வலைப்பதிவு செய்வதை ஊதியம் இல்லாத வேலை போலவே மிகுந்த ஈடுபாட்டோடு செய்து வருகிறேன்.இணையத்தில் உள்ள நல்ல விஷயங்களையும் டொழில்நுட்ப அற்புதங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே இந்த வலைப்பதிவிற்கான தூண்டுதல்.
இந்த பதிவுகள் பலரால் படிக்கப்படுகிறது.பலரால் பகிர்ந்து கொள்ளவும் படுகிறது.உரிய இணைப்போடு பகிர்ந்து கொள்ளும் நல்லிதயங்களுக்கு நன்றி.எனது பதிவுகள் திருடப்படவும் செய்கின்றன.திருட்டு என்ன்னும் வார்த்தையை பயன்படுத்த தயக்கமாக தான் இருக்கிறது என்றாலும் அப்படியெ நகலெடுக்கப்படுவது போல பதிவுகள் வேறு தளங்களில் பயன்படுத்தப்படுவதை பார்க்கும் போது அதிர்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது.
இப்படி பல வலைப்பதிவுகளில் எனது பதிவுகள் நகலெடுக்கப்பட்டிருப்பதை தொடர்ந்து காணும் போது இது பற்றி கவலைப்படுவதையே விட்டு விட்டேன்.
எனது பதிவுகளை பிற தளங்களில் காணும் போதெல்லாம் லேசான புன்னகையும் எழுதியவரின் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாமே என்ற எண்ணமே ஏற்படுகிறது.
இப்போதெல்லாம் பதிவுகள் நகலெடுக்கப்படுவது பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதில்லை.தடுப்பதற்கான வழி இல்லை என்பதும் ஒரு காரணம்.
ஆனாலும் கூட ஒரு சில இணையதளங்களில் இந்த நகலெடுப்பு பணி தொடர்ந்து நடைபெறும் போது கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
குறிப்பாக அழகன்குளம் என்னும் இணையதளத்தில் எனது பதிவுகள் வெப்கைடு என்னும் பகுதியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறது.எனது வலைப்பதிவில் கூட பார்க்க முடியாத வகையில் வரிசையாக எனது பதிவுகள் இங்கு பட்டியலிடப்பட்டிருக்கிறது.நான் தரும் எனது தள இனைப்புகள் கூட அப்படியே இருக்கின்றன.
இந்த சோதனையை எங்கு போய் முறையிடுவது?
பதிவுகள் அனுமதி இல்லாமல் கையாளப்படுவது ஒரு புறம் இருக்கட்டும் யாரேனும் முதலில் இந்த நகலை பார்த்துவிட்டு மூலத்தை உருவாக்கிய நான் நகலெடுத்திருக்கிறேன் என்று நினைதால் படைப்பாளியாக அதைவிட என்ன பெரிய தீங்கு இருக்க முடியும்?
எனவே அழகன்குளம் தளத்தின் நிர்வாகிகளுக்கு எனது அன்பான வேண்டுகோள் தயவு செய்து இந்த நகலெடுப்பை நிறுத்தி கொள்ளுங்கள்.அல்லது குறைந்த பட்சம் அதனை ஆக்கியவரின் பெயரையேனும் குறிப்பிடுங்கள்.
வலைப்பதிவர்கள் தங்கள் படைப்புகள் எடுத்தாளப்படும் போது அதற்கான பொருளாதார மதிப்பை கூட எதிர்பார்ப்பதில்லை.அந்த பதிவு யாருக்கு உரியது என்பதை நன்றியோடு குறிப்பிட வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றனர்.இந்த குறைந்த பட்ச நியாயத்தை கூட தர முடியாவிட்டால் எப்படி?
எனவே பதிவுகள் கையாள்பவர்கள் தயவு செய்து அதன் மூலத்தை அங்கீகரியுங்கள்.
எனது பதிவுகள் ஆர்வத்தோடு படித்து வருபவர்களும் இது தொடர்பாக குரல் கொடுத்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.
அன்புடன் சிம்மன்.
——
http://alagankulam.in/Table/website-guide/Page-3.html
———–
http://alagankulam.in/Table/website-guide/Page-6.html
————-

0 Comments on “அழகன்குளத்திற்கு ஒரு வேண்டுகோள்!”
winmani
நண்பருக்கு ,
சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வோம், நம்முடைய முழு ஆதரவும் உங்களுக்கு உண்டு.
cybersimman
ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே.
manimarang
திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது…
நீங்க கவலை படாதிங்க..
cybersimman
நன்றி நண்பரே.
gunamanohar
this post also algankulam website sir.
neechalkaran
வருத்தமான செய்தி. அத்தளத்தின் எல்லாப் பக்கமும் காப்புரிமை மீறிய செய்திகளையே கொண்டுள்ளது.
நல்லவேளை இந்தப்பதிவையும் எடுத்து மறுபதிப்பு செய்யவில்லை
marianorubharajan
NEECHALKARAN – ஏன் ஐயா எழுதவில்லை! இப்போதுதான் அழகன்குளம் போய் பார்த்தேன். இந்த பதிவையும் பகிர்ந்திருக்கிறார்கள். சென்று பாருங்கள்.
பழக்க தோஷம் போலும். என்ன பதிவு வருகிறது என்று பார்ப்பதில்லை. என்ன பதிவென்றாலும் அதை மறுபதிப்பு செய்கிறார்கள். இருந்தாலும் நம் சிம்மனின் பெயரோடு கூட போடாதது வருத்தமளிக்கிறது.
cybersimman
தமிழ் பதிவர்களுக்கு தான் எத்தனை சோதனை.
HOTLINKSIN.COM
இணையதளத்தில் திருட்டை தடுக்க முடியாது…. எப்படி தடை போட்டாலும்… திருடுபவர்கள் திருடிக் கொண்டுதான் இருப்பார்கள்… ஆனால் அப்படி திருடி வெளியிடும் போது Source இணையதளத்தின் பெயரை குறிப்பிட்டால் அல்லது லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும். பரிட்சையில் பிட் அடித்து சிலர் பாஸ் பண்ணுவார்கள் அல்லவா அப்படித்தான் இருக்கிறது இந்த கதையும்…
HOTLINKSIN.COM
இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.
LKG (@chinnapiyan)
மிகவும் வருந்துகிறேன். நல்லதொரு பெற்றோர்களுக்கு பிறந்தவர்கலென்றால், உடனே வருத்தம் தெரிவித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க்கவேண்டும். இது ரொம்ப அசிங்கம் அட்த்தவரின் உழைப்பை பயன்படுத்திக்கொள்வது.
muthu kumar
http://bit.ly/JyXxUS – இதுதான் ஈ அடிச்சான் காப்பி
perumalrajdpr
நண்பர்களே! மிகவும் பகிரங்கமான திருட்டு இது. என்ன காளித்தனம்! இந்தப் பதிவையே கூட மறுபதிவு செய்திருக்கிறார்கள். அவசியம் அவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும். தனது எதிர்ப்பைக் கூட நாகரிகமாக வெளியிட்ட சிம்மனுக்கு நமது பாராட்டுகள். நண்பர்கள் அழகன்குளத்திலும் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்யலாமே.!.
cybersimman
ஆதர்வான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி நண்பரே.இந்த அறிவுத்திருட்டை தடுக்க வழி தான் தெரியவில்லை.
அன்புடன் சிம்மன்