கூகுலுக்கு டாக்டர் பட்டம்

1gகூகுலை எப்போதாவது திருவாளர் கூகுல் என்று அழைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறீர்களா? தேடல் உலகில் சரியான பாதை காட்டி தேவையான தகவல்களை எடுத்துக் கொடுத்து வழி காட்டும் ஆற்றலுக்காக கூகுலை மதிப்பும் மரியாதையோடும் திருவாளர் கூகுல் என்று அழைக்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழி கொண்ட மக்கள் தலைவர்களைப் போல, தேடியந்திர முதல்வனான கூகுலுக்கும், ஒரு அடைமொழி உரித்தானதாக இருக்கிறது. ஆகவே, திருவாளர் கூகுலை டாக்டர் கூகுல் என்றும் அழைக்கலாம்!

டாக்டர் கூகுல் என்றவுடன், கூகுலுக்கு அமெரிக்க பல்கலைக் கழகம் ஒன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி விட்டதோ என்று நினைக்க வேண்டாம். தேடல் கலையை எளிமையாக்கி செழுமைப் படுத்திய தற்காக, கூகு லுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கு வது கூட பொருத்த மாகவே இருக்கும். ஆனாலும், டாக்டர் அடை மொழி கூகுலு டன் தானாக ஒட்டிக் கொண்டது.

இணையவாசிகள், அதனை பயன் படுத்தும் விதத்தால் கிடைத்த பட்டம் இது. எதற்கெடுத்தாலும் கூகுல் செய்வது என்பது 21ம் நூற்றாண்டின் வழக்க மாக இருக்கிறது. வேலைக்கு ஆள் தேட வேண்டும். விண்ணப்பித்த வர்களின் தகுதி பற்றி முதலில் கூகுல் செய்து பார்த்துவிடுங் கள். திருமணத் திற்கு பொருத்தம் பார்க்க வேண்டுமா, பரிசீலிக்கப்படும் நபரின் யோக்கிய தையை கூகுல் மூலம் எடைபோட்டு பார்த்து விடலாம்.

சுற்றுலா பயணம் செல்கிறீர்களா, அந்த ஊர் பற்றிய ஜாதகத்தை கூகுல் வழியே தெரிந்து கொண்டுவிடலாமே!

இந்த வரிசையில், கால்வலியோ, கழுத்துவலியோ, டாக்டரை பார்க்கச் செல்வதற்கு முன், மருந்து கடைக்குச் சென்று சுயமாகவே மாத்திரை வாங்கி போட்டுக் கொள்வதற்கு முன், கூகுலுக்கு ஒரு விசிட் அடித்து விடலாம் என்று பலரும் நினைக்கின்ற னர். அதிலும் குறிப்பாக நெட்டோடு பிறந்து வளர்ந்த புதிய தலைமுறை பிள்ளைகள், கொஞ்சம் காய்ச்சல் இருப்பதுபோல தோன்றினாலும் கூட உடனே கூகுல் பக்கம் சென்று விடுகின்றனர்.

கூகுலில் தகவல்களை தேடுவது சுலபமானது மற்றும் எது பற்றியும் விவரங்களை சேகரித்து விட முடியும் என்பதால், தங்கள் உடலில் தோன்றும் நோய் அறிகுறிகளை கூகுலில் டைப் செய்து, அவற்றுக்கு கூகுல் தரும் முடிவுகளை அலசிப்பார்த்து, வந்திருப் பது என்ன நோய்? அதற்கான சிகிச்சை என்ன? போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளும் பழக்கம் சர்வ சகஜமாக இருக்கிறது.

அம்மாவின் கையை நெற்றியில் வைத்துக் காட்டி, காய்ச்சல் இருக்கி றது, ஸ்கூலுக்கு லீவு போடட்டுமா? என்று பையனோ, பெண்ணோ கெஞ்சு வதெல்லாம் அந்தக்காலம். இன்றைய பிள்ளைகளே, நோய் விவரமாக, கூகுலில் தேடிப்பார்த்த தெம்போடு(!), எனக்கு வந்திருப்பது ஃபுளு காய்ச்சல், இதற்கு ஆண்டி பயாட்டிக் மற்றும் குறிப்பிட்ட மாத்திரையை விழுங்கி விட்டு 2 நாள் ஓய்வில் இருக்க வேண் டும் என்று அடித்துப் பேசுகின்றன.

கூகுல் டாக்டரை பார்த்து விட்டு வந்திருக்கும் பிள்ளைகளிடம், இது வெறும் உடல் சூடுதான், பேசாமல் ஸ்கூலுக்கு போ, என்று அதட்டிச் சொல்வது பெற்றோர்களுக்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. பெரிய வர்கள் மத்தியிலும் கூட பீஸ் வாங்காத டாக்டரான கூகுலிடம் சென்று, தங்கள் உடல்நிலை பற்றிய விவரங்களை குறிப்பிட்டு சிகிச்சை தேவையா? ஆம் என்றால் என்ன சிகிச்சை? என்பது வரை முடிவு செய்யும் பழக்கம் வந்து விட்டது.

மருத்துவ நூல்கள் மற்றும் கட்டுரை களை பார்த்துப் பார்த்து சுய வைத்தியம் பார்த்துக் கொள்ளும் வழக்கம் பலரிடம் உண்டு என்றாலும் கூகுல் அதனை மேலும் பரவலாக்கி இருக்கிறது என்பதே விஷயம்.

உடல் நலக்குறைவு தொடர்பான சந்தேகம் எதுவாக இருந்தாலும், அது தொடர்பான, மருத்துவ கட்டுரை மற்றும் தகவல்களை கூகுல் உபயத் தால் உடனே பெற்று விட முடிகிறது. எனவே பலருக்கு கூகுல் வெறும் தேடியந்திரம் மட்டும் அல்ல, அது குடும்ப டாக்டரும் கூட தான்!

இந்த பழக்கம் உள்ளபடியே மருத்துவ உலகை கலக்கமடையச் செய்துள்ளது. டாக்டர் கூகுல், தங்கள் தொழிலுக்கு போட்டியாக வந்திருக்கி றாரே என்ற கலக்கம் அல்ல! டாக்டர் கூகுல் தரும் தகவல்களை, திருவாளர் நோயாளிகள் தவறாக புரிந்து கொண்டு விடக்கூடாதே என்னும் கவலை.

நோயாளிகள் உடல்நலக் குறைவு தொடர்பான விவரங்களை தெரிந்து கொள்வதில் தவறில்லை. சொல்லப் போனால், விஷயம் அறிந்தவர்களாக நோயாளிகள் இருப்பது நல்லதே என்று டாக்டர்கள் நினைக்கின்றனர். ஆனால், இந்த விஷயஞானம் எல்லை தாண் டாமல் இருக்க வேண்டும் என்றே டாக்டர்கள் நினைக்கின்றனர். அலைச்சலும், கோடை வெப்பமும் சேர்ந்து கொண்டு வந்த தலை வலியை, காய்ச்சல் தலைவலியாக நினைத்து, மாத்திரை வாங்கி விழுங்குவது சரியல்ல என்கின்றனர். கூகுலில் விவரங்களை தெரிந்து கொள்வது சரிதான், ஆனால் அவற்றை பகுத்துணர டாக்டரின் உதவியை நாடுவதே

உசிதமானது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

ஆகவே, பல இணையதளங்களில் தவறான தகவல்கள் இடம் பெற்று இருக்கின்றன என்பதையம் நினைவு படுத்துகின்றனர். எனவே, கூடுமான வரை அதிகாரப் பூர்வமான மருத்துவ தளங்களில் தகவல்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர்.

எதற்கும் கூகுலை பயன்படுத்திக் கொண்டால் போச்சு!

—————-

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலுக்கு டாக்டர் பட்டம்

  1. Kelvi.Net

    உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

    கேள்வி. நெட்

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *