எங்கேயும் எப்போதும் இணையதளம்.

ரோம் இத்தாலியின் தலைநகரம்.ரியோ என்று செல்லாமாக குறிப்பிடப்படும் ரியோ டி ஜெனிரோ நகரம் கால்பந்து பூமியான பிரேசிலில் இருக்கிறது.இந்த இரண்டையும் இணைத்து ரோம் டூ ரியோ எனும் பெயரில் அழகான இணையதளம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

ரோமுக்கும் ரியோவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வியை இந்த தளம் எழுப்பினாலும் அதன் உள்ளே நுழையும் போதே அசத்தி விடுகிறது.அப்ப‌டியே ரோமுக்கும் ரியோவுக்கும் உள்ள உறவும் புரிந்து விடுகிறது.அதாவது ரோமில் இருந்து ரியோவுக்கு எப்படி செல்லலாம் என்று இந்த தளம் வழிகாட்டுகிறது.

ரோமிலிருந்து ரியோவுக்கு செல்ல வழிகாட்ட மட்டும் ஒரு இணையதளமா ,இந்த இரு நகரங்களும் என்ன அத்தனை சிறப்பு வாய்ந்த நகரங்களா என்று கேட்கலாம்.விஷ‌யம் என்ன‌வென்றால் ,ரோமும் ரியோவும் ஒரு குறியீடு அவ்வளவு தான்!உண்மையில் இந்த தளம் எந்த நகரில் இருந்தும் இன்னொரு நகருக்கு செல்வத‌ற்கான வழி காட்டுகிறது.

உலகின் எந்த மூளையில் உள்ள இடத்தில் இருந்தும் உலகின் வேறொரு மூளையில் இருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கான மார்கத்தை இந்த தளம் காட்டுகிறது.

எந்த நகருக்கு செல்வதாக இருந்தாலும் செல்ல விரும்பும் நகருக்கு எந்த வழியாக செல்லலாம் என்பதை இந்த தளத்தின் மூலம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

இணைய யுகத்தில் இதென்ன பெரிய சேவையா,இண்டெர்நெட்டில் குறிப்பிட்ட ந‌கரின் பெயரை சொல்லு தேடினால் அந்நகருக்கான விமான‌ வழித்தடங்கள் காட்டப்படுமே,அதோடு விமான சேவை நிறுவங்களின் கட்டணங்களையும் ஒப்பிட்டு பார்த்து மலிவானதை தேர்வு செய்து இணையம் வழியே முன்பதிவும் செய்து கொள்ளலாமே என்று கேட்கலாம்.

உண்மை தான்.உலக நகரங்களுக்கான விமான வழித்தடங்களை தேடுவது மிகவும் சுலப‌மானது தான்.ஆனால் ரோம் டு ரியோ இணையதளம் வெறும் விமான வழித்தடங்களை மட்டும் காட்டுவதில்லை.அது ஒரு நகருக்கு செல்வதற்கான மிகச்சிறந்த‌ மார்கத்தை காட்டுகிற‌து.

மிகச்சிற‌ந்த மார்கம் என்றால் விமானம் வழி செல்லாலாமா அல்லது ரெயில் ,பஸ் போன்றவை வழியே செல்லலாமா என்று இந்த தளம் காட்டுகிற‌து.நீர்வழி போக்கு வரத்து உள்ள இடங்கள் என்றால் படகு வழியே செல்லக்கூடிய பாதைகளையும் காட்டுகிற‌து.இது தான் இந்த தளத்தின் சிறப்பம்சம்.

பயணம் என்றாலே விமானம் மூலமாக தான் இருக்க வேண்டும் என்றில்லை.இந்தியா சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ரெயில் சேவை சிற‌ந்தது.ஜப்பான் பொன்ற நாடுகளில் புல்லட் ரெயிலில் பயணிகலாம்.சில நாடுகளில் படகு மற்றும் சிறு கப்பல் போக்குவரத்து விஷேசமானதாக இருக்கும்.

இந்த பகுதியில் உள்ள நகரங்களுக்கு விமானத்தில் செல்வதை காட்டிலும் அங்கு பிரபலமாக உள்ள மார்கத்தில் செல்வது இரண்டு விதங்களில் அணுகூலமானது.ஒன்று இந்த மார்கம் செலவு குறைந்ததாக இருக்கலாம்.மற்றொன்று உள்ளுரின் போக்குவரத்து சிறப்பை அனுபவித்து மகிழலாம்.

உதாரணத்திற்கு இந்தியாவில் கேராளவிலோ மேற்கு வங்களாத்திலோ பயனம் செய்ய படகு மார்கம் சிற‌ந்த வழி.கேராளாவின் நீர்வழிகளில் படகில் செல்லும் போது இயற்கை எழிலை ரசித்து மகிழலாம்.

இப்படி ஒரு நகருக்கு செல்வதற்கான பொருத்தமான மார்கத்தை இந்த தளம் சுட்டிக்காட்டுகிற‌து.

எந்த நகரில் இருந்து எந்த நகருக்கு செல்கிறோமே அந்த நகரங்களின் பெய்ரை குறிப்பிட்டால் அழகான அதறகான் மார்கத்தை கூகுல் வரைபடத்தின் மீது காண்பித்து விடுகிற‌து.

http://www.rome2rio.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “எங்கேயும் எப்போதும் இணையதளம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *