லிஸ்ட்சர்ச் புதியதொரு தேடியந்திரமே தவிர பெரிய தேடியந்திரம் என்று சொல்ல முடியாது.இதனிடம் புதிய தொழில்நுட்பமும் கிடையாது.
கூகுலை அண்டி பிழைக்கும் மற்றொரு தேடியந்திரம் தான் லிஸ்ட்சர்ச் என்றாலும் கூகுலில் முடியாததை கூகுலை கொண்டே தேடிக்கொள்ள உதவுகிறது.
அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பதங்களை கொண்டு தேட உதவுகிறது.
இதற்காக என்றே லிஸ்ட்சர்ச் தேடல் கட்டம் சற்று பெரிதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.அதில் எந்த எந்த தலைப்புகளில் தேட விருப்பமோ அவற்றுக்கான குறிச்சொற்களை டைப் செய்து விட்டு தேடு என கட்டளையிட்டால் அததனை சொற்களுக்குமான தேடல் பக்கத்தை கொண்டு வந்து காட்டுகிறது.
ஒவ்வொரு குறிச்சொல்லாக கிளிக் செய்தால் அதற்கான தேடல் பக்கம் வருகிறது.அல்லது அருகே உள்ள மொத்த முடிவுக்கான பகுதியை கிளிக் செய்தால் எல்லா பக்கங்களும் வரிசையாக தனித்தனியே வந்து நிற்கிறது.
ஒரே நேரத்தில் பல குறிச்சொற்களை தேட வேண்டிய தேவை ஏற்பட்டால் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.
கூகுலிலேயே கூட ஒவ்வொரு குறிச்சொல்லாக தேடிக்கொள்ளலாம்,அல்லது மூன்று நான்கு கூகுல பக்கங்களை திறந்து வைத்து கொண்டு தேடலாம் தான்.
ஆனால் அந்த செய்லை சுலபமாக்கி தருகிறது இந்த தேடியந்திரம்.ஒரே இடத்தில் ஒரே கிளிக்கில் பல பதங்களை தேட முடிவது பயனுள்ளது தானே.
அதை தான் லிஸ்ட்சர்ச் செய்கிறது.
கூகுல் சார்ந்த புத்திசாலித்தனமான சேவை .கூகுலை வைத்து எப்படி எல்லாம் பிழைக்கலாம் பாருங்கள்!
தேடியந்திர முகவரி;http://listsear.ch/#list

0 Comments on “இது துக்கடா தேடியந்திரம்.”
Pingback: வியப்பில் ஆழ்த்தும் புதிய தேடியந்திரம். « Cybersimman's Blog