ரேட்டிங்கை நம்பி எல்லாம் எந்த படத்தையும் பார்த்துவிட முடியாது என்றாலும் புதிய படத்திற்கான அளவுகோளாக ரேட்டிங்கையும் கருத்தில் கொள்ள தான் வேண்டியிருக்கிறது.என்ன பல நேரங்களில் ரேட்டிங்கில் முதலிடம் பெறும் பெரும் ஏமாற்றத்தையும் தந்து வெறுப்பேற்றலாம்.
இப்படி ஏமாற கூடாது என நினைப்பவர்கள் டிவிட்பிலிக்ஸ் தளத்தின் ரேட்டிங்கை முயற்சி செய்து பார்க்கலாம்.
திரைப்பட ரேட்டிங் தளம் என்றாலும் இன்னொரு டாப் டென் பட்டியல் தளம் இல்லை இது.மாறாக புதிதாக வெளியாகும் ஒவ்வொரு படத்திற்குமான ரசிகர்களின் ரேட்டிங்கை வழங்கும் தளம்.
ரசிகர்களின் ரேட்டிங் என்றால் டிவிட்டரில் திரைப்படம் தொடர்பாக ரசிகர்கள் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்களின் அடிப்படையிலான மதிப்பீடு.
புதிய படங்களை பார்த்ததுமே அது பற்றிய கருத்தை குறும்பதிவாக தட்டிவிடும் பழக்கம் ரசிகர்கள் மத்தியில் உருவாகி விட்டது.பல படங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க கூடிய அளவுக்கும் இவை இருப்பதுண்டு.
டிவிட்டரில் பகிரப்படும் கருத்துக்களின் அடிப்படையில் திரைப்படங்களை மதிப்பிட உதவும் தளங்களும் பல இருக்கின்றன.டிவிட்பிலிக்ஸ் தளமும் இந்த ரகத்தை சேர்ந்தது தான்.
ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக படங்களுக்கான ரேட்டிங்கை டிவிட்டர் கருத்துக்கள் அடைப்படையில் முன் வைக்கிறது.அதாவது ஒரு படத்தை ரசிகர்கள் எந்த அளவுக்கு விரும்புகின்றனர் என்பதை மதிப்பிட்டு சொல்கிறது.
முகப்பு பக்கத்தில் இடம் பெற்றுள்ள படங்களுக்கான போஸ்டரில் கிளிக் செய்தால் அந்த படத்திற்கான டிவிட்டர் மதிப்பீடு சதவீததில் காட்டப்படுகிறது.அப்படியே படம் வெளியான காலம்,மற்றும் அதன் நீளம் ஆகிய விவரமும் கொடுக்கப்பட்டுள்ளது.கூடவே அந்த படம் தொடர்பான டிவிட்டர் செய்திகளின் எண்ணிக்கை மற்றும் அன்றைய தினத்தில் எத்தனை டிவிட்டர் பதிவுகள் என்னும் தகவலும் இடம் பெறுகிறது.
அதன் கீழே படத்தை பிடிச்சிருக்கு என்று சொன்னவர்களின் டிவிட்டர் பதிவுகளும் அருகிலேயே எனக்கு பிடிக்கவில்லை என்று சொனனவர்களின் கருத்துக்களும் வரிசையாக தோன்றுகின்றன.
படங்களின் ரேட்டிங் கைகொடுக்கிறதோ இல்லையோ இந்த எதிரும் புதிருமான டிவிட்டர் பதிவுகளை படித்து பார்த்தால் படத்தில் எதை ரசிக்கலாம்,என்ன எதிர்பார்க்கலாம் என்ற தெளிவு ஏற்படும்.அந்த புரிதலோடு தியேட்டருக்கு போகலாம்.
நிச்சயம் ஹாலிவுட் பட பிரியர்களுக்கு வரப்பிரசதம் இந்த தளம்.சரி கோலிவுட் பிரியர்களுக்கு?
இணையதள முகவரி:http://www.twitflicks.com/

0 Comments on “திரைப்படங்களுக்கான டிவிட்டர் ரேட்டிங்.”
Ravindarz Collections
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html