பாடல்களை பகிர ஒரு இணையதளம்.

சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது.

அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் ஷேர் இணையதளம்.நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் சுலபமாக பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது.

பாடல்களை பகிர்வது மிகவும் எளிதானதே.பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மூலம் இந்த தளத்தி நுழைய வேண்டும்.அதன் பிறகு தளத்தில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ள பாடல்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அல்லது பிடித்தமான பாடலை தேடிப்பார்த்து தேர்வு செய்து கொள்ளலாம்.

அதன் பிறகு அந்த பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் அந்த பாடலை பகிர்ந்து கொள்ளலாம்.பாடலை பகிர்ந்து கொள்வதற்கான காரணத்தை சிறு குறிப்பாகவும் இணைக்கலாம்.நண்பர்களும் பாடல்களை கேட்டு விட்டு தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்.பாடலுக்கு வாக்களிக்கலாம்.

பாடல்களுக்கான வாக்குகளின் அடிப்படையில் பாடல்கள் முகப்பு பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன.பாடல்களை கேட்ட பின் அவற்றை இணைய சேவைகள் மூலம் வாங்கி கொள்ளும் வசதியும் உள்ளது.

ஆக உங்கள் நண்பர்கள் யாரேனும் இந்த தளத்தை பயன்படுத்தினால் அவர்கள் வாயிலாக நீங்களும் கூட அழகான பாடல்களை பேஸ்புக் வழியே எதிர் கொள்ளலாம்.

பிரதானமாக மேற்கத்திய பாடல்களுக்கான சேவை என்றாலும் நம்மூர் பாடல்களும் வந்து நிற்கின்றன.இளையராஜா என்று டைப் செய்தாலும் பாட‌ல்கள் அந்து நிற்பது மெலிதான ஆச்சர்யம்.ஆனால் ராஜாவின் சூப்பர் டூப்பர் பாட்ல்களுக்கு பதிலாக ஏனோதானோவென்று பாடல்களின் பட்டியல் தோன்றுப்வது கொஞ்ம் ஏமாற்றம் தான்.

இருப்பினும் தமிழ் பாடல்களையும் தேடிததருவதற்காக சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம்.

பகிர்வதற்கான தளம் என்றாலும் புதிய பாடல்களை அறிமுகம் செய்து கொள்வதற்கான சேவையாகவும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம்.

இணையதள முகவரி;http://www.songshare.fm/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பாடல்களை பகிர ஒரு இணையதளம்.

  1. meha nathan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *