனைகள் குறித்து மற்றவர்களின் ஆதரவை திரண்டுவதற்கான பிரச்சாரத்தை அதன்மூலம் மேற்கொள்ளலாம். அதற்கான தனிபகுதி அதில் உண்டு. மியான்மரியில் கண்ட போராட்ட காட்சிகளை பகிர்ந்து கொள்ள துடித்த புக்பைண்டர் இந்த பகுதியின் மூலம் புதிய பிரச்சாரத்தை தொடங்கினார்.
.
மியான்மர் போராட்டத்தில் புத்தமத துறவிகளே முன்நின்றுதான் புத்தமத துறவிகளுக்கு ஆதரவு தாருங்கள் என்னும் கோரிக்கையோடு அதே பெயரில் இந்த பக்கத்தை அவர் ஏற்படுத்தினார்.
சப்போர்ட் தி மாங்ஸ் புரட்டஸ்ட் இன் பர்மா என்னும் பெயரில் அமைக்கப் பட்ட இந்த பிரச்சார பக்கத்தின் மூலம் அவர் தனது நண்பர்களின் கவனத்தை மியான்மர் போராட்டத்தின் பக்கம் ஈர்க்க விரும்பினார்.
மியான்மரிலிருந்து செய்திகளை வெளியிடுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத விஷயமாக இருந்தநிலையில், புத்தமத துறவிகள் போராடுவதற்கான அவசியத்தையும், அவர்களின் போராட்டத்தையும் தெரிவிக்கும் நோக்குடனேயே இந்த செயலில் அவர் ஈடுபட்டார். ஆனால் அவரே கூட எதிர்பார்க்காத வகையில் இந்த பக்கத்திற்கான ஆதரவு பெருகியது.
பேஸ்புக் போன்ற வலைப்பின்னல் தளங்களின் ஆதார பலம் என்னவென்றால், உறுப்பினர்கள் தங்களை கவர்ந்த விஷயங்களை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்ய முற்படுவதுதான். இப்படியாக எந்தஒரு விஷயமும் ஒருவரிடமிருந்து பலருக்கு, பலரிடமிருந்து இன்னும் பலருக்கு என பரவிவிடும் வாய்ப்பு இருக்கிறது.
மியான்மர் போராட்ட விஷயத்தில் இதுதான் நடந்தது. புக்பைண்டர் தெரிவித்த தகவல்களை படித்த அவரது நண்பர்கள் மற்றவர்களிடம் அதனை பகிர்ந்து கொண்டு, மியான்மர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டு கொண்டனர். சில நாட்களிலேயே இந்த போராட்டத்துக்கு ஆயிரக்கணக்கான நண்பர்கள் உண்டாகிவிட்டனர்.
அடுத்து வந்த நாட்களில் மேலும் பல புதிய நண்பர்கள் இந்த குழுவில் தங்களை இணைத்து கொண்டனர். விரைவில் இதன் உறுப்பினர் எண்ணிக்கை ஒருலட்சத்தை தாண்டியது. இந்த உறுப்பினர்கள் மியான்மரில் நடப்பவை பற்றி கவலை கொண்டு அங்கு ஜனநாயகம் தழைத்தோங்க வேண்டும் என்று விரும்பினர். அதற்காக தங்களால் இயன்றதை செய்யவும் தயாராக இருந்தனர்.
பேஸ்புக்கில் ஒரு விஷயம் பிரபல மானது என்றால், உலகுக்கே முரசு கொட்டி அறிவித்ததுபோலத்தான். மியான்மரில் ராணுவ கட்டுப்பாட்டை மீறி இன்டெர்நெட் மூலம் போராட்ட செய்திகள் கசிந்து கொண்டிருந்த நிலையில், பேஸ்புக் மூலம் பதிவு செய்யப்பட்ட இந்த நேரடி அனுபவம், உலகின் கவனத்தை ஈர்த்தது.
ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட பலர் மியன்மரியில் நடப்பதை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டியதோடு, அந்த போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிக்க முன்வந்தனர். போராட்டத்தை நசுக்கிவிடலாம் என நினைத்த மியான்மர் ராணுவ அரசின் எண்ணத்துக்கு சவால்விடும் வகையில் இந்த முயற்சி அமைந்தது.
மியான்மரிலிருந்து வெளியேறி, கனடாவுக்கு திரும்பிவிட்ட நிலையிலும், புக்பைண்டர் இந்த பிரச்சார பக்கத்தை தொடர்ந்து பராமரித்து வருகிறார். தன்னுடைய கல்லூரி படிப்பை பாதிக்காத வகையில் இதனை தொடரப்போவதாக அவர் கூறுகிறார்.
நண்பர்களோடு மியான்மரில் கண்டவற்றை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்னும் உணர்வோடுதான் இந்த முயற்சியில் ஈடுபட்டதாகவும், ஆனால் தானே எதிர்பார்க்காத வகையில் இதுஒரு போராட்ட ஆயுதமாக உருவாகியிருப்பதாகவும் அவர் மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறார்.
இவர் மட்டுமல்ல மேலும் பல பேஸ்புக் உறுப்பினர்கள் இந்த தளத்தின் மூலம் மியான்மர் செய்திகளை வெளியிட்டு அந்த போராட்டத்திற்கான ஆதரவை சர்வதேச அளவில் திரட்ட முற்பட்டு வருகின்றனர்.
ஒரு உறுப்பினர் ஐ.நா. சபையை நோக்கி இணையவாசிகளின் பேரணியை நடத்த விரும்புவதாக கூறியுள்ளார். வலைப்பின்னல் தள யுகத்தில் பேஸ்புக் முதல் முறையாக ஒரு போராட்ட ஆயுதமாக உருவாகியிருக்கிறது.
——————
(2007 ம் ஆண்டில் மியான்ம்ர் நாட்டில் துறவிகளீன் போராட்டம் வெடித்த போது இதனை எழுதினென். இன்டெர்நெட் எப்படி போரட்டக்கருவியாக பயன்படும் என்பதற்கான உதாரணம் இது. இலங்கைக்காகவும் இப்போது ஒரு பேஸ்புக் பக்கம் அமைக்கப்பட்டுள்ளது.அதன் முகவரி ;
link;
http://www.facebook.com/group.php?gid=44298440269
———-
( இந்த இணைப்பில் சிக்கல் உள்ளது. தயுவு செய்து கூகுல் தேடல் மூலம் அணுகவும். இந்த இணைப்பை டைப் செய்து தேடவும்)

0 Comments on “இலங்கைக்காக பேஸ்புக் போராட்டம்”
tangam
very true. we will try the same for Sri Lanka too.
Surya
கேட்கவே ஆச்சரிய்மாய் இருக்கு..